முதலீடுகள் Chicago, Illinois, USA 63-0803B 1நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கின்றதான வேளையில், அவரோடு பேசும்படியாய் ஒரு சில நிமிடம் நின்றவாறு இருக்கலாம். எங்கள் பரலோகப் பிதாவே, இந்த சிகாகோ பட்டணத்திற்கு சுவிசேஷத்தை சமர்ப்பிக்கும்படி, மீண்டும் ஒரு முறை இங்கு வரும்படியான நேரத்தை நீர் கொடுத்தமைக்காக உண்மையாகவே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏனெனில் சிக்காகோ மக்கள் இரட்சிக்கப்படுவதை காணவேண்டும் என்பதே இங்குள்ள கிறிஸ்தவர்களுடைய உள்ளத்தில் இருக்கிறது. மேலும் பிதாவே, நீர் எந்த ஒரு மனிதனையும் முதலாவது இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் உம்மிடத்தில் வரான் என்று இயேசு சொன்னதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இப்பொழுது இந்த பட்டணத்தில் இருக்கின்ற முன் குறிக்கப்பட்ட வித்து ஒவ்வொன்றும், இச்சுவிசேஷத்தின் வெளிச்சத்தை பெறக் கூடாதபடி, அவைகளை எதினாலும் தடுக்க முடியாது என்று விசுவாசிக்கிறோம். நீர் அதை எங்களுக்கு அருள்வீராக ஆண்டவரே. அவைகளிடம் இது சென்றடைகிறதை உறுதிப்படுத்தும்படி நீர் கவனிப்பீராக. நீர் இந்த செய்தியைக் கொடுப்பீராக. மற்றும் இச்சுவிசேஷத்தின் வெளிச்சத்தை எது (யார்) காண வேண்டும் என்று நீர் நியமித்தீரோ அவைகளைக் கொண்டுவர உம்மால் கூடும் என்று விசுவாசிக்கிறோம். ஆகவே பிதாவே, நாங்கள் எங்களுடைய வெளிச்சத்தை பிரகாசித்து எங்களுக்குத் தெரிந்தவகையில் இந்த மகத்தான மாலை நேர சுவிசேஷத்தை கொண்டுவரும்படி எங்களுடைய முயற்சிகளை முன் வைக்கிறோம். ஆனால் பாவத்தின் அலைகள் உண்மையிலே பாய்ந்து வருகிறது. அவிசுவாசம் எப்பக்கத்திலும் இருக்கிறது. ஓ, அநேக வித கொடூரமான காரியங்கள் எங்களை நேருக்கு நேர் சந்திக்கிறது. ஆனால் எங்களுக்கு ஒரு நிச்சயம் உண்டு. 'வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு விரோதமாய் தரத்தை உயர்த்துவார்“ என்று நீர் எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர் பிதாவே. அதற்காக உமக்கு நன்றிசெலுத்துகிறோம். இப்பொழுது, நாங்கள் நிலைவரப்படுகிற வேளையில் எங்களுக்கு இந்நாளில் உதவி செய்வீராக. இங்கே அருமையான பாடல்கள் மற்றும் சாட்சிகள் மூலம், இன்னும் நடந்த யாவற்றின் மூலமும், நீர் கொடுத்த இந்த காலை வேளையின் யூபிலிக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பொழுது இந்நாளுக்குரிய பெலனைப் பெற்றுக் கொள்ளும்படி நாங்கள் தாமே உம்முடைய வார்த்தையை நோக்கிப் பார்ப்போமாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம்.ஆமென். 2நீங்கள் அமரலாம். நான் வந்து உங்களோடு இருக்கும்படி நீங்கள் எனக்கு கொடுத்த அருமையான அன்பின் அழைப்பிற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பொழுது இங்கே பாடல் பாடின சிறிய பெண்மணிக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். அந்த பாடல் மிக அருமையாய் இருந்தது. அவர்கள் பாடுகிறதை இதுவே முதல் முறை கேட்கிறேன் என நினைக்கிறேன். அங்கே நம்முடைய சகோதரன் மெல் ஜான்சனும் இருக்கிறார். அவரிடம் 'என்னை நினைவு கூறும்“ என்ற பாடலை பாடும்படி கேட்டுக் கொண்டேன். இந்த பாடலை எங்களுடைய வீட்டிலே கொண்டிருக்கிறேன். இன்னொரு விசை அதை கேட்ட விரும்புகிறேன். இந்தப் பாடல்களைச் சார்ந்து பில்லி பால் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என நினைக்கிறேன். அவன் அலுவலகத்தில் இருக்கும் போது, உலகம் முழுவதிலுமிருந்து வந்து போகிற மக்களுக்கு இந்த பாடல்களை தொடர்ந்து போடுவான். அந்த அலுவலகத்திற்கு நீங்கள் வருவீர்களானால், நாடாவிலே மெல் ஜான்சன் பாடுகிறதை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். நானும் எப்பொழுதெல்லாம் விடாய்த்து களைத்து போகிறேனோ, உடனே போய் அறையிலே எங்கேயாவது ஒரு இடத்தில் அமர்ந்து, ஒலி பெருக்கி ஒன்றை கொண்டு வந்து திரும்பவும் அந்த பாடல்களைக் கேட்பேன். 3ஆகவே இப்படிப்பட்ட பாடகர்களுக்காக நாம்மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் நாம் இந்த யோர்தான் நதியைக் கடந்து அக்கரைக்கு போகும் போது அந்த நேரம் எப்பேர்பட்டதாயிருக்குமென சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே மெல் ஜான்சன் அவர்கள் அவருடைய பொன்னான குரலை கொண்டு, எய்னார் எக்பெர்க் மற்றும்அக்கரைக்கு கடந்து போன மகத்தான பாடகர்களோடு இசைந்து பாடுகிறதை கேட்க ஆசைப் படுகிறேன். ஆகவே நாம் அந்த நேரத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இங்கிருக்கின்ற என்னுடைய அருமையான நண்பர், டாக்டர் லீவெய்ல் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். அவர் முன்னாள் பாப்டிஸ்டு ஊழியக்காரராக இருந்தவர். அவர் ஒரு சிறந்த பண்டிதர் மற்றும் அருமையான நபர். நான் இங்கு வருவதற்கு முன்னரே, அவர் வந்து, அவருக்கு தெரிந்த விதானத்தில் ஒரு வாரம் இங்கு ஊழியம் செய்தார். அது இந்த கூட்டத்திற்கு மிக உதவியாய் இருக்கிறது. 4பொதுவாக, நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிற ஆராதனைகளை கொண்டிருக்கும் போது, அதை 'சுகமளிக்கும் ஆராதனை“ என்று அனேகமுறை மக்களுக்கு முன்பாக சொல்லியிருக்கிறோம். சொல்லப் போனால், எங்களால் எந்த மக்களையும் சுகப்படுத்த முடியாது. நாங்கள் வெறும் மக்களுக்கு ஜெபத்தை மாத்திரம் ஏறெடுக்க முடியும் என்று அறிவோம். சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என்னிடத்தில் வந்து, 'சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் இன்னார் இன்னாரை சுகப்படுத்தினீரா?“ என்று கேட்டார். அதற்கு நான் 'என்னுடைய வாழ்க்கையில் இது வரை ஒரு நபரைக் கூட சுகப்படுத்தவில்லை. ஆனால் சில ஜெபங்களுக்கு நான் நேரடியான பதில்களை பெற்றிருக்கிறேன். ஏனெனில் இயேசு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் மற்றும் அதை நான் விசுவாசித்தேன்“ என்றேன். 5இப்பொழுது இந்த மகத்தான நபராகிய பரிசுத்த ஆவியின் புகைப்படம் 'உன்னை வழி நடத்த அக்கினி ஸ்தம்பம் உனக்கு முன் செல்லும்“ என்று யாத்திராகமம் 13: 22-ல் அல்லது 21-ல் சொல்லப்பட்டபடி அன்றொரு இரவில் எடுக்கப்பட்டது என் நினைவிற்கு வருகிறது. மோசேயோடு இருந்த அந்த அக்கினி ஸ்தம்பமே, அந்த மக்களுக்கு முன்பாகவும் சென்றது. அதன் பிறகு அது தேவ குமாரனாகிய இயேசு என்ற நபருக்குள் பிரத்தியட்சயமான போது, அவர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்றும் தேவனிடத்திற்கே திரும்புகிறார் என்றும் சொன்னார். அதன் பிறகு அவர் மேலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டு திரும்பவும் இறங்கி வந்தபோது, அது பரிசுத்த பவுலுக்கு மிக மகத்தானதாய் இருந்தது. அங்கே அவன் தாக்கப்பட்டு கீழே விழுந்தான். இச்சம்பவம், அவன் பரிசுத்த பவுலாக மாறுவதற்கு முன்னர் நடந்தது. அவன் ஒரு யூதனாக இருக்கும் பட்சத்தில், 'ஆண்டவரே' என்று அழைக்க வாய்ப்பே இல்லை. ''ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர்?“ பார்த்தீர்களா? அந்த அக்கினி ஸ்தம்பம் தான் அவருடைய மக்களை பின் தொடர்ந்தது அல்லது வழி நடத்தினது என்று அறிந்திருந்தான். ஆகையால் தான் அவன் அதை ''ஆண்டவரே” என்று அழைத்தான். 'நீர் யார்? நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்“ என்றான். அதற்கு அவர் 'நான் இயேசு“ என்றார். 6அதுவே இந்த கடைசி மணிவேளையிலே திரும்பவும் நம்மிடம் வந்திருக்கிறதை காண்கிறோம். அது அன்றொரு இரவில், டெக்ஸாசிலிருக்கும், ஹூஸ்டன் பட்டணத்தில் முதன் முறையாக அதிகாரப் பூர்வமாக எடுக்கப்பட்டது. அப்போது ஒரு பாப்டிஸ்ட் ஊழியக்காரர் தெய்வீக சுகமளித்தலை குறித்து டாக்டர் பாஸ்வர்த் அவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். உங்களில் அனேகர் அங்கிருந்திருக்கக்கூடும். நான் ஒரு தெய்வீக சுகமளிக்கிறவன் என்று டாக்டர் பெஸ்ட் அவர்கள் கூறினார். அதற்கு நான், 'நான் சுவிசேஷத்தை பிரசங்கித்து, வியாதியஸ்தரை இயேசு சுகமாக்குகிறார் என்று வேதவாக்கியம் சொல்லுகிறபடி, நான் விசுவாசிக்கிறது என்னை ஒரு தெய்வீக சுகமளிக்கிறவராக ஆக்குமென்றால், இரட்சிப்பை விசுவாசிக்கிற மனிதனையும் ஒரு தெய்வீக இரட்சகராக ஆக்க வேண்டுமே, ஏனெனில் இதுவும் அதே வேதவாக்கியம் தான்“ என்றேன். தேவன் யெகோவாயீரே-யாகவும், யெகோவா ராஃபா-வாகவும் இருக்கிறார். 7அவருடைய எல்லா மீட்பின் கூட்டுப் பெயர்களும் இயேசு கிறிஸ்துவுக்குள் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து தான், தேவன் யார், என்பதை எடுத்து வெளிப்படுத்தி போற்றினார்கள். இந்த மகத்தான தன்மைகளெல்லாம், அவர் தேவனாவதற்கு முன்னரே அவருக்குள் இருந்தன. தேவன் என்றால் ஆராதனையின் பொருள். அவர் அவ்விதம் ஆவதற்கு முன்னரே அவர் தேவனாகவே இருந்தார். அவர் நித்தியமானவர். இந்த தன்மைகளெல்லாம் அவருக்குள் இருந்தன. அதிலிருந்துதான், அவர் பிதா, குமாரன், இரட்சகர் மற்றும் சுகமளிக்கிறவர் என்று வெளிப்படுத்திக் காட்டப்பட்டது. ஆகவே தேவனுடைய இரட்சிக்கும் தன்மையின் மூலம் நாம் இரட்சிப்பின் உறுதியையும், இவ்விதமான ஐக்கியத்தையும் களிகூறும்படி நமக்கு கொடுக்கப்பட்ட அருமையான நேரத்திற்கும், சிலாக்கியத்திற்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. 8இப்பொழுது, நம் மத்தியில் இருக்கும் சகோதரர் வெய்ல் அவர்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். இந்த காரியங்களை விளக்குவதற்கு அவர் ஏதுவானவர். நான் வேதபாண்டித்தியம் பெற்றவன் அல்ல என்று எந்த நபருக்கும் தெரிந்ததொன்று. எனக்கு கல்வி அறிவு கிடையாது. இங்கே, மூடி வேதாகம பள்ளியிலிருந்து வந்திருக்கும் அருமையான சகோதரன் எழுந்து நின்றபோது 'ஆ, எனக்கும் அந்த பையனைப் போல் கல்வி இருந்திருந்தால் நலமாயிருக்குமே“ என எண்ணினேன். இந்த தரிசனத்தை கொடுத்த தேவன்தாமே அவரை இன்னும் பயன்படுத்துவார் என நம்புகிறேன். இந்த ஊழியப் பாதையிலே எனக்கோ வயதாகிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் இந்த வாலிபர்கள் இப்போது இருக்கிறதை காட்டிலும் மிக வல்லமையான விதானத்தில் இந்த சுவிசேஷத்தை எடுத்துச் செல்வார்கள். இன்னும் சந்ததிகள் கடந்து போய்க்கொண்டிருக்க, எதிரியானவனும் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் கடைசியிலே கிறிஸ்துவை சந்திக்கும் மட்டும், தேவன் தன்னுடைய தரத்தை உயர உயர உயர எழுப்பிக் கொண்டே இருப்பார். எப்படியாயினும் அவரையே நாம் காணும்படி எதிர் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். 9இப்பொழுது, இந்த வாரத்தையும், இக்கூட்டங்கள் முடிவடைவதையும் நினைவில் கொண்டிருங்கள். இந்த கூட்டங்களுக்கு எல்லோரும் அழைக்கப்படுகிறீர்கள் - எல்லா ஸ்தாபனங்களுக்கும் கூட. இப்பொழுது எனக்கு தருணம் இருக்கும்பொழுதே இதை சொல்லட்டும். நான் அந்த மக்களுக்கு (ஸ்தாபனங்களுக்கு) விரோதமாக இருக்கிறேன் என்று நீங்கள் ஒரு போதும் உங்களுடைய சிந்தையிலே கொண்டிருக்க வேண்டாம். அந்த மக்களை நான் நேசிக்கிறேன். ஐக்கியத்தை உடைப்பது ஸ்தாபனத்தின் அமைப்புகள் தான். அது தான்... இப்பொழுது நான் தென் ஆப்பிரிக்காவுக்கு போகப்போகிறேன். அங்கே நான் கடந்த முறை இருந்ததினிமித்தம் இந்த அழைப்பை மறுபடியும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். ஏனெனில்அங்கே முழு சுவிசேஷ வியாபார சங்கத்தின் நபர்களில் சிலர் அங்கு இருக்கிறார்கள். நான் இந்த முழு சுவிசேஷ வியாபார சங்கத்தை தவிர எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்தவன் அல்ல. ஏனெனில் இது ஸ்தாபனம் அல்ல. இதுவும் ஸ்தாபனமாக ஆகுமென்றால், நான் நிச்சயமாகவே இதிலிருந்து கிளம்ப வேண்டியிருக்கும். ஏனெனில் இதுவும் ஒரு அமைப்பாக மாறும். கூட்டாக சேர்ந்து செய்வது தவறல்ல ஆனால் ஒரு அமைப்பு தவறே. 10அங்கே, ஆப்பிரிக்காவிலே கிழக்கு பகுதியிலிருக்கும் மக்கள் கூட்டத்தினர் ஆங்கில மொழி பேசக் கூடியவர்கள். அவர்கள் பெந்தகோஸ்தே அசம்பளிஸ் ஆப் காட் குழுவை சேர்ந்தவர்கள். மேற்கு பகுதியில் வசிக்கிறவர்களோ ஆப்பிரிகான்கள். அவர்கள் போயர் பழங்குடியின மக்கள் கூட்டத்தினர். அவர்கள் அந்த இடத்தில் குடியேறின டட்சு மக்களாவார்கள்.அவர்கள் ஆப்பிரிக்காவின் அப்போஸ்தல ஊழியத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அதை A.F. of M (அப்போஸ்தல விசுவாச ஊழியம்) என்று அழைக்கிறார்கள். அவர்களிலே இரண்டு வகையான மக்கள் இருக்கிறார்கள். இரண்டு பிரிவுகள். அவர்கள் இருவருமே மும்முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். அதில் ஒரு கூட்டம் மூன்று முறை தலையை முன்பக்கம் சாய்த்து கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.ஒரு முறை பிதாவுக்கும், இன்னொரு முறை குமாரனுக்கும், மற்றொரு முறை பரிசுத்த ஆவிக்கும் கொடுத்து அவரை ஒருவராக வைப்பதற்கு பதிலாக மூன்று கடவுளாக மாற்றுகிறார்கள். இன்னொரு கூட்டம், பின்பக்கம் சாய்த்து ஒரு முறை பிதாவுக்கும், இன்னொரு முறை குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்திலே மூன்று முறை ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். பாருங்கள், ஒருமுறை பிதாவுக்கும் இன்னொரு முறை குமாரனுக்கும் மற்றொரு முறை பரிசுத்த ஆவிக்கும் கொடுக்கிறார்கள். அதில் ஒரு கூட்டம், 'ஓ, நாங்கள் அவருடைய மரணத்திற்குள்ளாகும் பொருட்டு ஞானஸ்நானம் எடுத்திருக்கிறோம். அவர் மரித்த போது, அவர் முன்னாக விழுந்தார் அல்லவா“, என்றார்கள். இன்னொரு கூட்டம், 'இது வரை எந்த ஒரு மனிதனையாவது முகங்குப்புற அடக்கம் செய்திருக்கிறார்களா? அவனை பின்னாகத்தான் அடக்கம் பண்ணுவீர்கள்” என்றார்கள். அதினால் தான் அவர்கள் பின்னாக கொடுக்கிறார்கள். அந்த பிரிவினரில் இருக்கும் மக்கள் எனக்கு கடிதம் எழுதி, அதிலே கையெழுத்திட்டு 'சகோதரன் பிரான்ஹாம், ஆப்பிரிக்கா உங்களை அழைக்கிறது. நீங்கள் உடனடியாக வந்து தயவு செய்து, இந்த உபதேசத்தை எங்களுக்கு போதியும்“ என்றனர். நல்லது நான் அந்த விதமான உபதேசங்களுக்காக போக முடியாது. பாருங்கள் நான் ஒருபோதும்... 11நான் ஒரு மிஷனரி பாப்டிஸ்ட் ஊழியக்காரனாக நியமிக்கப்பட்டிருந்தவன். ஆகையால், என்னுடைய பாப்டிஸ்ட் சகோதரர்கள் மேல் எனக்கு அதிக மரியாதை உண்டு. நான் அவர்களை நேசிக்கிறேன். ஆனால் வார்த்தையை பொறுத்தமட்டில், இது பாப்டிஸ்டுக்கோ,அல்லது பிரெசிபிடேரியனுக்கோ அனுப்பப்படவில்லை. இது சபைக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் தன்னந்தனியாக அவர்களுக்கு நடுவே நிற்க வேண்டியதாயிருக்கிறது. அவர்களை விட்டு தனியாக இருக்கும்படி அல்ல. ஒரு சகோதரனாக அவர்களோடு இருக்க விரும்புகிறேன். இது யாக்கோபு தோண்டின மூன்றாவது கிணற்றை போல் இருக்கிறதென்று விசுவாசிக்கிறேன். அங்கே நாம் யாவருக்கும் இடமிருக்கிறது. அவ்விதமாகத்தான் இதுவும் இருக்கிறதென்று விசுவாசிக்கிறேன். அந்த ஊற்றண்டையிலே, விருப்பமுடைய நாம் யாவருக்கும் இடம் உண்டு. 12இப்பொழுது அவர்களை ''எதிராளிகள்“ என்று அழைக்க மாட்டேன். ஆனால் எனக்கும் அவ்விதமான மக்கள் உண்டு. அதாவது செய்தியை ஏற்றுக் கொள்ளாத மக்களை கொண்டிருக்கிறேன். ஓ, நான் அவர்களை குறித்து தவறாக சிந்திக்க முடியாது. ஏனெனில் அதே காரியத்தை தான் இயேசுவும் அவருடைய நாட்களில் கொண்டிருந்தார். மற்றவர்களும் கொண்டிருந்தார்கள். தேவனுடைய செய்தி ஒவ்வொரு முறையும் வரும்போது, இந்த உலகம் அதை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் அந்த காரியம் ஒரு போதும் அந்த நபரின் மேல் அல்லது அவ்விதமான மக்கள் மேல் அல்லது அவ்விதமான ஸ்தாபனத்தின் மேல் ஒரு துளி கசப்பைக் கூட கொண்டு வராது. அதில் எந்த மாற்றமுமில்லை.அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனெனில் நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குட்- பட்டிருக்கிறேன் என்பதற்கான அத்தாட்சிகளில் ஒன்றாக அதுவும் இருக்கிறது என்று அறிவேன். அந்த சகோதரர்கள் என்ன செய்தாலும் சரி, அதைக் குறித்து எனக்கு அக்கரையில்லை. அவர்களை நான் இன்னும் நேசிக்கிறேன் பாருங்கள். என்னுடைய இருதயத்திலே அவர்களை நான் நேசிக்கிறேன். ஏனெனில் அது என் சகோதரர்களுக்காக தேவன் என்னுடைய இருதயத்தில் வைத்திருக்கும் அன்பாகும். இப்பொழுது கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. 13இப்பொழுது நாம் தேவனுடைய வார்த்தையை அணுகுவதற்கு முன்பாக இங்கே இருக்கிற இந்த வாலிப ஊழியக்காரனாகிய என்னுடைய அன்பான நபரை ஜெபிக்கும்படி கேட்க போகிறேன். அவர் ஒருவிதமான குழப்பத்தில் இருந்தவர். அவரும் அவருடைய அன்பான மனைவியும் எப்பொழுதும் என்னுடைய வீட்டிற்கு வருவதுண்டு. அவர் எப்பொழுதுமே ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருப்பார். ஆனால் ஒரே ஒரு கேள்வியை மாத்திரம் கேட்பார். சகோதரன் பிரான்ஹாம் தேவன் என்னை ஊழியம் செய்யும்படி அழைத்திருக்கிறார். அதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?“ என்பார். நான் நிச்சயமாகவே இந்த வாலிப மனிதனுக்குள் இருக்கும் திறமைகளை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு அருமையான வேதாகம பள்ளியிலே படித்தவர். ஆனால் அவர் ஒன்றில் மாத்திரம் குறைவுபட்டவராக இருந்தார். மோசேயைப் போல் ஒன்றில் மாத்திரம் குறைவுபட்டவராய் இருந்தார். மோசே, எல்லா பயிற்சியையும் பெற்றிருந்தாலும் ஒன்றை மாத்திரம் கொண்டிருக்கவில்லை. அது அந்த எரிகிற முட்செடியாகும். ஓர் நாளிலே அது தீ பிடித்தது. அந்த எரிகிற முட்செடியைத் தான் சகோதரன் ரடெல் கொண்டிருக்கவில்லை. அந்த சகோதரன் அவருடைய சபையை பட்டணத்தின் எல்லைக்கு வெளியே கொண்டிருக்கிறார். அது ஜெபர்சன்வில் என்று நினைக்கிறேன். அது நம்முடைய கிளை சபையில் ஒன்று. அங்கே தேவனுக்கென்று ஒரு உண்மையான ஊழியம் செய்யப்பட்டுவருகிறது. அதோ அங்கே பின்னாக சகோதரன் டான் ரடெல் அமர்ந்திருக்கிறதை பார்க்கிறேன். இந்தக் காலை நேரத்தில், தேவனால் எவ்விதமாக வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அந்த விதானத்தில் பரிசுத்த ஆவியானவர்தாமே வார்த்தையை உபயோகப்படுத்தும்படி சகோதரன் எழுந்து நின்று ஜெபிப்பாராக. நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கும் வேளையில், சகோதரன் டான் அவர்களே ஜெபியுங்கள். (சகோ. டான்ரட்டெல் அவர்கள் ஜெபிக்கிறார்) ஆம் ஆண்டவரே. ஆமென். 14நாம் இப்பொழுது வேதவாசிப்பிற்கு நம்முடைய வேதத்தை திருப்பலாம். இந்த காலை வேளையில் நான் என்ன பேசும்படி என்னுடைய சிந்தையில் கொண்டிருந்தேனோ அதை இந்த 'வியாபார புருஷர்களின் சத்தத்தை“ கேட்டபின் மாற்றிவிட்டேன். இதைக் குறித்து நான் ஒரு சின்ன யோசனையைக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது பரிசுத்த மாற்கு பத்தாம் அதிகாரத்திற்கு திருப்பலாம். 17-ம் வசனத்தில் இருந்துவாசிக்கலாம். அந்த வசனத்தை தான் இங்கு எழுதி வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பின்பு,அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான், அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. விபச்சாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளை எல்லாம் என் சிறு வயது முதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றி வா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாய் இருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். கர்த்தர் தாமே வாசித்த வேதபாகத்தோடு தன்னுடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. 15நான் முழு சுவிசேஷ வியாபார மக்களோடு இருப்பதைக் குறித்து, மக்கள் பொதுவாக ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஊழியக்காரர்கள் இதை அறிவீர்கள். சிலர் என்னிடத்தில் வந்து 'நீங்கள் ஒரு பிரசங்கி என்று சொல்லுகிறீர், அப்படியென்றால் இந்த வியாபாரிகளிடத்தில் நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?“ என்று சொல்லுகிறார்கள். அதற்கு நான் 'நானும் ஒரு வியாபாரி தான்“ என்றேன். அப்படியென்றால் 'நீர் என்ன விதமான வியாபாரம் செய்கிறீர்“ என்றனர். அதற்கு நான், 'நித்திய ஜீவனுக்கான உத்தரவாதம்“ என்றேன். பாருங்கள், காப்பீடு அல்ல ஆனால் உத்தரவாதம். இயேசுவே என் சொந்தமாம் இதுவே ஆசீர்வதிக்கபட்ட உத்தரவாதமாம். மகிமையுள்ள தெய்வீகத்துக்கு இதுவே ஒரு முன்னனுபவமாம், தேவனால் வாங்கப்பட்டு இரட்சிப்புக்கு வாரிசானேனே‚ அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு அவருடைய ஆவியினால் பிறந்தேனே‚ இப்பொழுது இது வியாபாரிகள் கூட்டமாக இருப்பதினாலே, நான் ஒரு வியாபாரியை போல வியாபார முறைமையில் பேச விரும்புகிறேன். இங்கே இருக்கிற வியாபார புருஷர்களுக்கும் மற்றும் வியாபார ஸ்திரிகளுக்கும் நான் முதலாவது எடுத்து கொள்ள விரும்பும் பொருள் முதலீடுகள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 'முதலீடுகள்“என்று அழைக்கலாம். 16இப்பொழுது வியாபாரம் செய்கிற எந்த ஒரு நபரும், ஒரு நல்ல நிலையான முதலீடுகளின் மேலே விருப்பமுடையவனாய் இருப்பான். நீங்கள் ஒரு வியாபாரி என்றால் நிச்சயமாகவே நீங்களும் ஒரு நல்ல நிலையான ஒன்றின் மேல் விருப்பமுடையவர்களாக இருப்பீர்கள். மேலும் ஒரு வியாபாரி எப்பொழுதுமே நிலையான நல்ல முதலீடுகளையே நோக்கிப்பார்த்துக் கொண்டிருப்பான். அப்படி செய்வது நல்லது என்று நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். இன்று காலை வேளையிலே எனக்கு தெரிந்த மிகச் சிறந்த முதலீட்டைக் குறித்து உங்களிடத்தில் பேசப் போகிறேன். மற்றும் இந்த 'முதலீடுகளை“ நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 17இப்பொழுது ஒரு வியாபாரிக்கு, 'பரவாயில்லை (வந்தால் வரட்டும்)“ என்று கிடைத்த வாய்ப்புகளை பற்றுவது நல்ல கொள்கையாகவே இருக்க முடியாது. சொல்லப்போனால், இப்படி வாய்ப்புகளை எடுப்பதென்பது சூதாட்டமாகும். மற்றும் வியாபார முறைமையில் அது தவறானது. நாம் எதின் மேலும் சூதாட விரும்பவில்லை. ஏனெனில் அது சரியானது அல்ல. இங்கே சிலர் ''ஒரே இரவில் பணக்காரர்” ஆகிறார்கள். உங்களுக்கு நன்றாக தெரியும். கொஞ்சம் கூட நிலைவரப்படாத ஒரு தரகு நிறுவனம் வந்து, நீங்கள் கேட்பதற்கு அருமையாய் இருக்கத்தக்கதாக உங்களுக்கு மிகச் சிறந்ததை கொடுப்பார்கள். நீங்கள் உடனே 'ஆ, என்ன அருமையானது“ என்று சொல்லி அதற்குள்ளே பறந்து போவீர்கள். நீங்கள் அப்படி செய்தபின் நீங்கள் முதலாவது அறிந்து கொள்வது என்னவென்றால், நீங்கள் ஏமாற்றமடைந்தீர்கள் என்பதே. ஆனால் ஒருவன் நன்றாகவும், விவேகமுள்ள வியாபாரியாகவும் இருப்பான் என்றால், அவன் முதலாவது அதிக நாட்களாக ஸ்திரப்பட்டுள்ள நம்பகமான பழைய நிறுவனத்தையே கண்டுபிடிக்க வேண்டும். மேலும் ஒரு வியாபாரி அவனுடைய பணத்தை அவனுடைய சட்டை பையில் வைத்திருப்பது அவனுக்கு நல்லது அல்ல. நீங்கள் உங்களுடைய பணத்தைஉங்களுடைய சட்டைப் பையில் வைப்பீர்களென்றால் அது உங்களுக்கு எந்த சம்பாத்தியத்தையும் கொடுக்காது. அதை நீங்கள் எதிலாவது போட்டு எங்காவது கிரியை செய்யும்படி செய்ய வேண்டும்.அதன் பிறகு அதோடு என்ன செய்ய வேண்டும் என்று கவனித்துப் பாருங்கள். 18அவ்விதமாக தான் நாம் வியாபாரத்தை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இப்பொழுது நான் சொல்லப் போகும் காரியத்தை நீங்கள் நினைத்துப் பார்த்தால் அது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என நினைக்கிறேன். இப்பொழுது நீங்கள்... இன்று உலகத்திலே அநேக குறுக்கு வழிகள் இருக்கிறது. அதின் மூலம் ஒரே இரவில் பணக்காரனாகி… அனேகர் பணக்காரர்கள் இங்கும் அங்குமாக எழும்பி இருக்கிறார்கள். எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சேமித்த யாவற்றையும் எடுத்து, ''உங்களுடைய பணத்தை இதிலேமுதலீடு செய்யுங்கள். அது போதும். அவ்வளவுதான்“ என்று யாரோ ஒருவர் சொன்ன உடனே அவ்விதமான காரியத்திலே முதலீடு செய்தார். இந்த மனிதன் அவருக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த வர்ணம் தீட்டப்பட்ட படத்தை பார்த்து, அவர் வாழ்நாள் முழுவதும் சேமித்த யாவற்றையும் அதிலே முதலீடு செய்து சில நாட்கள் கழித்து அவர் கொண்டிருந்த யாவற்றையும் ஒரே இரவில் இழந்து நின்றார். அந்த நிறுவனத்தை மூடி அங்கிருந்து காலிசெய்துவிட்டு காணாமற் போனார்கள். அவ்விதமான தந்திரத்தை செய்கிறதான மனிதன் மிகவும் முட்டாளான மனிதன். ஒரு நல்ல நிலையான சிந்தையுடையவன் அவ்விதமான முறைமையில் வியாபாரம் செய்யமாட்டான். பாருங்கள். 19நீங்கள் எந்த நிறுவனத்தோடு வியாபாரம் செய்யப் போகிறீர்களோ அதை முதலாவது ஆராய்ந்து சோதிக்க வேண்டும். அப்போது அந்த நிறுவனம் நன்றாக இருக்கவில்லை என்றால், அவர்கள் கொடுக்கிற பங்கு எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும் அது உங்களுக்கு ஒரு பொருட்டல்ல. நீங்கள் அதில் இறங்க மாட்டீர்கள். நீங்கள் ஒரு நல்ல வியாபாரியாக இருக்கும் பட்சத்தில், அவ்விதமான வாய்ப்புகளை எடுக்க மாட்டீர்கள். உங்களுடைய வாழ்கையிலே சம்பாதித்தவைகளைக் கொண்டு அதிலே முதலீடு செய்ய மாட்டீர்கள். இப்பொழுது இதை பற்றி பேசுகையில், இது இந்த கடைசி காலத்திலே இருக்கும் அனேக விதமான மத சம்பந்தமான காரியங்களுக்கு ஒப்பனையாக இருக்கிறது. அதாவது ஒரே இரவில் மனமாறுதல், இன்று இரவு மது அருந்தும் அரங்கிலே பாடகராக இருப்பாய் நாளை தினத்தில் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருப்பாய். அவ்விதமான காரியத்தைநான் ஆதரிப்பதில்லை. இல்லை. நான் நினைக்கிறேன், முதலாவது ஒரு நபர் நிரூபிக்கப்பட்டாக வேண்டும். 20அங்கே தான் அனேக பெந்தேகொஸ்தே ஸ்தாபனங்களாகிய நாம் சற்று இழந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இன்றிரவு ஏதோ ஒரு மேடையின் மேல் ஆடையை கழற்றி நடனம் ஆடி, மறுநாள் இரவில் இங்கு ஏதாவதொரு இடத்தில் பாடல் பாடி வேதாகமத்தை தன்னுடைய கரத்தில் எடுத்து 'தேவன் என்னை பிரசங்கிக்கும்படி அழைத்தார்“ என்று சொல்லுகிற ஸ்திரீயை எடுத்துக் கொள்கிறோம். அதை நான் சந்தேகிக்கவில்லை. அது பரவாயில்லை. ஆனால் முதலாவது அந்த ஸ்திரீ நிரூபிக்கப்பட்டாக வேண்டும் என நினைக்கிறேன். அது சரிதான். முதலாவது அது நிரூபிக்கப்படட்டும். அந்த விதையானது சற்று வளரட்டும். அதன் பிறகு அது என்ன விதமான ஜீவனை கொண்டிருக்கிறது என்று பாருங்கள். ஏனெனில் அவள் யாரோடு பழகப் போகிறாளோ அவர்களே அவளுடைய சாட்சியை அல்லது அவனுடைய சாட்சியை நம்ப மாட்டார்கள். அது எப்படி தான் இருந்தாலும் சரி, ஒரு இரவில் அவளை அல்லது அவனை மதுக்கடையில் பார்த்து அடுத்த இரவில் சுவிசேஷத்தை எடுத்து சொல்லுகிறதை பார்ப்பீர்களானால் அப்போது அவர்கள் அவளை “எப்பேற்பட்ட ஏமாற்றுக்காரி?” என்பார்கள். ஆனால் அந்த ஸ்திரீ மாத்திரம் ஒரு அருமையான ஜீவியத்தை கொஞ்ச நாட்கள் அந்த பட்டணத்திலே அந்த மக்கள் மத்தியில் ஜீவித்து, அவளுடைய வாழ்கையில் ஒரு மாற்றத்தை காண்பித்தால், அவளுடைய சாட்சி நிலை நிற்கும். அவளுடைய ஜீவியம் ஸ்திரப்படுமட்டும் அவளுடைய வாழ்க்கையை அப்படியே நடத்துவது நல்லது. 21இப்பொழுது நமக்கு ''ஒரே இரவில் பணக்காரன்“ ஆவதெல்லாம் தேவையில்லை. மற்றும் நாம் பணத்தையும் பையில் வைத்திருக்க விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் பணத்தை வைத்திருப்பீர்களென்றால் திருடர்கள் வந்து அதை உடைத்து திருடிக் கொண்டு போவார்கள். மேலும் நீங்கள் தேவனுக்கென்று ஏதாவது செய்யும்படி உங்களுடைய இருதயத்தில் கொண்டிருந்து அதை வெளிப்படுத்தாமல் ''நல்லது, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், பின்னர் பார்ப்போம்” என்று அது போன்று உங்களுக்குள்ளே வைத்திருப்பீர்கள் என்றால் அப்போது நீங்கள் தேவனுக்கென்று சேவை செய்யும்படி ஒரு விசை கொண்டிருந்த அந்த சின்ன வாஞ்சையானது உங்களிலிருந்து எடுக்கப்படும். பிசாசு வந்து அதை திருடிக் கொண்டு போவான். அதன் பின் நீங்கள் அவருக்கு சேவை செய்யும்படி எந்த ஒரு வாஞ்சையும் கொண்டிருக்கமாட்டீர்கள். ஆகவே உங்களுக்குள் மிக சின்ன வாஞ்சை இருக்குமானால்... சொல்லப் போனால், ஏதோ ஒன்று தான் உங்களை இந்த காலைநேர கூட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. ஏதோ ஒன்று இருக்கிறது. விசுவாசம் கேள்வியினால் வரும், வார்த்தையை கேட்கிறதினால் வரும். உங்களுக்குள் ஏதோ ஒன்று இருந்தாக வேண்டும், அல்லது நீங்கள் இங்கே இருந்திருக்கவே மாட்டீர்கள். இப்பொழுது ஏதாவது ஒரு இடத்திலே சேர்ந்து அல்லது கைகளை குலுக்கி அல்லது தெளிக்கப்பட்டு அல்லது ஏதாவதொன்றை செய்து உங்களுடைய வாஞ்சையை கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து போகும்படி விட்டு விடாதிருங்கள். நாம் ஸ்தாபிக்கப்பட்ட உண்மையான ஸ்திரமான ஒன்றைக் கண்டுபிடிப்போம். அது உண்மையில் சரியாக இருக்க வேண்டும். நல்லது. நீங்கள் அதிகமான லாப பங்கைச் செலுத்தக்கூடிய ஒரு நல்ல நம்பத் தகுந்த நிறுவனத்திலேயே உங்களுடைய முதலீடுகளைச் செய்ய விரும்புவீர்கள். அது தகுதியானதாக இருக்கவேண்டும். 22இந்த காலை வேளையில் நான் இந்த கூட்டதிற்கென்று ஐஸ்வரியமுள்ள வாலிப அதிபதியைக் குறித்து எடுக்க சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில்இந்த வாலிபன் ஒரு ஐஸ்வரியமுள்ள அதிபதி என்று அறிந்திருக்கிறோம். அவன் ஒரு வாலிபனாக இருந்தான். அவன் ஒரு அருமையான குணாலட்சணமுடையவன். அதில் எந்த சந்தேகமுமில்லை. அவன் ஒரு அருமையான வீட்டிலே வளர்ந்திருப்பான். அவன் கர்த்தராகிய இயேசுவை அணுகின முறையைப் பார்க்கும்போது, அவன் ஒருவேளை அருமையான பக்திவைராக்கியம் உள்ள குடும்பத்தில் வளர்ந்திருக்கக்கூடும். ஏனெனில் உங்களுக்குத் தெரியும், ''கட்டளைகளை கைக்கொள்“ என்று இயேசு அவனிடத்தில் சொன்னபோது... அவன், ''இதை நான் என்னுடைய சிறு வயதுமுதல் கடைப்பிடித்து வருகிறேன். நான் இதைக் கடைப்பிடித்தேன்“ என்றான். பாருங்கள். அவனுக்கு நல்ல பின்னனி இருந்தது. அது எல்லாவற்றிற்கும் போதுமானது. ஏனெனில் சாதாரணமாக இருந்திருந்தால்,அவன் இயேசுவை ஒருவேளை ஒருபோதும் அணுகியிருக்க மாட்டான். அவனுடைய ஜெப ஆலயத்தில் அவன் வழக்கமாக பார்த்த காரியங்களை காட்டிலும், அவனுடைய கவனத்தை இழுக்கத்தக்கதாக இயேசுவுக்குள் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், பாருங்கள், இயேசு வித்தியாசமா- னவராக இருந்தார். 23அதே போல் இங்கு இந்த மகத்தான மூடி வேதாகம பள்ளியிலிருந்து வந்த இந்த வாலிபன் கொடுத்த சாட்சியிலும் எந்த சந்தேகமுமில்லை. பாருங்கள்,ஒரு நாள் அவன் ஏதோ ஒரு வித்தியாசமானதைக் கண்டான்; அவனுக்கு ஒருதருணம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வாலிபனுக்கும் ஒரு முதலீட்டைச் செய்யும்படி ஒரு தருணம் கொடுக்கப்பட்டது. அவன் ஒரு வியாபாரியாய், அதிபதியாய், அதிக சொத்துக்களை கொண்டிருந்தது உண்மையே. இயேசு அந்த வாலிபனுக்குள்ளாக அதிக திறமைகள் இருந்ததை அறிந்தார். ஏனெனில் வேதம் 'அவன் அவரை நோக்கினான், அவரை நேசித்தான்“ என்று சொல்லுகிறது. அவன் அருமையான குணாலட்சணம் கொண்ட நபராக இருந்திருக்கக்கூடும். அவனுடைய அணுகுமுறை மிக கண்ணியமாக இருந்தது. 24அவன் ஒருபோதும் ஓடி வந்து, ''பிரசங்கம் செய்யும், உங்களைத்தான், இங்கே வந்து பிரசங்கம் செய்யும்“ என்று இந்த நாளில் இருக்கிற சில திமிறு பிடித்தவர்கள் சொல்லுகிறபடி சொல்லவில்லை. அவனுடைய அணுகுமுறை அவ்விதமாக இல்லை. அவன் வந்து, “நல்ல போதகரே” என்றான். பாருங்கள். “எஜமானனே அல்லது போதகரே, நித்திய ஜீவனை பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான். இப்பொழுது அவன் கட்டளைகளை கடைப்பிடித்திருந்தாலும், அவனுடைய தேவாலயத்திற்கு அவன் உத்தமமாய் சென்றிருந்தாலும், அவன் ஜீவனை உற்பத்தி செய்யக் கூடிய ஏதோ ஒன்றை இயேசுவுக்-குள்ளாகக் கண்டதை பார்க்கிறீர்கள். 25இப்பொழுது, நியாயபிரமாணத்திற்குள் எந்த ஜீவனும் இல்லை. ஜீவனானது... என்னை மன்னியுங்கள்‚ நியாயப்பிரமாணமானது உங்களிடத்தில் பாவம் இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிற வெறும் ஒரு போலீஸ்காரனே‚ ஆனால் உங்களுடைய பாவத்தை மன்னிப்பதற்கு அதினிடத்தில் கிருபை இல்லை. அது நீங்கள் ஒரு பாவி என்று மாத்திரமே உங்களை சுட்டிக்காட்டும். மேலும் அது அப்படியே திருப்பி கிறிஸ்தவர்களுக்குள் கொண்டு- வரப்பட்டிருக்கிறது. அதினுடைய சாயலை மாத்திரம் எடுத்துக் கொண்டு கிறிஸ்தவர்களாகிய நாம் பிரமாணங்களையும், கோட்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். மேலும் இந்த உலகத்திற்கு இதை கொடுக்க நாம் திறமையுள்ளவர்களாய் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறோம். ஆனால் அதில் கூறியிருக்கிறபடி அவர்களால் அதிலிருந்து எதையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று அறிகிறோம். ஏனெனில் அதிலே எந்த ஜீவனும் இல்லை. பாருங்கள், நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய எதையாவது ஒன்றையே கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும், தான் திரைக்கு அப்பால் எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றும், என்றைக்காவது ஒரு நாள் அந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றாக வேண்டும் என்றும் அறிந்திருக்கிறான். ஒவ்வொருவரும் அதையே காண விரும்புகிறார்கள். அக்கரைக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று காண விரும்புகிறார்கள். 26இங்கு ஒரு அழகான காட்சி இருக்கிறது. அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டு போகிறதை குறித்து இயேசு சொன்னதை கவனிப்பீர்களானால், அவர் ஒருபோதும், ''அந்த மனிதனிலிருந்து அந்த அசுத்த ஆவி துரத்தப்படும் போது“ என்று சொல்லவில்லை. ஆனால் அது சுயமாய் அவனை விட்டு போகும் என்றால்... அந்த அசுத்த ஆவி தானாக ஒரு மனிதனைவிட்டு புறப்பட்டு போகும் என்றால், அது திரும்பவும் அந்த மனிதனிடத்திற்கு வரும். அப்போது அது குடியிருந்த அந்த வீடு, காலியாய், அலங்கரிக்கப்பட்டிருப்பதை காணுமாகில் உடனே போய்மற்ற ஏழு பிசாசுகளையும் பேய்களையும், அசுத்த ஆவிகளையும் அழைத்து வந்து இந்த மனிதனுக்குள் புகுந்துவிடும். அப்போது அந்த மனிதன் கடைசியாக இருந்த நிலையை காட்டிலும் ஏழுதரம் மோசமாக இருப்பான். கவனித்தீர்களா, அந்த பிசாசு சுயமாய் வெளியே போய் மறுபடியும் சுயமாய் திரும்பிவருகிறது. இப்பொழுது அந்த பிசாசு திரும்பவும் வரும்போது அந்த வீடு நிரப்பப்பட்டிருக்கும் என்றால் அது உள்ளே வருவதற்கு வாய்ப்பில்லாமல் போகும். ஆனால் அது பெறுக்கப்பட்டு, அலங்கரிக்கப் பட்டிருப்பதைக் காணும்போது... 27இப்பொழுது ஒழுக்க முறைகளை கடைபிடிக்கிறவனை குறித்ததான அருமையான காட்சி இங்கு இருக்கிறது. இன்றைய நாளின் மனிதனை குறித்து சிந்திக்கும்போது, அவன் சூதாட்டத்தை விட்டு அல்லது அவனுடைய மனைவியல்லாத வேறொரு ஸ்திரீயோடு ஓடுகிறதை நிறுத்திவிட்டு, அல்லது, புது வருட நாளன்று குடியை நிறுத்திவிட்டு, இவைகளை விட்டு புதிதான வாழ்க்கையை ஆரம்பித்து ஒரு சபையை சேர்வதின் மூலம் பரலோகத்திற்கு போய் விடுவோம் என்று நினைக்க முயற்சிக்கிறான். பாருங்கள். நீங்கள் பார்த்தீர்களானால், அவன் உண்மையிலே மனம் மாறவில்லை. அவன் வெறும் ஒழுக்க முறையை கடைபிடிக்கிறவனாக இருப்பான். அவர்களிடத்தில் உண்மையான கிறிஸ்துவின் வல்லமை இல்லை. இருப்பினும் பிசாசு இவ்விதமான ஒழுக்க முறைகளை மாத்திரம் நம்புகிறவர்களை உபயோகித்து வெளியிலே முட்டாள்தனமான பிரதிநிதித்துவத்தை செய்கிறான். 28இந்த உலகமோ கிறிஸ்துவை காண விரும்புகிறது. “நானே திராட்சை செடி, நீங்கள் கொடிகள்” என்று இயேசு சொன்னார். மற்றும் அந்த கொடியானது அந்த திராட்சை செடியை குறித்த சாட்சியை கொண்டிருக்கிறது. ஏனெனில் அது தனக்கான சக்திகளையும் ஜீவனையும் அந்த செடியிலிருந்து பெற்றுக் கொள்ளுகிறது. பார்த்தீர்களானால், அந்த செடியிலிருந்து முதல் கொடியானது வந்தபோது, அவர்களை அதற்கு பின்பாக அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தை எழுதச் செய்தது. பரிசுத்த ஆவியானவர் எவ்விதமாக அந்த முதல் சபையிலே கிரியை செய்தார் என்பதை நாம் பார்க்கிறோம். அது அந்த பெந்தெகொஸ்தே சபையாகும். மேலும் அந்த அசலான திராட்சைசெடி இன்னொரு ஒரு கொடியை கொண்டு வரும் என்றால், அந்த கொடியானது அவர்களை அதன்பின் இன்னொரு ஒரு அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தை எழுதச் செய்யும் என்று விசுவாசிக்கிறோம். ஏனெனில்அந்த செடிக்குள் இருக்கிறது அதே ஜீவனே. மேலும் இந்த முதல் கொடியானது ஒரு கொத்து திராட்சை பழங்களை கொடுத்தது என்றால், இங்கே ஒரு கொத்து தர்பூசனிகளும் அல்லது பூசனிகளும் அல்லது வெள்ளரிகளும் வளருகிறதை பார்க்கும்போது இது அந்த திராட்சைச் செடியிலிருந்து வந்த ஜீவன் அல்ல என்று அறிந்துக் கொள்கிறோம். ஆகவே, நான் நினைக்கிறேன், பெந்தெகொஸ்தே என்று அழைக்க விரும்புகிற நாமும் கூட பரிசுத்த ஆவியையும் அவருடைய ஆவியில் இருக்கும் ஜீவனையும் பிரதிநிதித்துவப் படுத்தும்படி கிறிஸ்து அனுப்பின அந்த அசலான காரியத்தை பிரதிநிதிப்படுத்த தவறினோம். பாருங்கள். சில சமயங்களில் நாம் நம்முடைய உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். சந்தோஷத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அவை நல்லது தான். ஆனால் அதைக் காட்டிலும்மேலான காரியம் ஒன்று இருக்கிறது. அதாவது அதனை (பரிசுத்த ஆவி) பின் தொடர்கிற கனி ஒன்று உண்டு. ஒரு பசியுள்ள மனிதன் அந்த ஆவியின் கனியையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த தரமே (Quality) இயேசுவுக்குள்ளும் இருந்தது. 29ஏனெனில் இயேசு ஒரு சாதாரண மனிதன் மாத்திரம் அல்ல. அவர் தேவனாக இருந்தார். அவர் தேவனேயன்றி வேறு எதிலும் குறைவுபடவில்லை. அவர் வெறும் தீர்க்கதரிசி மாத்திரம் அல்ல. அவர் நிச்சயமாகவே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். ஆனால் தேவ தீர்க்கதரிசியாக இருந்தார். தேவனுக்குரிய யாவும் அவருக்குள் வாசம் செய்யக் கூடிய வீடாக அவர் இருந்தார். அவருக்குள் தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரத்திலே இருந்தது.தேவன் மரிக்கும்படியாகவே ஒரு மனிதனாக கீழே இறங்கி வந்தார். தேவன் ஒரு ஆவியாக இருந்து மரிக்க முடியாது. அவர் நித்தியமானவர். அவரால் மரிக்க முடியவில்லை. ஆனால் தேவன் வலியை உணரும்படியாகவும் அதை உணர்ந்து வேதனைப்படுகிற விதானத்திலே தன்னை மாற்றிக் கொண்டார். நித்திய ஆவியாக அவர் வேதனையை அனுபவிக்க முடியாது.ஆனால் அவர் மனிதனாக மாறினபோது, அவர் வேதனைப்பட்டு, ஆதாம் ஏவாளிலிருந்து மனிதர்கள் எல்லாரும் சந்தித்து வந்ததைப் போல வலியை உணர முடிந்தது. அவர் தன்னுடைய சொந்த நியாயப்-பிரமாணத்தை நிறைவேற்றும்படி அதைத் தன் மீது ஏற்றுக் கொண்டு அந்தபடி மாற வேண்டியதாயிற்று. அவர் இரண்டாவது நபராக இருக்க முடியாது. அவர் மூன்றாவது நபராக இருக்க முடியாது. அவர் அதே நபரேயன்றி வேறு எந்த நபராகவும் இருக்க முடியாது. அவர் அந்த நபராகவே இருந்தாக வேண்டும். 30இந்த பூமி எவ்விதம் அவருடைய எல்லைக்குட்பட்டிருந்ததோ அதே போல் இந்தக் காலையிலே இந்த கூட்டத்தாரும் என்னுடைய எல்லைக்குட்பட்டிருப்பார்களானால், நான் உங்களைப் பார்த்து ''எவனாகிலும் இந்த தூனைப் பார்த்தால், அவன் சாகவே சாவான்“ என்றுசொல்லி, ஒரு வேளை இங்கு இருக்கிற இந்த கத்தோலிக்க ஸ்திரீ அந்த தூனை பார்க்கும்போது, அப்போது நான் ''ஓ, அவர்கள் இப்பொழுது தான் புதிதாய் வந்து கொண்டிருக்கிறார்கள், ஆகையால்அவர்களை மரிக்க விடுவது நலமாய் இராது“ என்று சொல்லியிருப்பேன். ஆனாலும் அந்த சீமாட்டிக்காக உள்ள வருத்தத்தினால் ''இங்கே இந்த மனிதன் அந்த ஸ்திரீயின் இடத்தை எடுத்துக்கொள்ளட்டும்” என்று சொல்லியிருப்பேன். ஆனால் அப்படி செய்வது சரியானதல்ல. ஒருவேளை 'என்னுடைய குமாரன், பில்லி பால் அவளுக்கு பதிலாக அந்த இடத்தை எடுத்து மரிக்கட்டும்“ என்று சொல்வதும் சரியல்ல. அப்படி செய்வேனானால், எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமற் போகும். அந்த வேதனையை யாரோ ஒருவர் அனுபவிப்பார்கள். தேவன் நீதிபரராய் இருப்பது போல நானும் நீதியுள்ளவனாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு இருக்கிற ஒரே வழி, அவளுடைய இடத்தை நானே எடுத்துக் கொள்வது தான். அவளுடைய இடத்தை நான் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆகவே, தேவன் மரண பாடுகளை அனுபவிக்க, மாம்சத்தில் வரவேண்டியதாயிருந்தது. அவர் நம்முடைய மீட்பை சம்பாதிக்க மரித்தாக வேண்டும்; வேறு வழியில்லை. மேலும் இந்த வாலிபன் நியாயப்-பிரமாணங்களில் இருந்ததை காட்டிலும் இயேசுவுக்குள் ஏதோ ஒரு மேலான காரியத்தைக் கண்டான். 31இப்பொழுது கணவான்களே நான் இதை இவ்விதம் உணர்ந்து கொள்கிறேன். நாம் எதை விசுவாசிக்க முயற்சிக்கிறோமோ அதை ஒரு வேளை பிரதிநிதித்துவபடுத்தாமல் இருக்கலாம். நாம் எதை சொல்ல முயற்சிக்கிறோமோ அதை நாம் அந்த அளவிற்கு பிரதிநிதித்துவப்-படுத்துவதில்லை. நான் என்னுடைய தலையையும் இருதயத்தையும் தாழ்த்தி சொல்லுகிறேன், இந்த நாளுக்கென்று சபைக்காக என்னிடத்தில் கொடுக்கப்பட்ட செய்தியை நான் அந்த அளவிற்கு பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. என்னுடைய ஜீவியத்திலே நான் சரியானதையே செய்ய முயற்சித்தாலும், எனக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றது. ஆனால் என்னை நோக்கிப் பார்க்கும்படி உங்களை கேட்கவில்லை. நான் எப்படியிருக்கிறேன் என்று பார்க்க வேண்டாம். நான் என்ன சொல்லுகிறேனோ அதையே நோக்கிப் பாருங்கள். நான் கர்த்தராகிய இயேசுவை குறித்தே பேசுகிறேன். அவருக்குள் இரட்சிப்பு இருக்கிறது. 32அந்த மனிதன் நிச்சயமாகவே அவருக்குள் தேவனை கொண்டிருக்கிறார் என்பதை இந்த வாலிபன் கண்டான். மக்களிடத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதை அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தை நோக்கிப் பார்த்து அவரால் சொல்ல முடிந்தது. அவரால் மரித்தவனை பின்பு உயிரோடு எழுப்ப முடிந்தது. இப்பொழுது, இவ்விதமான காரியத்தை நியாய பிரமாணம் ஒருபோதும் செய்ததில்லை என்பதை அறிந்திருந்தான். அவனுடைய சொந்த சபையும் அவ்விதமான அற்புதங்களை செய்யவில்லை என்பதை அறிந்திருந்தான். இருப்பினும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு அவர்களின் தேவன் மரிக்க முடியாது அவர் இன்னும் உயிரோடிருக்கிறார் என்பதற்கு உணர்வுள்ளவனாக இருந்தான். ஆனால் தேவனுக்குள் இருந்த எல்லாவற்றையும் இந்த மனிதனாகிய இயேசுவுக்குள் கண்டு அவனுடைய இருதயத்தில் அவனுக்கு பசியுண்டாயிற்று. அவன் ஒரு சபையின் அங்கத்தினராக, ஒருஅருமையான அங்கத்தினராக இருந்தான். ஒரு வேளை அவனுடைய தகப்பனார் ஒரு பெரிய நபராக சபையிலே தர்மகர்த்தாவாக இருந்திருக்கலாம். அல்லது அவர்களுடைய நிர்வாகத்திலே ஒரு மிக பெரிய பொறுப்பிலே இருந்திருக்கலாம். அந்த பையன் அவ்விதமான பிரமாணங்களிலே வளர்க்கப்பட்டு, அதை மிகுந்த பயபக்தியுடனும் மரியாதையுடனும் காத்துக் கொண்டான். ஆனாலும், அவனுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து அதைக் காட்டிலும் அதிகமான ஒன்றை கண்டடையும்படி ஏங்கிக் கொண்டிருந்தது. 33இந்த காலை வேளையில், அவ்விதமான அசலான ஒன்றை கண்டடைவதே இங்கிருக்கிற ஒவ்வொரு புருஷன் மற்றும் ஸ்திரீயினுடைய இருதயத்திலிருக்கிறதென்று நம்புகிறேன். நீங்கள் மறுபடியுமாக வந்து இரண்டாவது முறை முயற்சி செய்ய முடியாது என்று அறிவீர்கள். நீங்கள் இப்பொழுதே செய்தாக வேண்டும். ஒரு மரம் எந்த பக்கம் சாய்கிறதோ அந்த பக்கமே விழும். இனி மரித்த பின்பு மனம் திரும்பலாம் என்று எந்த வேதவசனமும் சொல்லவில்லை. இது தான் உங்களுடைய நேரம். மரித்த பிறகு உங்களுடைய பாவக் கடனை தீர்த்துக்கொள்ளலாம் என்ற உபதேசம் எவ்வளவுதான் பிரசித்தி பெற்றதாயிருந்தாலும் சரி; அவ்விதமான காரியம் வேதத்திலே எங்கேயுமில்லை. அது மக்கபீஸ் புத்தகங்களில் ஒன்றில் அல்லது ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது இதிலே சேர்க்கப்படவில்லை.அந்த ஒரு புத்தகத்திலே தான் மரித்த பின்பும் பாவக் கடனை தீர்க்க முடியும் என்று எழுதியிருக்கிறது.ஆனால் வேதத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. சொல்லப்போனால் இயேசு ''அதுவுமல்லாமல், எந்த மனிதனும் மரணத்திற்கு பிறகு அவரிடத்திற்கு போகக் கூடாதபடிக்கு ஒரு பெரும் பிளவு நடுவே உண்டாக்கப்-பட்டிருக்கிறது. அதை யாரும் கடந்து போனதுமில்லை, இனி போகப் போவதுமில்லை“ என்று சொன்னார். அது இந்த வாலிபன் மரித்த பின் அவனை குறித்த காரியமே; பாருங்கள் இயேசு சொன்னால் அது அவ்வளவுதான்; அது போதும். 34இப்பொழுது இந்த வாலிபன் இதிலே பங்குதாரராகும்படி பசியுள்ளவனாக இருந்தான் என்பதை காண்கிறோம். அல்லது ஒரு பங்குதாரராக அல்ல, ஆனால் கிறிஸ்துவுக்குள்இருக்கும் ஜீவனை உண்டு பண்ணுகிறதிலே பங்கு கொள்ளும்படியாகவே இந்த வாலிபன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இயேசு புதிய பிறப்பை கொடுக்கும்படியாகவே அங்கு இருந்தார். பாருங்கள். அதைத் தான் இன்றைய நாளிலும் நாம் கொண்டிருக்கிறோம்.நாம் தேவனில் ஒரு பாகமாக மாறி தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாகும்படி நமக்கு புதிய பிறப்பை பெற்றுக் கொள்ளும் தருணம் கொடுக்கப்-பட்டிருக்கிறது. புரிந்து கொண்டீர்களா? 35கவனியுங்கள், பாவத்தை போல, சபையும் அதினுடைய ஸ்தானத்தை அநேக நாட்களாக மறந்து போனது. ஒரு குருடன் இன்னொரு குருடனை வழி நடத்துகிறான். ஸ்தாபனமும் குருட்டுத்தனமாக அதற்கு பின்னாக நடந்து போய்க் கொண்டிருக்கிறது. கவனியுங்கள், நான் என்னுடைய பேனாவிலிருந்து ஒரு துளி கருப்பு மையை எடுத்து ஒரு கோப்பையிலே அல்லது ஒரு வாளி நிறைய ஸ்திரீகள் உபயோகிக்கிறதான சலவைக்குரிய கலவையில் (Bleach) போடுவேன் என்றால்... நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய சட்டையிலே ஏதாவது கறை இருந்தால், என்னுடைய தாயார் அந்த சாயம் படிந்த கறையை எடுப்பதற்கு கொஞ்சம் நிலக்கரி எண்ணெய்யை அல்லது கற்பூரத்தைல எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். அவர்கள் அந்த கறை எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடத்தில் மாத்திரம் தெளிப்பார்கள். ஏனெனில் அது ஒரே இடத்தில் இல்லை. ஆனால் இப்பொழுது ''சலவைக்குரிய கலவை“ என்ற ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். ஓ, அந்த சலவைக்குரிய கலவை கறையை உடனே எடுத்துவிடும். 36நல்லது, அங்கு தேவனுடைய நியாயப் பிரமாணத்தில், ஆட்டு குட்டியினுடைய இரத்தமானது பாவத்தை எடுக்கவில்லை. அது அப்படியே தெளிக்கப்பட்டது அவ்வளவுதான். மற்றும் மனிதன் பாவம் செய்தபோது, அவனுடைய பாவத்தின் நிமித்தம் அவன் திரும்பி வரக்கூடாத அளவிற்கு வெகு தூரம் தேவனை விட்டுப் பிரிந்து அந்த பெரிய பிளவை கடந்து போனான்.ஆனால் தேவனுடைய மென்மையான இரக்கமானது அவனுக்கு பதிலாக ஒன்றை ஏற்றுக் கொண்டது. இந்த பதிலான ஒன்று அனேக வருடங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அது பாவத்தை எடுக்க முடியவில்லை.அது பாவத்தை மூடினது. ஆனால் தேவன் அவருடைய சிருஷ்டிக்கும் வல்லமையைக் கொண்டு கன்னியின் கருவிலே எந்த பாலியல் உணர்வுமில்லாமல் ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார். அது பாவத்தை மாத்திரம் மூடவில்லை ஆனால் அதை முற்றிலும் நீக்கிற்று. அது மறுபடியும் தேவனுடைய சிந்தையில் ஒரு போதும் வரக்கூடாதபடிக்கு அவ்வளவு தூரம் கொண்டு போகப்பட்டது. அது அந்த பிளவுக்கு குறுக்கே ஒரு பாலத்தை உண்டு பண்ணவில்லை, ஆனால் அந்த பிளவையே தள்ளினது. இந்த துளி மை அந்தப் புட்டியிலே அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, அதில் நிறைய இருக்கும் சலவைக்குரிய கலவையிலே போடுவீர்களானால் நீங்கள் அதினுடைய நிறத்தை ஒருபோதும் திரும்பவும் கண்டுபிடிக்க முடியாது. 37இப்பொழுது நிறம் எங்கே இருந்து வருகிறது?நாம் நிறத்தை தயாரிப்பதை பார்க்கும் போது, எனக்கு அதை குறித்து தெரியாது. நான் ஒருவேதியியல் நிபுணர் அல்ல. எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன். நான் வேதியியல் சொற்க்களை கொண்டு பேசுகிறதை இங்கே வேதியியல் நிபுணர் யாராவது கேட்பார்களானால், நான் ஒரு மனநிலை சரி இல்லாதவன் அல்லது நான் எதைக் குறித்து பேசுகிறேனோ அதைக் குறித்து ஒன்றும் அறியாதவன் என்று நினைக்கலாம். ஆனால் நான் சொல்ல வருகிற அர்த்தத்தைக் கூற விரும்புகிறேன். இப்பொழுது அந்த நிறமானது ஒரு அமிலத்திலிருந்து வருகிறது என்று சொல்லலாம். அப்படியானால் அந்த அமிலம் எங்கே இருந்து வருகிறது? அதினுடைய பின்னனியை பார்ப்போமென்றால், இப்படியாக சொல்லலாம், ஒரு குறிப்பிட்ட அமிலமானது வேறு வகையான அமிலத்தோடு கலப்பதின் மூலம் இந்த நிறமானது கொண்டு வரப்படுகிறது. சொல்லப்போனால், உண்மையிலே ஒரே ஒரு நிறம் மாத்திரமே இருக்கிறது. அது வெள்ளை நிறம் மாத்திரமே. மற்ற எல்லா நிறங்களும் தாறுமாறாக்கப்-பட்டிருக்கிறது என்று நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். வெள்ளையை தவிர வேறு எந்த நிறமும் இருந்ததில்லை.அது ஒன்று மாத்திரம் தான் உண்மையான நிறம். இப்பொழுது இந்த இரசாயனத்தின் பிண்ணனியை சற்று நோக்கிப் பார்க்கலாம்.அது ஒரு வேளை அணுக்களிலிருந்து வருகின்றதென்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். இப்படியாக சொல்லலாம். அணு 'பி… ஒரு பங்கு 'பி', 'சி' நான்கு பங்கு அணுவையும் சேர்த்தால் அது கருமை நிறத்தைக் கொண்டுவரும். எட்டு பங்கு 'பி' அணுவை அது கொண்டிருக்கும் என்றால் அது இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தை கொண்டு வரும். அதே போல் மூலக்கூறுகள் மேல் மூலக்கூறுகளையும், மூலகூறுகளின் மேல் மூலக்கூறையும் சேர்க்கும் போது அது கருமை நிறத்தைக் கொண்டு வரும். இப்பொழுது இது எதைக் காட்டுகிறதென்றால், கருமை நிறத்தைக் கொண்டு வரும் பின்புலத்தில் ஒரு புத்திகூர்மை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இப்பொழுது நீங்கள் அதற்கும் பின்னாக நோக்கிப் பாருங்கள். அது சிருஷ்டிப்பாயிருக்கும் பட்சத்தில் அது சிருஷ்டிகரிடத்திலிருந்துதான் வந்தாக வேண்டும். ஒரு சிருஷ்டிகர் இல்லாமல் ஒரு சிருஷ்டி இருக்க முடியாது. அப்படியானால் எந்த நிறமானாலும் அது தாறுமாறாக்கப்பட்டது தான் என்று நாம் பார்க்கிறோம். 38மேலும் சுத்தமான கலப்படமில்லாத தேவகுமாரனுக்கு புறம்பே இருக்கும் யாவுமே தாறுமாறாக்கப்பட்டது தான். அப்படியெனில் பாவத்தைக் குறித்து என்ன? அது நீதி தாறுமாறாக்கப்பட்டதே. விபச்சாரத்தை குறித்து என்ன? அது இந்த பூமியை நிரப்பும்படியாக தேவனால் நியமிக்கப்பட்ட கிரியை தாறுமாறாக்கப்பட்டதே. பொய்யை குறித்து என்ன? அது உண்மை தவறாக பிரதிநிதித்துவப்படுவதே. ஆகவே பார்ப்பீர்களானால் முழுகாரியமும் தாறுமாறாக்கப்பட்டிருக்கிறது. வெள்ளை மாத்திரமே உண்மையான நிறம். இப்பொழுதுநாம் இதை மறுபடியும் வெள்ளை நிறத்திற்கு கொண்டு வரவேண்டும். இருப்பினும் அது கருப்பாகவேஇருக்கிறது. அது எங்கேயோ தாறுமாறாக்கப்பட்டிருக்கிறது. இந்த மையானது இந்த சாயத்தை எடுக்கக்கூடிய ரசாயனத்தில் கொட்டப்படும்போது, அது அந்த கருமை நிறத்தைத் திரும்பவும் அதினுடைய இடத்திற்கு அனுப்பி முழுவதும் வெள்ளையாகவே காணப்படும். முழுவதும் வெளுப்பாகவே இருக்கும் இனி ஒருபோதும் அந்த கருமை நிறத்தை நீங்கள் கண்டு பிடிக்க முடியாது. அதினுடைய கதை அத்தோடு முடிந்தது அவ்வளவுதான் (finished). 39இப்பொழுது உங்களுடைய எல்லா உணர்ச்சிகளும் அப்படிதான் இருக்கிறது. பெந்தெகொஸ்தே மக்களாகிய நாம் எகிறி குதித்து கூச்சலிடுகிறதைப் போல இருக்கிறது. அது சரிதான் என்று நான் விசுவாசிக்கிறேன். அன்னிய பாஷையிலே நாம் பேச விரும்புகிறோம். அது தேவனிடத்திலிருந்து வந்த வரம் என்று விசுவாசிக்கிறேன். ஆனால் நீங்கள்அவ்விதமாக உற்பத்தி செய்ய விரும்பும் யாவற்றையும் பிசாசு பாவனை செய்வான். அந்த பாவனை எதை காட்டுகிறதென்றால், அங்கு ஏதோ ஒன்று தவறாக இருக்கிறதென்று காட்டுகிறது. அதாவது, கிறிஸ்துவின் ஜீவன் எந்த அளவிற்கு சபைக்குள்ளே வரவேண்டுமோ அந்த அளவிற்கு பாயவில்லை என காட்டுகிறது. அவருடைய சரீரமாகிய இந்த மணவாட்டியும் அவள் எந்த விதானத்தில் போக வேண்டுமோ அந்த அளவிற்கு போகவில்லை என காட்டுகிறது. ஆகவே அது கடைசியாக எங்கேயோ ஒரு இடத்தில் தடைபட்டிருக்கிறது. கவனியுங்கள், உங்களுடைய பாவமானது அறிக்கை செய்யப்பட்டு, அவைகள் தேவ குமாரனுடைய இரத்தமாகிய அந்த வெளுப்பாக்கும் ரசாயனத்தில் கொட்டப்படும்போது, அது பாவத்தை நீக்கி, தேவனுடைய பார்வைக்கே இனி வரக்கூடாத அளவிற்கு அவருடைய மறதியின் கடலிலே போடப்படும். அதன் பிறகு அது ஒரு மனிதனை என்னவாக மாற்றும்? ஒரு தேவ குமாரனாகமாற்றும். தேவன் ஒரு போதும் உங்களை ஒரு பாவியாக நினைப்பதில்லை. நீங்கள் குமாரனும் குமாரத்தியுமாக இருக்கிறீர்கள். இனி உங்களுடைய பாவங்களை நினைவுகூரவே முடியாது. தேவன் அந்த வெளுப்பாக்கும் ரசாயனமாகிய அந்த மறதியின் கடலிலே அதை போட்டார். அந்த மறதியின் கடலானது உங்களுக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தமாயிருக்கிறது. எனவே நீங்கள் இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலே, நீங்கள் செய்த எந்த காரியத்தினாலும் அல்ல, ஆனால் அவருடைய கிருபையினாலே, நீங்களும் தேவனும், தகப்பனும் குமாரனுமாக ஆனீர்கள். நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்தியுமாய் அவருடைய ஆசீர்வாதங்களுக்கும் அவருடைய வல்லமைக்கும், அவருடைய ஜீவனுக்கும் பங்கு தாரர்களாயிருக்கிறீர்கள்.அவருடைய குமாரராய் நீங்கள் இருக்கிறதால், அவருடைய ஜீவன் உங்களுக்கு இருக்கிறது. ஓ, சபையாகிய நாம் அவைகளை பிரதிநிதித்துவப்படுத்துவோமானால்... 40''நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களுக்குள் இருக்கும் போது நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ“ என்று இயேசு சொன்னதில் வியப்பொன்றுமில்லை. பாருங்கள். யோவான் 14:12-ல் என்னை விசுவாசித்து, அறிக்கை செய்து, என்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன், நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான். ஏனெனில் தேவன் கிறிஸ்துவுக்குளிருந்தது போலவே ஒரு விசுவாசிக்குள்ளுமிருப்பார். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருந்த முழுவதும் அல்ல, அவர் எப்படி இருந்தாரோ அவ்விதமாகவே உங்களுக்குள்ளுமிருப்பார். ஏனெனில் நீங்கள் இயேசுகிறிஸ்துவின் மூலம் தேவனுடைய குமாரனாக இருக்கிறீர்கள். 41ஓ, எப்படியாக இந்த வாலிபன் அவனுடைய சபை வாழ்கையைக் கொண்டு, கர்த்தராகிய இயேசுவுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என்று கண்டான். மற்றும் அவன் இயேசுவினிடத்தில் வரும்படியாக அவனுக்குள் இந்த தொல்லையானது இருந்தது. இருப்பினும் அது அவனுடைய சபைக்கு விரோதமானது. ஆனால் அவன் தைரியத்தைக் கொண்டிருந்தான். அவரைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தைக் கொண்டிருந்தான். அதைக் கண்டு பிடிக்கும்படியாக பசியுள்ளவனாய் இருந்தான். அதுவே அவனை கர்த்தராகிய இயேசுவினிடத்தில் கொண்டு வந்தது. மேலும் இந்த வாலிபனைக் குறித்து நினைக்கும்போது அவனுக்கு இந்த முதலீட்டை செய்யும்படி ஒரு தருணம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவனுக்கோ அந்த முதலீட்டிலே விருப்பமில்லாதிருந்தது. அவன் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து வாழ்ந்து வருவது அவனுக்கு நலமாய் இருந்தது. அவன் செய்து வருகிற காரியத்தைக் கொண்டு ஜீவிப்பது நலமாய் இருந்தது, அவ்விதமான காரியங்களில் சேர்ந்து செய்வது எல்லாம் அவனுக்கு நலமானதாய் இருந்தது. ஆனால் தன்னை ஒப்புக் கொடுக்க மனமில்லை. 42இப்பொழுது அங்கே தான் பெரிய தொல்லையை இன்றைய நாளிலே சந்தித்து வருகிறோம். சபைக்கு வேத வாக்கியம் தெரியும். இதோ வேதபாடசாலையிலிருந்து வந்திருக்கிற இந்த வாலிபன், மற்றும் அங்கே உட்கார்ந்திருக்கிற பாப்டிஸ்டு சகோதரர், இவர்களுக்கு வேதவாக்கியம் தெரியும். அவர்கள் இந்த வேத வாக்கியத்தின் மாணவர்கள். இப்பொழுதும் அவர்களிடத்தில் ஏதாவதொன்றை சொன்னால், 'நல்லது, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம், அதை ஏற்றுக்கொள்ளுகிறோம்“ என்பார்கள். சொஸ்தமாக ஒரு பாட்டில் மருந்து இருந்தால் போதும் என்பதை போல இருக்கிறது. பாருங்கள், நன்னெறிகள் மூலம் சொஸ்தமாகுவது அல்ல. அது கிறிஸ்துவின் ஜீவனை மறுபடியும் பிறப்பிப்பதாகும். பாருங்கள். நீங்கள் சுவிசேஷத்தை எடுப்பீர்களானால்,அப்போது நீங்கள் அந்த சுவிசேஷத்தின் ஒரு பாகமாவீர்கள். அதன் பிறகு நீங்கள் அதில் ஒரு பாகமாகும் போது, பேதுரு, யாக்கோபு, யோவான், அவர்களோடு இருந்தவர்கள் பெந்தெகொஸ்தே நாளில் செய்ததைப் போல உங்களுடைய ஜீவியமும் இன்னொரு ஜீவிக்கின்ற அப்போஸ்தல நடபடிகளாக இருக்கும்.வேறு வழியே இல்லை. அவ்விதமாகத் தான் இருக்கும் 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள்பின் தொடரும்“ என்று மாற்கு 16-ல் இயேசு சொல்லியிருக்கிறார். ஆனால் மக்கள் அதை கற்றுக்கொள்ளுகிறார்கள். அதைக் கற்றுக் கொள்ள அவர்கள் வேதபாடசாலை பள்ளிக்குச் செல்கிறார்கள்.அவைகளில் எதுவும் தங்களில் இருக்க விருப்பமில்லை. இருப்பினும் அவர்கள் அதை பெற்றதாக நினைக்கிறார்கள். அது உண்மை. அவர்கள் அதை பெற்றோம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய கிரியை எல்லா வார்த்தைகளைக் காட்டிலும் அதிகம்பேசுகிறது. பாருங்கள், நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுடைய ஜீவியம் நிரூபிக்கும். 43மேலும் இந்த வாலிபன் இதிலே விருப்பம் இல்லாதவனாக இருந்தான். சொல்லப்போனால், இந்த முதலீடு ஏதோ ஒருஇரவிலே நடக்கக் கூடிய காரியமல்ல. அவனை ''வா, உடனே வந்து இதிலே எகிறிக் குதி“ என்பதைப் போன்று இயேசு கேட்கவில்லை. இயேசு தன்னை முழுமையாக தேவ குமாரனாக அடையாளப்படுத்திக் கொண்டார். எப்படி ஒரு மனிதனால் மரித்தவனை வைத்த கல்லறைக்குச் சென்று ''லாசருவே, எழும்பி வா“ என்று சொல்லமுடியும்? அது தேவன் அல்லவா? அந்த இரவிலே பத்தாயிரம் பேய்கள் கடலிலேஅவரையும் அவருடைய சீஷர்களையும் மூழ்கடிப்போம் என ஆணையிட்டு வந்த போது, எப்படி ஒரு மனிதன் படகின் கயிற்றின் மேல் நின்று ''அமைதியாய் இரு” என்று அவைகளைப் பார்த்துச் சொல்ல, எப்படி அவருக்கு காற்றும் அலைகளும் கீழ்படிந்தன? 44எப்படி ஒரு மனிதன் மனித இருதயத்திற்குள் பார்த்து, ''நீ இன்ன இன்ன காரியங்கள், அது போன்று காரியங்களைச் செய்தாய்“ என்று சொல்லமுடியும்? அது தேவனாகத் தான் இருந்தாக வேண்டும். அது முற்றிலுமாக நிரூபணமாக்கப்பட்டது. அவர் ஏதோ மாயையான எண்ணங்களின் மேலாக அல்லது ஏதோ மத சடங்குகளின் மேலாக அல்லது தவறான காரியத்தின் மேலாக முதலீடு செய்யும்படி கேட்கவில்லை. அவனுடைய முதலீடு எதை கொடுக்கும் என்று தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. அவன் ஒரு வேளை ''அதைக் குறித்து எனக்கு தெரியாது“ என்று சொல்லக் கூடும். ஆனால் பாருங்கள் அவன் அவரை 'நல்ல போதகரே” என்று அழைத்தான். மற்றும் அதில் ஏதோ இருக்கிறது என்று அறிந்தான் ஆனால் அவன் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளஆயத்தமாக இல்லை. அவன் ஒரு காரியத்தை செய்யும்படி இயேசு கேட்டிருந்தார். அது தான் இன்றைய நாளில் இருக்கும் மக்களுக்கு இருக்கிற பெரிய தடங்கல். அவர்கள் தேவன் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறார்கள். தேவன் இல்லையென்று எந்த நல்ல புத்தியுள்ள மனிதனும் சொல்லமாட்டான். அவன் தேவனை இனங்கண்டு கொள்ளவில்லை என்றால், அவன் சரியான மனம் இல்லாதவன் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. அவன் ஒரு முட்டாள். “முட்டாள், தேவன் இல்லையென்று தன்னுடைய இருதயத்திலே சொன்னான்” என்று வேதம் சொல்லுகிறது.இப்பொழுது அவன் தேவன் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறான். ஆனால் இன்னுமாக அவனுடைய முதலீட்டை இயேசு சொன்ன விதானத்திலே இந்த வாலிபன், இந்த வியாபாரி தன்னை வேறு பிரித்துக் கொள்ள விருப்பம் இல்லாதவனாக இருந்தான். 45அவன் இயேசுவுக்குள், எந்த மனிதரும் கொண்டிராத ஒன்றை பார்த்தான். ஆசாரியர்கள் கொண்டிராத ஏதோ ஒன்றை அவருக்குள் கண்டான். ரபிக்களும் போதகர்களும் மற்றும் எவரும் கொண்டிராத ஒன்றை அவருக்குள் கண்டான். இயேசுவுக்குள் இருந்ததை இனங்கண்டு கொண்டான். அவர் தேவன் என்று இனங்கண்டு கொண்டான். இருப்பினும் 'ஓ, நான் உள்ளே பிரவேசிக்க (சுதந்தரித்துக் கொள்ள) இந்த காரியங்களெல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை, நான் போய் அதை கண்டடைவேன்“ என்று எண்ணினான். ஆனால் அங்கே பிரவேசிக்க ஒரே வழி மாத்திரமே இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டான். அதை தான் இந்த உலகம் இன்று கற்றுக் கொள்ள வேண்டிய காரியம். கிறிஸ்துவே அந்த வழி. எந்த சபையும் அல்ல. இயக்கத்தோடு இணைவது அல்ல. எந்த ஸ்தாபனமும் அல்ல. அவர்களுக்கு தெரிந்த மட்டும் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அவர்களுடைய காரியத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இது கிறிஸ்துவின் புதிய பிறப்பின் நேரமாக இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 46இதோ இங்கு அமர்ந்திருக்கும் இப்பட்டணத்து வியாபார மனிதர்களே உங்களுடைய சபையை நான் கண்டனம் செய்யவில்லை. நீங்கள் இங்கே இருப்பதற்காக உங்களை பாராட்டுகிறேன். ஆனால் இந்த வேளையிலே உங்களுக்கு ஒரு உறுதியான ஒன்றை விற்க முயற்சிக்கிறேன். நான் விற்க முயற்சிக்கவில்லை, அதற்கு, இந்த நிறுவனத்திற்கு நானே பிரதிநிதி. மற்றும்இந்த ஆவணம் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது என்று சொல்ல விரும்புகிறேன். பாருங்கள்? மேலும், அதே கிரியை மூலம், அதே அடையாளத்தின் மூலம், அதே சுவிசேஷத்தின் மூலம், அதே தேவனுடைய வார்த்தையின் மூலம், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் என்று இந்நாளிலும் இப்பூமியிலே நன்றாக அடையாளங் காணப்பட்டார்; அவர் அன்று எவ்விதம் அடையாளம் காணப்பட்டாரோ அவ்விதமாகவே பரிபூரணமாக அடையாளம் காணப்படுகிறார். இப்பொழுது இந்த காலை வேளையிலே நீங்கள் ஒரு நோக்கத்திற்காக இருக்கிறீர்கள். பாருங்கள்? எந்த காரணத்திற்காக இங்கு இருக்கிறீர்கள்? உங்களுக்குள் இருக்கும் அந்த மெல்லிய சத்தம் இங்கே வரும்படி சொல்லிற்று. இப்பொழுது நீங்கள் சபையை விட்டு விடுங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் சபையை விட்டு வரும்போது எவ்விதமாக இருந்தீர்களோ அதை காட்டிலும் சிறந்த நபராக போங்கள் என்று சொல்லுகிறேன். அப்போது நீங்கள் மலையின் மேல் இருக்கிற ஒளியாய் இருப்பீர்கள். அதாவது எந்த ஒரு கூடையாலும் மூடப்படாத எரிகிற மெழுகுவர்த்தியாக இருப்பீர்கள். நீங்கள் நித்திய ஜீவனைக் கொண்டிருப்பீர்கள். 47இன்று இந்த நாளில் மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கே இருந்து, இந்த ஸ்தானத்தில் சரியாக வைக்கும். வேதம் இங்கே இவ்விதம் சொல்லுகிறது. அந்த வசனத்தை இங்கே எழுதியிருக்கிறேன். அதை நான் சொல்ல விரும்புகிறேன். வெளிப்படுத்தல் மூன்றாம்அதிகாரத்தில், லவோதிக்கேயா சபையே கடைசி சபைக் காலம். நாம் கடைசி காலத்திலே ஜீவிக்கிறோமென்றும் இதுவே கடைசி சபைக் காலமென்றும் நாம் எல்லோரும் விசுவாசிக்கிறோம். இப்பொழுது இந்த சபைக்காலத்தை அந்த ஐசுவரியவானான, அதிகாரியான வாலிபனோடு ஒப்பிட்டு பாருங்கள். ஒப்பிடுங்கள். இப்பொழுது, லவோதிக்கேயா சபை தான் ஒரு ஐசுவரியவான் என்றும், திரவிய சம்பண்ணன் என்றும், எனக்கு ஒரு குறைவுமில்லை என்றும் சொல்லுகிறது என்று இயேசு சொல்லவில்லையா? இன்றைக்கு சபையினுடைய நிலை அவ்விதமாக இருக்கவில்லையா? இருப்பினும், கிறிஸ்து தன்னை மூன்று சபைக் காலங்களின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அதாவது வரங்கள் திரும்ப அளிக்கப்படுதல் மூலம் தன்னுடைய வார்த்தையிலே அவர் தன்னை லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தே காலத்திலே வெளிப்படுத்தினார். இப்பொழுது அவர் தன்னையே அடையாளப்படுத்தி இருக்கிறார். பாருங்கள், இந்த காலையிலே ஐஸ்வரியமுள்ள அதிகாரம் படைத்த வாலிபனே‚ சிக்காகோவின் வியாபாரிகளே... 48எல்லா சபை காலங்களிலும் இயேசு சபைக்குள்ளே இருந்ததைப் பார்க்கிறோம், ஆனால் லவோதிக்கேயா காலத்திலோ அவர் வெளியே நின்று உள்ளே வரும்படி கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார். (ஒரு சகோதரன் சொன்னது போல) சபைகள் கதவை அடைக்குமளவிற்கு இந்த காலத்திலே, அவருடைய சபையிலே, கிறிஸ்துவின் சாயல் பரிபூரணமாய் பிரத்தியட்சமாயிற்று. ஆனால் அவர் இன்னுமாக அன்புடன் 'யாராகிலும் பசியாய், தாகமாய் இருப்பவர்கள் உண்டா“ என்று தட்டிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அதை புரிந்துக் கொண்டீர்களா? நீங்கள் கதவு மூடப்பட்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். இது லவோதிக்கேயா காலம். அவ்விதமாகத் தான் இருக்குமென்று வேதம் சொல்லிற்று. 49உங்களுடைய ஸ்தாபனம் இப்படிப்பட்ட செய்திக்கு கதவை அடைக்குமென்றால், இதே போல் செய்தியாளனுக்கு அடைக்கு என்றால், எனக்கு அல்ல, நான் உங்களுடைய சகோதரன்; உங்களுடைய சக ஊழியக்காரன். ஆனால் பரிசுத்த ஆவியானவரே அந்த செய்தியாளன். அவர் இந்த நோக்கத்திற்காக கிறிஸ்துவாலே பரிசுத்தப்படுத்தப்பட்ட சபையாகிய மனிதர்கள் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார். இதோ, இந்த நித்திய ஜீவனின் மேல் முதலீடு செய்யும்படி உங்களுக்கு முன்பாக ஒரு தருணமானது வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய வியாபாரம் நியாயமானதாகவும் மிகப் பெரியதாகவும் இருக்கலாம். ஆனால் உங்களுடைய சொந்த ஜீவன் இரட்சிக்கப்படுவதைக் காட்டிலும் வேறு எந்த ஒரு வியாபாரமும் பெரிதயல்ல. உங்களுக்கு அந்தத் தருணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 50உங்களுடைய சபை அவரை முழுமையாக வெளியே தள்ளலாம். ஆனால் இயேசு ஒருபோதும் சபைக்காக வந்ததில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட குழுவிற்காகவும் வரவில்லை. அவர் தனிப்பட்ட நபருக்காக வந்திருக்கிறார். “நீ பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வாய்”. அது ஒரு தனிப்பட்ட நபருக்காக. அவர் அதற்காகவே வருகிறார். இதோ, அந்த ஐஸ்வரியமுள்ள வாலிப தலைவன் வெளிப்படையாய் மறுத்துத் தள்ளின அதே நபர் மேல் முதலீட்டை செய்யுமாறு அதே தருணம் இந்த லவோதிக்கேயா சபை காலத்திற்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதே விதமாக தான் லவோதேக்கியா சபையும் அவரை வெளியே தள்ளி, அதை வெளிப்படையாய் மறுத்து, தள்ளிப் போடுகிறது. அவர்கள் எதை நேசிக்கிறார்கள் என்றால்... 51அந்த வாலிப தலைவன் அதற்கு என்ன செய்தான் அல்லது என்ன சொன்னான்? ''அவன் மிகுந்த ஆஸ்தியை கொண்டிருந்தபடியால் துக்கமடைந்தவனாய் போய்விட்டான்“. அது கிடைக்கப்பட்டதிலேயே மகத்தான தருணம். இருப்பினும் அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்ததினால் அவனுடைய ஆஸ்தி கறைபடிந்து விடுமோ என்று எண்ணினான். கிவானிஸ் இயக்கத்திலே அல்லது பெரிய விடுதிகளிலே அல்லது சபையிலே, சொல்லப்போனால் ஸ்தாபனத்திலே போதகரும் கூட இப்பேற்பட்ட பிரசித்திபெற்ற மனிதனாக இருப்பர்களானால், அவர்கள் அதே தருணத்தை மறுத்து உணர்சியற்றவர்களாய் தள்ளிவிட்டுப் போவதில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில் அது நீங்கள் சபையிலே சேகரித்த பாரம்பரிய செல்வாக்கை கெடுத்துவிடும். இதோ இங்கே உட்கார்ந்து இருக்கிறதான சில வியாபாரிகளாகிய நீங்கள் ஸ்தாபன சபையிலே உக்கிரானக்காரராக இருக்கிறீர்கள். இந்த காலை வேளையிலே நீங்கள் சபையிலே அல்லது ஒரு இயக்கத்திலே சொத்து மேற்பார்வையாளராக இருப்பதே மிகவும் போதுமானதாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் இதை தள்ளிவிட்டு போவீர்களாவென்று வியக்கிறேன். இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அந்த ஐஸ்வரியவானான வாலிப தலைவனுக்கும் அது கொடுக்கப்பட்டிருந்தது. அவன் அதை தள்ளிப் போட்டான். அதே காரியத்தை தான் கடைசி காலத்திலே சபை காலமும் செய்யும் என்று கிறிஸ்து சொன்னார். இப்பொழுது சிகாகோ மக்கள் நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தே ஆகவேண்டுமென்ற நிலைமைக்கு வந்திருக்கிறீர்கள். காலம் கடந்து போகிறது நீங்கள் இப்பொழுதே செய்தாக வேண்டும். அவருடைய ஆவியின் படி பிறக்க கிறிஸ்துவுக்காக உங்களுடைய தீர்மானத்தை எடுங்கள். 52இப்பொழுது இந்த ஐஸ்வரியவான் உலகத்தை நேசித்தபடியால் இப்படி செய்தான். அவன், கர்த்தராகிய இயேசுவோடு கொண்டிருக்கிற ஐக்கியத்தைக் காட்டிலும் அவனுடைய ஸ்தாபனத்தோடு கொண்டிருக்கிற ஐக்கியத்தையே அதிகம் நேசித்தான். இந்த காலை வேளையிலே அனேகர் 'ஆ, நான் அப்படி செய்வேனென்றால், நானும் பெந்தெகொஸ்தேயினரோடு ஒருவனாக எண்ணப்படுவேன், பரிசுத்த உருளைகளிலொன்றாக எண்ணப்படுவேன்“ என்று சொல்லக்கூடும். இப்பொழுது உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறது?உங்களுடைய சபையிலே இருக்கிறதா? அது உங்களுடைய வியாபாரத்திலே இருக்கிறதா? அல்லது பரத்திலே இருக்கிறதா? 'உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே தான் உங்களுடைய இருதயமுமிருக்கும்”.ஆகவே நீங்கள் ஏன் உங்களுடைய ஜீவியத்திற்காக முதலீடு செய்யக் கூடாது? உங்களுடைய வியாபாரம் ஒரு நாளில் சாம்பலாகப் போய்விடும். 53ஒரு சகோதரன் அல்லது சகோதரர்கள் ஒரு பெரிய கடல் அலை வருமென்று தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஒருவேளை இருக்கலாம். அதைக் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு காரியத்தைச் சொல்லுகிறேன். இந்த பூமி எரிந்து போகுமென்று வேதம் சொல்லுகிறது. வருகிற ஒரு நாளில் சிகாகோவில் நடக்கப் போவதை, அவ்விதமான தீயை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை; மேலும் தேவன் நீதியுள்ள தேவன். அவர் தேவனுடைய கோபாக்கினையிலிருந்து சிகாகோவை தப்ப விடமாட்டார். ஒரு முறை என்னுடைய நண்பர் ஜாக் மூர் இவ்விதம் சொன்னார். 'தேவன் இந்த சந்ததியார், தாங்கள் சுவிசேஷத்தை உதறித் தள்ளிவிட்டு, அவர்கள் செய்கிறகாரியங்களை அப்படியே செய்யும்படி விட்டுவிட்டு, அவர்கள் பாவத்தோடு வாழ்கிற ஒழுக்கக்கேடான ஜீவியத்தை ஜீவிக்கும்படி அனுமதித்து, இவர்களை இப்படிப்பட்ட காரியங்களை செய்ய அனுமதித்து அப்படியே விட்டுவிடுவார் என்றால், அவர் சோதோம் கொமோராவை எழுப்பி அவர்களை எரித்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டவராய் இருக்கிறார்“. 54ஆகையால் அவர்கள் அதை உதறித் தள்ளிவிட்டு அதை தவிர்த்ததினால் கிறிஸ்துவை ஒருவேளை நேராக சந்தித்தார்கள். கிறிஸ்துவின் அசைவு ஒரு போதும் உலக புகழ்பெற்ற காரியமாக இருந்ததில்லை. எப்பொழுதும் தாழ்மையிலே இருந்தது. அவர் இந்த உலகத்திலே அவருடைய ஊழியத்தின் நாட்களிலே, சொல்லப்போனால், பாலஸ்தினாவிலே அவர் கடந்து போகுமட்டுமாக அவரைக் குறித்து ஒருவேளை மூன்றில் ஒரு பங்கு யூதர்களுக்குக் கூட தெரியாது. பாருங்கள்? பார்த்தீர்களா‚ அது காலத் தாமதமாகுமட்டும் அவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்தார்கள். ஆனால் இந்த காலை வேளையிலே, வியாபாரிகளாகிய நாம் எல்லாவற்றையும் விட்டு, உலகத்தில் நமக்குப் பிரியமானவைகளை எல்லாம் புறம்பே தள்ள ஆயத்தமாகி, பரலோகத்திலே நம்முடைய பொக்கிஷங்களை கண்டடைய, நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் முதலீட்டை செய்யும்படி நமக்கு விசேஷித்த நாள் நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறதென்று நினைத்துக் கொள்ளலாம். ''உன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றி வா“ என்று இயேசு சொன்ன வண்ணமாகச் செய்யுங்கள். உங்களுடைய புகழை எடுத்துக் கொண்டோ அல்லது, ''மகத்தான மருத்துவரே வருக என்று வரவேற்கிறோம்; உங்களை இங்கே கொண்டிருப்பது மிக மகத்தானது. ஓ, டீக்கன் அவர்களே, மிகவும் நல்லவரே...”என்று சொல்லுகிறவர்களிடம் அல்ல. பாருங்கள் இது சிலுவையைக் கோருகிறது. அவர்கள் உங்களை ''பயித்தியக்காரன் மதவெறியன்“ என்று அழைக்கக்கூடும். பவுல் சொன்ன வண்ணமாக ''மதபேதம் என்று சொல்லுகிறபடியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு நான் ஆராதனை செய்கிறேன்” என்று நீங்களும் சாட்சி கூறலாம். பாருங்கள்? இப்படிப்பட்ட தீர்மானங்களை எடுத்தவர்கள் நமக்கு முன் இருந்தார்கள். 55பரிசுத்த பவுலையும் ஐஸ்வரியவானான வாலிபத் தலைவனையும் இருவரையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பவுல் ஒரு மனிதனாக அவனுக்கு முன்பும் இந்த மகத்தான தருணமானது வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவனோ அதை ஏற்றுக்கொண்டான். அதன் பின் நீங்கள் அவர்களுடைய பிரதிபலனைப் பார்த்து உங்களுடைய பிரதிபலன் எவ்விதமாக இருக்கப் போகிறது என்று உங்களைப் பொருத்துங்கள் . நீங்கள் மாறாத தேவனுடைய வார்த்தையின் மேல் அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் ஆதாரப்படுத்தலாம். தேவன் ஒரு காரியத்தை செய்து அதன் பிறகுஅதை சரிபடுத்த மாற்று காரியத்தை செய்து நான் முதலில் தவறு செய்து விட்டேன் என்று சொல்லமாட்டார். தேவனால் மாற முடியாது. அவர் தேவன். தேவன் வார்த்தையாக இருக்கிறார். 56இப்பொழுது இந்த வார்த்தை தேவ குமாரன் என்று நன்கு அடையாளப்படுத்தப்-பட்டிருக்கிறது. அவன் எந்த மனிதனும் கொண்டிராத ஒன்றை இயேசுவுக்குள் கண்டான். ஆனால் அதனுடைய விலை மிக அதிகமாக இருந்தது. இன்று லவோதிக்கேயா சபைக்கும் அது மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் ஞாபகத்தில் கொள்ளுங்கள், அவர்கள் தேவாலயத்துக்கு வெளியே சென்றார்கள். ஏனெனில் அவரை தேவாலயத்திற்கு வெளியே போட்டார்கள். அவர்கள் தேவாலயத்திலே அவருக்கு இடத்தை கொடுக்கவில்லை. இன்று கிறிஸ்துவை ஸ்தாபனத்துக்கு வெளியே போடுகிறார்கள். அவர் உண்மையான ஜீவிக்கின்ற பிரதியட்சமாய், முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டவராய், எந்த மனிதனும் இதற்கு விரோதமாய் எழும்பாதபடி தேவனுடைய வார்த்தை நிரூபணப்-படுத்தப்பட்டதாய், அன்று என்ன செய்தாரோ அதே காரியத்தை, அவருடைய ஜீவன் மக்களுக்குள்ளாக ஜீவித்து கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினார் என்று நிரூபித்து வருகிறார். அதை நிச்சயமாகவே ''பிசாசு, என்றும் “குறி சொல்லுகிறவர்” என்றும் மற்றும் எல்லாவற்றையும் சொல்லி அழைக்கப்பட வேண்டும். ஆனால் வார்த்தை மாறவில்லை என்பதை ஞாபகத்தில் கொண்டிருங்கள். அதற்கு விரோதமாக ஒரு வார்த்தையைப் பேசினாலும் அது மன்னிக்கப்படமாட்டாது. அது இந்த உலகத்திலும் அல்லது வரப்போகிற உலகத்திலும் ஒரு போதும் மன்னிக்கப்பட மாட்டாது. 57இது தான் கடைசிச் சபை காலம். இது வேறெந்த காலத்திலும் நடக்க முடியாது. அது இந்த காலத்தில் தான் நடக்க வேண்டியதாய் இருக்கிறது. ஒவ்வொரு கடிகாரமும்...நமக்கு மாத்திரம் இருந்தால், இதை ஒவ்வொன்றையும் விவரித்து நிரூபிக்கலாம். தேவனுடைய வார்த்தை இப்பொழுது நிறைவேறியிருக்கிறது. கடைசியான வார்த்தை என்னவெனில்... வெளியே அழைக்கப்பட்ட சபை ஆபிரகாம் சோதோமுக்கு ஒப்பணையாக இருக்கிறது. இப்பொழுது அவர் சோதோமை குறித்து மிக உறுதியாக வெளிப்படுத்தினார் என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். பாருங்கள்? இப்பொழுது அவர் ''சோதோம் நாட்களில் நடந்தது போல, லோத்து நாட்களில் நடந்தது போல“ என்றார். நவீன பில்லி கிரகாமை கவனியுங்கள். அவர்கள் தூதர்கள். சோதோமுக்கு அனுப்பப்பட்ட செய்தியாளர்கள். அவர்கள் நாற்பது பேராவது கிடைப்பார்களா என்று மக்களை வெளியே அழைத்து கொண்டிருக்கிறார்கள். சொல்லப் போனால், பத்து பேர் கிடைத்தால் தேவன் சமரசமாகிவிடுவார். ஆனாலும் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த மகத்தான பில்லி கிரகாம் மற்றும் மெதொடிஸ்டு நபர் ஜாக் ஷூலர், மேலும் பெந்தெகொஸ்தே நபர் ஓரல்ராபர்ட்ஸ், இந்த ஸ்தாபனங்களெல்லாம் அங்கே பாபிலோனிலே அவ்வளவாக இணைந்து செயல்படுகிறார்கள். 58ஆனால் நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாம் இவைகள் எதற்குமே பிரதிநிதி அல்ல. அவன் இந்த பட்டணத்தை தேடவில்லை. அவன் ஒரு இராஜ்ஜியத்தையே தேடினான். ஆ, அவனோடு ஒரு குழுவைக் கொண்டிருந்தான். அந்த மூவரில் ஒருவர் அங்கேயே அவனோடு தரித்துஅவர் யார் என்று அவனுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பித்தார். அவருக்கு பின்புறம் கூடாரம் இருக்க சாராள் அந்த கூடாரத்துக்குள் என்ன சொன்னாள் என்பதை அறிந்தார் . அது ஆவியின் பகுத்தறிவு. இயேசு வெளிப்படையாக சொல்லுகிறார்... சோதோம் எரிந்து போகு மட்டும் வேறெந்த ஒரு அடையாளமும் செய்யப்படவில்லை. அதே போல், அக்கினி விழுவதற்கு முன் கிறிஸ்து அவருடைய வல்லமையிலே முழுமையாய் அவருடைய சபையிலே வெளிப்படுகிறதை சபை கடைசியாகக் காணும். ஞாபகத்தில் கொள்ளுங்கள் லோத்துவின் நாட்களில் தான் வானத்திலிருந்து அக்கினியானது விழுந்தது. நோவாவின் நாட்களில் அல்ல. அவருடைய நாட்களில் வெள்ளம் வந்தது. ஆனால் லோத்துவின் நாட்களிலிருந்து எவ்விதமான ஊழியம் வரப்போகிறதென்று கிறிஸ்து வெளிப்படுத்தினார். இப்பொழுது அதே விதமாகத்தான் பரிசுத்த ஆவியானவர் அவருடைய சபையிலே கிரியைச் செய்கிறார். அன்று இருந்தது போலவே லவோதிக்கேயா சபையின் நிலைமையும் இருக்கிறது. 59இப்பொழுது இந்த மனிதன் ஏன் இந்த திட்டத்தில், அதனுடைய உரிமையாளர் மேல் முதலீடு செய்ய விருப்பமில்லாமல் போனதென்று பார்க்கலாம். காரணம் என்னவெனில் அவன் அதிகமான ஆஸ்தியை அங்கே கொண்டிருந்தான். அதை அவன் விட்டுவிட விரும்பவில்லை. இன்றைக்கு சபையிலிருக்கக் கூடிய பிரச்சனையே அது தான். புத்தியுள்ள எந்த ஒரு மனிதனும், அது போப்பானாலும், சர்வாதிகாரம் கொண்டவரானாலும், அல்லது யாரானாலும் சரி, அவர்களால் எழும்பி நின்று 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்“ என்று இயேசு கிறிஸ்து சொல்லவில்லை என்று மறுதலிக்கமாட்டான். எது வரைக்கும் தொடரும்? ''இந்த உலக முழுவதிலும், எல்லா சிருஷ்டிப்பு” வரைக்கும். மற்றும் ''இந்த உலகம், காஸ்மாஸ் எனப்படுகிற இந்த உலக ஒழுங்கு இனி என்னைக் காணாது“ என்று இயேசு சொன்னதை அவர் சொல்லவில்லை என்று சொல்ல முடியாது. சபை ஒழுங்குகள் உலகத்திற்கு உள்ளேயும், உலகத்திற்கு உரியதாயும் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். 60எத்தனை புத்திசாதுரியம் கொண்டவர்கள் எழும்பினாலும் சரி, தேவனுடைய இராஜ்ஜியம் ஒரு போதும் உலகத்திற்குரியதாக இருந்ததில்லை. நான் அந்த மக்களை கடிந்துக் கொள்ளவில்லை. ஆனால் பிசாசு செய்த தந்திரத்தை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன். அவர்கள் எவ்வளவு பிரசித்தி பெற்றதாயிருந்தாலும் சரி, அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. அவர்களால் அப்படி செய்யமுடியாது. ஒருத்துவக்காரர்களே நீங்கள் எல்லா திருத்துவக்காரர்களும் உங்களோடு இணையும்படி விரும்புகிறீர்கள். பெந்தெகொஸ்தேகாரர்களே நீங்கள் விரும்புவது...திருத்துவக்காரர்களே நீங்கள் எல்லா ஒருத்துவக்காரர்களும், சர்ச் ஆப் காட் அவர்களும் இன்னும் அது போன்று முப்பதிற்கும் மேற்பட்ட ஸ்தாபனங்களோட சேர்ந்து ஒன்றாக வேண்டுமென்று விரும்புகிறீர்கள். மெதொடிஸ்டு, பாப்டிஸ்டு போன்றவர்களாகிய நீங்களும் அதே வழியைத் தான்பின்பற்றுகிறீர்கள். 61இந்த வாரத்திலே சபைகள் கூட்டு சங்கமானது பிரச்சனைகளை குறித்து கலந்தாலோசிக்க எல்லோரும் ஒன்றாக இணையும்படி விரும்புகிறார்கள். அவர்கள் அதை நிச்சயம் செய்வார்கள். அவர்கள் 'மிருகத்தின் சொரூபத்திற்கு சத்துவங் கொடுக்கப்பட்டது“ என்று வேதம் சொன்னதைச் செய்வார்கள். அதனுடைய பின்னனி எங்கிருந்து வருகிறதென்று கவனித்தீர்களா? மிருகம் என்றால் வல்லமையைக் குறிக்கிறது. அது நிச்சயமாகவே ஒரு வல்லமையாக இருக்கும். ஆனால் தவறான வல்லமையாக இருக்கும். அவருடைய இராஜ்ஜியம் இந்த உலகத்திற்குரியது இல்லை என்று இயேசு சொன்னார். இது அவருடைய இராஜ்ஜியமாக இருந்திருக்குமென்றால், அவருடைய பிரதிநிதிகள் சண்டைபோட வேண்டியிருக்கும். ஆனால் ''என்னுடைய இராஜ்ஜியம் மேலே இருக்கிறது“ என்றார். பார்த்தீர்களா? தேவனுடைய இராஜ்ஜிய என்று சொல்லும்போது, ஏதோ ஒரு மகத்தான காரியத்தைச் செய்கிற இயக்கம் அல்ல. அது தேவனுடைய வல்லமை, பரிசுத்தாவி மனித ஜீவியத்திலிருப்பதேயாகும். 62துரிதமாக பார்க்கலாம். உங்களை அதிக நேரம் கொண்டிருக்க விரும்பவில்லை. ஏற்கனவே அதிக நேரம் உங்களை வைத்துவிட்டேன். சில நிமிடம் எடுத்துக் கொள்ளலாமா? ஆம், நாம் வேகமாக பார்க்கலாம். நான் எதை குறித்து பேசுகிறேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நாம் சற்று நித்திய ஜீவனுக்கென்று முதலீட்டை செய்த சில நித்திய ஜீவனின் (திட்டத்தை எடுத்த) பாலிசிதாரர்களை பரிசீலிக்கலாம். அவர்கள் தாமே இந்த தேவ வார்த்தையின் பாலிசியைக் கொண்டிருந்தவர்கள். நினைவில் கொள்ளுங்கள். இது தேவனுடைய வார்த்தை கடிதம் வடிவிலே இருக்கிறது. 'என்னுடைய வார்த்தைகள் ஆவியாயிருக்கிறது. அவைகள் ஜீவனாய் இருக்கிறது“ என்று இயேசு சொன்னார். சொல்லவில்லையா? பரிசுத்த யோவான் ஒன்றாம் அதிகாரத்தில் ''ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை மாம்சமானது” என்று வேதம் சொல்லுகிறது. அதாவது நான் எவ்விதமாக உங்களுக்கு முன் சொல்கிறேனோ அவ்விதமாக அவர் நம் மத்தியிலே வாசம் செய்தார். 63]\ வர் நேற்று இருந்த அதே வார்த்தை தான், இன்றும் அதே வார்த்தையே, வர போகிற நாளிலும் அதே வார்த்தையாய் இன்னும் மாறாதவராய் இருக்கிறார். வேதத்திலே கூறப்பட்ட யாவும் அவரே. நீங்கள் வேதத்தை படித்து இயேசு கிறிஸ்துவை காணாமலிருப்பீர்க என்றால் , நீங்கள் திரும்பவும் சென்று அந்த வேத வசனங்களை மறுபடியும் வாசிப்பது உங்களுக்குநல்லது. ஏனெனில் இது இயேசு கிறிஸ்துவைப் பற்றினதான சாட்சியாயிருக்கிறது. பழைய ஏற்பாடுவெறும் ஒப்பனையாயும் புதிய ஏற்பாடு அதினுடைய நிறைவேறுதலாகவுமிருக்கிறது. வரலாற்றிலேஇருந்தவர் இயேசுவே. அவரே துவக்கத்திலிருந்தவர். சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை பார்த்தால்,அவரே அந்த தீர்க்கதரிசனம். அவரே அந்த வரலாற்றிலிருந்த நபர். அவரே அந்த சங்கீதங்கள்.அவரே அந்த கர்த்தராகிய இயேசு. மற்றும் வேதத்தில் குறிப்பிட்டபடி வரப்போகிற காரியங்கள்அவரே. ஆகவே வேதத்தில் குறிப்பிட்ட இயேசு கிறிஸ்துவை பற்றின சாட்சி அவரே. இப்பொழுது வேதமானது தேவனுடைய வார்த்தையென்று அழைக்கப்படுகிறது.மேலும் இந்த உலகத்தை தேவன் நியாயந் தீர்க்க ஏதாவது ஒரு தரத் (standard) தைக் கொண்டிருக்கவேண்டும். அவர் இங்கே உங்களை வைத்தால் நியாயந் தீர்க்க வேண்டுமென்றால், அங்கே ஏதாவதுஒரு தரம் (standard) இருந்தாக வேண்டும். ''இயேசு கிறிஸ்துவைக் கொண்டு செய்வார்“ என்று சொல்லுகிறீர்கள்ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த கருத்தைக் கொண்டிருக்கிறான். 64இதோ இங்கே அருமையான கத்தோலிக்க சீமாட்டி இருக்கிறார்கள்.என்னுடைய பின்னனியும் கத்தோலிக்கம் தான் என்று புரிந்துக் கொள்ளுங்கள். நான் அயர்லாந்தைச்சேர்ந்தவன். கவனியுங்கள். கத்தோலிக்கர்கள் அவர்களுடைய சபையைக் கொண்டு தான் செய்வாறென்று சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது கவனியுங்கள், அனேக வகையான கத்தோலிக்க சபைகள் இருக்கிறது.அப்படியானால் எந்த கத்தோலிக்க சபையைக் கொண்டு செய்வார்? அது ரோமனாக இருக்குமென்றால், கிரேக்க பாரம்பரிய சபை இழந்ததாயிருக்கும். இல்லை, கிரேக்க பாரம்பரிய சபை கொண்டு செய்வாறென்றால், ரோமர்கள் இழந்து போவார்கள். லூத்தரன் குழுவை கொண்டு செய்வார் என்றால், மெதொடிஸ்டு இழந்துபோம். மெதொடிஸ்டைக் கொண்டு செய்வார் என்றால், பாப்டிஸ்டு தவறாக இருக்கும். பெந்தெகொஸ்தை கொண்டு செய்வார் என்றால் மற்ற எல்லோரும் இழந்து போனவர்களாயிருக்கும். பிரஸ்பிடேரியனை கொண்டு செய்வார் என்றால், பெந்தெகொஸ்தே இழந்து போவார்கள். பாருங்கள், இது மிகவும் குழப்பத்தை கொண்டு வருகிறது. எது சரி என்று உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. அவர்களில் ஒருவர் கூட சரியில்லை. 65இயேசு, ''நானே வழியும், சத்தியமும் ஜீவனாய் இருக்கிறேன்“என்றார். மற்றும் அவர் வார்த்தையாயிருக்கிறார். இதைத் தவிர்த்து எந்த ஒரு மனிதனும் என்னிடத்தில் வர முடியாது என்றார். உங்களுடைய சபையைக் கொண்டோ, கோட்பாடுகளைக் கொண்டோ, ஜெபத்தைக் கொண்டோ போக முடியாது. நீங்கள் இயேசுவின் மூலமாகத் தான் வந்தாக வேண்டும். அவரே தேவன். அவரே வார்த்தை. அவரே வழி. அவரே சத்தியம். அவரே ஜீவன். ஒரு மெழுகுவர்த்தி இங்கே ஏற்றப்படாமல் இருந்து நீங்கள் அதை ஏற்றுவீர்களானால், அது வெளிச்சத்தை கொடுக்கும். அது எதை பிரதிபலிக்கும்? அது முதன் முறையாக ஏற்றப்பட்ட போது என்ன வெளிச்சத்தை கொடுத்ததோ அதே வெளிச்சத்தையே பிரதிபலிக்கும். மேலும் சுவிசேஷமானது பிரத்தியட்சமாகும் போது, அவர் நேற்றும், இன்றும் என்றென்றும் மாறாதவராக இருப்பார். அதை பார்த்தீர்களா? 66இப்பொழுது பாலிசி எடுத்தவர்கள் சிலருடைய மிகப் பெரிய புத்தி சாதுரியமான நாளிலே என்ன நடந்தது என்று சற்று ஆய்வு செய்து பார்க்கலாம். அடுத்த பத்து அல்லது பதினைந்து நிமிடம் இதை பார்த்து முடிக்கலாம். நோவா தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் தேவனுடைய வார்த்தையின் மேல் முதலீடு செய்தான். ஞாபகத்தில் கொள்ளுங்கள், அது தேவனுடைய வார்த்தை. நோவா அதிலே தான் முதலீடு செய்தான். இருந்தாலும், நீங்கள் முதலீடு செய்தவுடனே அந்த பாலிசியை எடுக்க சாத்தான் (அவனால் முடிந்தால்) அங்கே வரப்போகிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ''மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல“ என்று எழுதப்பட்டிருக்கிறது. அது சரரபிரகாரமான ஜீவியத்தை குறிக்கிறது. 'ஆனால் அவருடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினால் பிழைப்பான்” என்பது ஒரு பாகத்தினால் அல்ல. அல்லது இங்கே கொஞ்சம்அங்கே கொஞ்சம் அல்ல. ஆனால் ''ஒவ்வொரு வார்த்தையினாலும்“ ஜீவ அப்பத்தினாலும் மனிதன் பிழைப்பான். தேவனுடைய வார்த்தை என்றால் என்ன அது ஜீவனும், ஆவியும், ஜீவியமுமாயிருக்கிறது. மற்றும் அது (அவர்) பிரத்தியட்சமாகும் போது, 'என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான். இதைக் காட்டிலும் அதிகமானதை செய்வான். ஏனெனில் நான் பிதாவினிடத்திற்கு செல்லுகிறேன்”... 67இப்பொழுது, நோவா முதலீட்டை செய்த போது அவன் சோதிக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம். ஆகையால் உங்களுக்கும் அதே தான் என் சகோதரனே. உங்களுக்கு சோதனையின் நேரமே இல்லையென்றால், நீங்கள் இன்னும் உங்களுடைய முதலீட்டைச் செய்யவில்லை. ஏனெனில் எதிரியானவன் அவனுடைய சுழல் துப்பாக்கியை சுழற்றி அவனுடைய வில் நாணை இழுத்து அவனால் எந்த அளவிற்கு விஷமுள்ள அம்புகளையும், எல்லா கள்ள உபதேசங்களையும் மற்றும் சின்ன யோசனைகளையும், கோலியாத்தைப் போன்று புத்தி சாதுரியமான இராட்சதர்களையும் அனுப்பி எய்யும்படி ஆயத்தமாய் அங்கே நின்று கொண்டிருக்கிறான். நீங்கள் கல்வியறிவு இல்லாத அறியாமையுள்ள எளிமையான சகோதரனோடு ஐக்கியம் கொண்டிருக்கிற சகோதரனைக் காட்டிலும், பார்ப்பதற்கு மிக உயரமான நபரை உங்கள் மத்தியில் அனுப்புவான். அவன் அவ்விதமான அறிவுள்ள இராட்சதர்களையும் பெரிய பள்ளிகளையும் அனுப்பி இவைகளை எல்லாம் விவரித்து உங்களுக்கிருக்கும் எல்லாவற்றையும் எடுத்து விடுவான். ஆனால் நீங்கள் உங்கள் முதலீட்டைச் செய்து பரிசுத்த ஆவியினாலே உங்களுடைய பாலிசி அச்சிட்டு, முத்திரை போடப்பட்டிருக்கும் என்றால், அதை அழிக்க எதினாலும் முடியாது. 68எந்த ஒரு மனிதனும் இரகசியமாக வனாந்திரத்தின் பின்புறத்தில் தேவனும் அவனும்தனியாக இருக்கும் மட்டும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க அவனுக்கு உரிமையில்லை. உங்களுக்கு விளக்கி அதை அகற்றிவிட இந்த உலகத்திலே எந்த ஒரு அறிவாளியுமில்லை. அது சரிதான். நீங்கள் அங்கே இருந்தீர்கள். அது உங்களுக்கு நடந்தது என்று நீங்கள் அறிவீர்கள். அவர்கள் எவ்வளவுதான் உங்களுக்கு விவரித்தாலும், ஆனால்... பொறுங்கள்... உங்களுக்கு ஏதோ நடந்தது. அது நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அதை உங்களுடைய கண்களினால் கண்டீர்கள். அதனோடு நீங்கள் பேசினீர்கள். அதுவும் உங்களிடத்திலே திரும்பவும் பேசினது. பிறகு அது உங்களை அந்த நபருக்குள்ளே முத்திரைப் போட்டது. அதன் பிறகு நீங்கள் அதினுடைய பாகமானீர்கள். புத்திசாதுரியமான இராட்சதர்கள் வந்தாலும் நீங்கள் கண்டு கொள்ளாமல் கடந்து போவீர்கள். இந்த நாட்களிலே அது போன்றவர்களை அநேகரை இந்த உலகத்திலே நாம் கொண்டிருக்கிறோம். அதிலே சிலர் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் வேதாகம பள்ளியிலே பயிற்சி எடுத்தவர்கள், அல்லது வேத அறிவோடு பேசுவார்கள், அல்லது அதை உபயோகிக்க பயிற்சி எடுத்தவர்கள். மற்றும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் தாவீதே‚ தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கும் போது பயப்படாதே‚ 69கவனியுங்கள், சாத்தான் நோவாவின் முதலீட்டின்மேல் சோதனையைக் கொண்டு வந்தான். மற்றும் அவனுக்கு சந்தேகத்தைக் கொண்டு வரும்படி அவனை சோதித்தான். விஞ்ஞானிகள் எழும்பி, வானத்திலே மழை இல்லையென்று சொன்னார்கள். மேலும் நோவாவின் நாட்களிலே பரியாசக்காரர்கள் இருந்தனர். இப்பொழுது முதலீடாகிய மனிதன் தன்னுடைய இருதயத்திலே தேவனுடைய வார்த்தையை நம்பும்படி ஏற்றுக் கொண்டதினிமித்தம் அந்த கடைசி நாட்களிலே பரியாசக்காரர்கள் இருப்பார்களானால், இன்றைக்கும் அந்த வார்த்தைக்கு விரோதமாய் பரியாசக்காரர்கள் இருப்பார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு புத்தியில்லாத காரியம் போலிருந்தது. ஆனால் பாருங்கள் நீங்கள் உங்களுடைய சொந்த புத்தியை பயன்படுத்தக் கூடாது. ''ஓ, நான் நினைத்தேன்... இப்படியாக நினைக்கிறேன்“ என்று சொல்லுகிறீர்கள். உனக்கு எந்த எண்ணமுமில்லை அல்லது நீ எந்த எண்ணத்தையும் யோசிக்க கூடாது. ''கிறிஸ்துவின் சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது“ என்று வேதம் சொல்லிற்று. அவர் எப்போழுதுமே பிதாவை பிரியப்படுத்துகிற காரியத்தையே செய்தார். ஏனெனில் அவர் வார்த்தையாய் இருந்தார். பாருங்கள்? ஆகவே நமக்கு எந்த எண்ணமும் இருக்கக் கூடாது. அவர் என்ன சொன்னாரோ அதையே நாம் விசுவாசிக்க வேண்டும். ''நல்லது, என்னால் அதை விவரிக்க முடியாது“ என்று சொல்லுங்கள். இல்லை, நீங்கள் நினைத்தாலும், உங்களால் தேவனை விவரித்து சொல்ல முடியாது ஏனெனில் நீங்கள் தேவனை உங்களுடைய அறிவு கூர்மையான புரிந்து கொள்ளுதலை கொண்டு அறியவில்லை. நீங்கள் விசுவாசத்தின் மூலம் தேவனை அறிகிறீர்கள். நீங்கள் எப்படி தேவனை விசுவாசிக்க வேண்டுமென்று அறிந்தீர்களோ அந்த ஒரே வழியில் மாத்திரமே உண்டு. நீங்கள்அதை வெறுமெனே விவரிக்க முடியாது. எந்த மனிதனாலும் அது கூடாது. அப்படி செய்வது உங்களுடைய வேலையுமல்ல இல்லை, எந்த மனிதனும் தேவனை விவரிக்க முடியாது. தேவனை எந்த ஒரு விவரமும் இல்லாமல் கண்டடைய வேண்டும். நீங்கள் அவரை விசுவாசித்தாக வேண்டும். அப்படியில்லையென்றால் அது ஒரு போதும் விசுவாசமாயிராது. நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும். இப்பொழுது கவனியுங்கள். 70மேலும் நோவாவினுடைய மகத்தான முதலீடானது ஒரு நாளில்அவனுக்கு திரும்ப பலன் அளித்தது. அவன் உபத்திரவத்தையும், பரியாசக்காரர்களையும், மற்றும் அந்நாளில் இருந்த உலகத்தின் பாலிசிகளையும் மற்றுமெல்லா காரியங்களையும் எதிர்த்து அவைகளை சகித்து நின்றபோது, இது அவனுடைய ஜீவனை காப்பாற்றுவதின் மூலம் அவனுக்கு திரும்பவும் பலனை அளித்தது. அவன் அதை விசுவாசித்தான். அவனுடைய முதலீடானது அவனுக்கு திரும்பவும்பலன் அளித்தது. இப்பொழுது வியாபாரிகளே, உங்களுக்கு இன்னொரு காரியத்தை சொல்லுகிறேன். தானியேல் ஒரு நாளில் முதலீட்டை செய்தான். அவன் கொண்டு போகப்பட்ட உலகம், அவனுக்கு வழக்கமான உலகமல்ல. அவன் கொண்டு சேர்க்கப்பட்ட அந்த மக்கள் அவன் விசுவாசித்ததை விசுவாசியாதவர்கள். ஆனால் அவன் ஒரு முதலீட்டை செய்திருந்தான். பிறகு அவன் என்ன செய்தானென்பதை கவனியுங்கள். அவன் அந்த முதலீட்டை ஒரு போதும் கறைபடுத்த மாட்டேன், அதை கெடுக்கமாட்டேன் என்று தன்னுடைய இருதயத்திலே தீர்மானித்தான். பாருங்கள், அது அவனுடைய ஜீவனையே எடுத்தாலும் அவன் தேவன் மேல் செய்த முதலீட்டை அவிசுவாசித்து கெடுக்கப் போவதில்லை என்று தன்னுடைய இருதயத்திலே தீர்மானித்துக் கொண்டான். 71இதை அவிசுவாசிக்காதீர்கள். நீங்கள் முதலீட்டை செய்வீர்கள் என்றால், அதிலே தரித்திருங்கள். நீங்கள் விசுவாசிக்க ஆயத்தமாகவில்லை என்றால், முதலீட்டை செய்யாதிருங்கள். ஆனால் கிறிஸ்துவில் இருந்த சிந்தை உங்களுக்குள் வர அனுமதிக்க தயாராகும்போது, நீங்கள் முதலீட்டை செய்யலாம். ''ஓ இதுதான் அது, அதுதான்“ என்று சொல்லலாம். ஆனால் அதைக் கூர்ந்து கவனியுங்கள். அது வார்த்தையிலே இல்லை என்றால், அதை அப்படியே விட்டு விடுங்கள். வார்த்தையே அடிப்படையான உண்மையும் சத்தியமாய் இருக்கிறது. அதற்கு எந்த தனிப்பட்ட வியாக்கியானமும் தேவையில்லை. உள்ளது போலவே எழுதப்பட்டுள்ளது. தேவன் வேதாகமத்தைக் கொண்டு சபையை நியாயம் தீர்ப்பாரானால், அவர் மாற்றப்படாதபடி வேதாகமத்தை காத்து அது எவ்விதம் எழுதப்பட வேண்டுமோ சரியாக அவ்விதமாகவே எழுதப்பட்டது. எந்த தனிப்பட்ட வியாக்கியானமுமில்லை. மெதொடிஸ்டுகள் ஒரு விதமாக வியாக்கியானிக்கிறார்கள். பாப்டிஸ்டுகள் இன்னொரு விதமாகவும் கொண்டார்கள். மேலும் அது போன்று மற்றவர்களும் வியாக்கியானத்தை கொடுக்கிறார்கள். அதன் பிறகு அவர்களில் யார் சரி என்று பரீட்சித்தால், அதிலே ஒருவர் கூட சரியாக இருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு மனிதனுடைய சிந்தையையே தேடி ஓடுகிறார்கள். 72தேவன் ஒவ்வொரு முறையும் மகத்தான நிறுவனர்களை அதாவது லூத்தர், வெஸ்லி, ஜான் ஸ்மித், கேல்வின். நாக்ஸ் ஃபின்னி, மூடி, மற்றும் அது போன்றவர்களை எழுப்பி அவர்கள் மரணத்திற்கு பின்பு மக்கள் (அவர்களை பின்பற்றினவர்கள்) அதை ஸ்தாபனம் ஆக்கினார்கள். அங்கே இருக்கும் அருமையான கல்லூரி பட்டதாரிகள் அவர்களுடைய சொந்த வியாக்கியானத்தை அதற்குக்கொடுத்து அதை ஸ்தாபனமாக்கினார்கள். அவர்கள் அதை செய்த நேரத்திலே அங்கேயே மரித்துப் போனார்கள். ஒரு சபை ஸ்தாபனமாக்கப்பட்ட பிறகு அது ஜீவித்ததாய் சரித்திரத்தில் எந்த ஒரு இடத்திலேயும் குறிப்பிடப்படவில்லை. அந்நாட்களில் அவர்கள் பெற்றிருந்த அந்த மகத்தான எழுப்புதல்கள் எங்கே? அவர்களுடைய சபையிலே இன்று இருக்கிறதா? சபை ஸ்தாபனமான போது மரித்துப் போனது. ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து அவ்விதமாகத் தானிருக்கிறது. அந்த முதலாவது ரோமன் கத்தோலிக்க சபை தாங்கள் ரோமர்களுடைய சபையாக மாறுவதற்கு முன்னர், அது பெந்தெகொஸ்தே நாளிலிருந்த கத்தோலிக்க சபையாக இருந்தது. முன்னூறு வருடங்கள் கழித்து, ரோம் நாட்டிலே நடந்த நிசயாவிலிருந்து அப்போஸ்தல கத்தோலிக்க சபை என்று அழைக்கப்பட்டதிலிருந்து ரோமன் கத்தோலிக்க சபை என்றழைக்கப்பட்டது. அவர்கள் மனிதனுடைய கருத்துக்களை புகுத்தி ரோமர்களுடைய மூட நம்பிக்கைகளை வேதவசனத்திலே சேர்த்தார்கள். அது முதற்கொண்டு, அவளுடைய மக்களோடு அவள் மரித்ததேயன்றி வேறொன்றும் செய்ததில்லை. அதன் பிறகு சீர்திருத்தவாதியான லூத்தர் வந்தார். லூத்தர் ஒரு தேவ மனுஷனாக வந்தார். ''தேவனுடைய கிருபையினாலே நீதிமானாக்கப்பட்டோம்“ என்று வார்த்தையை போதித்தார். அப்பொழுது கத்தோலிக்கர்கள் ''தேவன் சபையில் இருக்கிறார் ஆகவே சபைக்கு வெளியே இரட்சிப்பு இல்லை” என்றனர். 73சமீப நாட்களில் நான் ஒரு பாதிரியாரோடு நேர்காணலிலேயிருந்தேன். அப்போது அவர், ''திருவாளர். பிரான்ஹாம், நீர் வேதத்தை குறித்து பேச முயற்சிக்கிறீர். இதுவே அந்த சபை. தேவன் அவருடைய சபையிலே இருக்கிறார்“ என்றார். ''அவ்விதம் எங்கு குறிப்பிட்டிருக்கிறது என்று எனக்கு காட்டுங்கள்“ என்றேன். தேவன் வார்த்தையில் இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. அவர் வார்த்தையாய் இருக்கிறார். மேலும் வார்த்தை உனக்குள் இருக்குமென்றால், அது மறுபடியும் தேவனை உற்பத்தி செய்யும். வார்த்தை ஒரு விதையாயிருக்கிறது. அந்த விதை அதினுடைய ஜாதியையே பிறப்பிக்குமென்று அவர் சொல்லியிருக்கிறார். அது தெய்வீக வாழ்கையாய் இயேசு கிறிஸ்துவுக்காக முழுமையாய் வேறு பிரித்து அர்ப்பணிக்கப்-பட்டதாயிருக்கும். 74இப்பொழுது தானியேலை கவனியுங்கள். அவன் தேவன் மேல் தன்னுடைய முதலீட்டை போட்ட பிறகு, அவனுடைய ஜீவனை அந்த சிங்கக் கெபியிலிருந்து காப்பாற்றினதின் மூலம் அது அவனுக்கு திரும்பவும் பலன் அளித்தது. எபிரேய பிள்ளைகள் ஒரு நாள் அவர்கள் இந்த முதலீட்டை செய்தார்கள். ஒரு நாளில் அவர்கள் தேவன் மேல் செய்த முதலீட்டை விட்டு, அவர் கூறின சரியான வழியை விட்டு விட, அந்த கூட்டத்தாரோடு இணைந்து வேறுவழியில் தொழுதுகொள்ள வேண்டுமென்று அந்த அதிகாரபூர்வமான அறிக்கை வந்தபோது அவர்கள் தேவன் மேல் முதலீட்டைச் செய்தார்கள். அவர்களோ 'எங்களை எரிகிற சூளையிலே போட்டாலும் சரி, நாங்கள் அதை செய்யப்போவதில்லை. நாங்கள் இந்த வார்த்தையோடு தரித்திருக்க போகிறோம்“ என்றார்கள். அது அவர்களைக் காப்பாற்றினது. ஒரு தேசத்தையே மாற்றினது. ஏனெனில் அவர்கள் செய்த அந்த முதலீட்டை காத்துக்கொள்ள சித்தமாயிருந்தார்கள்.ஆம் ஐயா. 75பேதுரு மீனவனாகயிருந்தான். அவன் ஒரு வியாபாரி. அவனுடைய வியாபாரம் பெரிதாயிருந்தது. அவன் மீன்களை விற்றான். அந்நாட்களிலே அது தான் மிக பெரிய வியாபாரம். அவன், இங்கு சிக்காகோவிலிருக்கும் ஏரியைப் போல அங்கே ஏரியருகே ஜீவித்தான். அவன் மீனவ வியாபாரி தான். மற்றும் அவன் ஒருவிதமான கடினமான நபர். ஏனெனில் அவனும் பரிசேயன். அவனுடைய தகப்பனாரும் முத்தின பரிசேயன். ஆனால் ஒரு நாளில்...நான் ஒரு கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். அது ஒருவேளை ஆதாரம் இல்லாமலிருக்கக் கூடும். இல்லையென்று நினைக்கிறேன். ஆனால் இந்த நேரத்திலே,அதை சரியாக பொறுத்த முடியும் என்று நினைக்கிறேன். சற்று சோதித்துப் பார்க்கலாம். ''பேதுருவே இங்கே வா. மகனே, அவர் இன்னும் வரவில்லை என்று உனக்குத் தெரியும். அவர் ஒருவேளை உன்னுடைய காலத்தில் வரக்கூடும். ஆனால் உன்னுடைய தகப்பனாகிய நான் சொல்லுகிறதை ஞாபகத்தில் கொண்டிரு. அனேக கள்ள உபதேசங்கள் எழும்பும். அனேக கள்ள தீர்க்கதரிசிகள் வருவார்கள் (இயேசு இந்நாட்களை குறித்து சொன்னது போல). ஆனால்அவர்களுடைய கனியினாலே நீ அவர்களை அறிந்துக்கொள்வாய்“ என்றார். கனி என்று சொல்லும் போது அது ஆவியை குறிக்கிறது. மேலும் 'இவ்விதமானவர்கள் அனேகர் இங்கு இருப்பார்கள்” என்றார். அதே போல் அங்கு இருந்தார்கள். ஆனால் ''மிகப் பெரிய சாமர்த்தியமான போதகர்கள் எழும்புவார்கள் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்“ என்றார். அந்த நாட்களிலே தான் கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட ஒருவன், நானூறு பேரை வழி நடத்தினான். அவர்கள் எல்லோரும் வனாந்திரத்திலே அழிந்து போனார்கள். ஏனெனில் அது வார்த்தைக்கு முரண்பாடாக இருந்தது. தொடர்ந்து அவர் ''மேலும் நீ ஒன்றை ஞாபகத்தில் கொண்டிருக்க வேண்டும். 76இந்த மேசியா வரும்போது அவர் ஒரு அடையாள குறியை கொண்டிருப்பார். அதாவது அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார். இப்பொழுது எபிரேயர்களாகிய நமக்கு தேவன் போதித்தது என்னவெனில், அவர் தீர்க்கதரிசிகளை அனுப்புகிறதற்கு காரணம் என்னவென்றால், தேவனுடைய வார்த்தை ஒரு தீர்க்கதரிசியினிடத்தில் மாத்திரமே வரும். அது சரிதான்“ என்றார். மேலும் அவர் ''எவனாகிலும் ஒருவன் உங்கள் மத்தியில் ஆவிக்குரியவனாக அல்லது ஒரு தீர்க்கதரிசியாக இருப்பான் என்றால், கர்த்தராகிய நான் அவனோடு பேசுவேன். அவன் சொல்வது நடந்தேறினால் அவனுக்கு செவி கொடுங்கள். ஆனால் அது நிறைவேறவில்லையென்றால், அவனுக்கு செவி கொடுக்கவேண்டாம், அவனுக்கு பயப்படவும் வேண்டாம். ஆனால் அவன் சொன்னது நடந்தேறினால் அவனுக்கு பயப்படுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். மோசேயும் ''உன் தேவனாகிய கர்த்தர், என்னை போல் ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார், அவருக்கு செவிகொடுங்கள்“ என்று சொல்லியிருக்கிறார். இப்பொழுது இந்த மேசியா, ஒரு தீர்க்கதரிசியாகவே இருப்பார். அவர் ஒரு கல்வியறிவு பெற்றவனாகவோ அல்லது ஆசாரியனாகவோ அல்லது ஒரு மத குருவாகவோ இருக்கமாட்டார். அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்” என்பதை ஞாபகத்தில் கொண்டிரு என்றார். 77ஒரு நாள் சீமோன் ஒரு சின்ன விறகு துண்டின் மேல் அமர்ந்திருந்தான். ஒருவேளை அந்திரேயா அவனை அன்று கடற்கரைக்கு கொண்டு வந்திருக்கலாம். அவர்கள் முழு இரவும் கடினமாய் உழைத்து அவர்களுடைய வலைகளிலே ஒன்றும் அகப்படாததை பார்த்து அதிலே இருந்தார்கள். அப்பொழுது அவர், இந்த பேதுருவினிடமிருந்து படகை கடனுக்கு வாங்கினார். அதன் பிறகு அவனுடைய படகை பயன்படுத்தினவுடன் அவனிடத்தில் பேசினார்... பேதுரு ஒரு வேளை அவருடைய பேச்சை கூர்ந்து கவனித்திருப்பான். ஒருவேளை அவனுடைய சின்ன விறகு துண்டின் மேல் இருந்தவனாய் தன்னுடைய காதை பாதி நேரம் விரலை கொண்டு இழுத்து கேட்டுக் கொண்டிருக்கலாம். ஏனெனில் மக்கள் அவரை நெருங்கினதினிமித்தம் இயேசு படகிலே சுற்றி மிதந்து கொண்டிருந்தார். அதன் பிறகு, அந்த படகிலே, இயேசு, சீமோனிடம் படகை கடலுக்குள் கொண்டு செல்லும்படி கூறியிருப்பார் என பார்க்கிறோம். அவர் அங்கே போனபோது, அவனிடத்தில் ''கவனி, நீ இரவு முழுவதும் கடினமாய் உழைத்து ஒன்றும் அகப்படாமல் இருக்கிறாய், ஆனால் மீன் இந்த பக்கத்திலேஇருக்கிறது“ என்றார். ''உன்னுடைய வலையை உள்ளே ஆழமாய் போடு, நீ இழுக்கக்கூடாத அளவிற்கு மீன்கள் காத்துக் கொண்டிருக்கிறது” என்றார். நல்லது, அது வெறும் ஒரு வார்த்தை மாத்திரமே. ஆனால் அவன் அந்த வலையை உள்ளே போட்டு அதை இழுத்த போது அங்கே மீன்கள் இருந்தன. மற்றும் அவர்ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று அவனுடைய தகப்பனார் சொன்ன அந்த மேசியாவை அது காட்டினது. அப்பொழுது அவன் ''ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டு போக வேண்டும்“ என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: பயப்படாதே, சீமோனேநீ இப்பொழுது உண்மையை கண்டாய், இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். பேதுரு அவனுடைய மீன்பிடிக்கும் வலைகளையும் அவனுடைய வியாபாரத்தையும் விட்டு வரத் துவங்கினான். அவன் இயேசு கிறிஸ்துவின் மேல் முழுவதும் முதலீட்டை செய்தான். ஏனெனில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா அவர் தான் என்பதை அவன் கண்டான். மற்றும் அவர் வார்த்தையை பேசினபோது அது அங்கு நடந்தேறினது. அதினிமித்தம் அவரே அந்த மேசியா என்று கண்டான். அவன் வேதவாக்கியம் சொன்னபடியாகவும், தன்னுடைய வயதான பரிசேயனாகிய தகப்பன் சொன்னபடியாகவும் இருக்கிறது என்பதை அறிந்தான். அதாவது ''மேசியாவானவர் வார்த்தையின்அவதாரமாக இருப்பார். மற்றும் அவர் ஒரு தீர்க்கதரிசியாக மேசியாவின் வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்“ என்றான். அவ்விதமாகவே அங்கு நடந்தது. ஆகவே பேதுரு அந்த அடையாளத்தையும் வார்த்தையின் நிரூபனத்தையும் பார்த்து அதிலே அவனுடைய முதலீட்டைச் செய்தான். 78நான் கடந்த இரவு பேசினதைப் போல, நாத்தான்வேல் ஒரு முதலீட்டை செய்தான். அவ்விதமாகவே கிணற்றண்டையிருக்கும் ஸ்திரீயும் செய்தாள். நிக்கொதேமு என்பவன் வேதாகமத்தில் மகத்தான வேதபாரகனாக இருந்தவன். இன்று காலையில் யாரோ ஒருவர் சொன்னது போல, அவன் ஒரு பெரிய பாண்டித்தியம் பெற்றவனாக இருந்தான். அவன் முதலீட்டைச் செய்யும்படி வந்தான். நீங்கள் இந்த மகத்தான மனிதன் கூறின காரியத்தை கவனிக்கும் படி விரும்புகிறேன். அதாவது இந்த நிக்கொதேமுவை பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம் மூன்றாம் அதிகாரத்தில் காண்கிறோம். அவன் ஒரே இரவில் இவைகளை எல்லாம் கற்றறிந்தவன் அல்ல. அவன் ஒரு வேத பாண்டித்தியம் பெற்றவன். அவன் என்ன சொன்னான் என்று கவனியுங்கள். இயேசுவினுடைய ஊழியத்தைக் குறித்து சனகெரீப் சங்கம், அந்த அமைப்பினர் கலந்து ஆலோசித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் கலிலேயாவின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டாலும் அவருடைய ஊழியம் முழுவதும் பரிசோதனைக்குள் போனது. இப்பொழுது அவனுடைய அறிக்கையைக் கவனியுங்கள். அது உங்களுடைய தலைக்கு மேல் போகாமலிருக்கட்டும். இயேசுவினிடத்தில் நிக்கொதேமு என்ன சொன்னான் என்று கவனியுங்கள். 'ரபி, பரிசேயர்களாகிய நாங்கள் இதை அறிவோம். [ஆனால் எங்களால் இதை அறிக்கை செய்ய முடியாது. நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று எங்களால் அறிவிக்க முடியாது. ஏனெனில் நாங்கள் எங்களுடைய ஸ்தானத்தை (பதவியை) இழந்து விடுவோம். நாங்கள் அப்பம், வெண்ணெய் மேல் செய்த முதலீட்டை இழந்து விடுவோம். நாங்கள் மக்கள் மத்தியில் வகிக்கும் ஸ்தானத்தை இழந்து விடுவோம். நாங்கள் கலிலேயர்கள் அல்லது மீனவர்கள் போன்று வெளியிலே தள்ளப்படுவோம். நாங்கள் மிகவும் மோசமான, புத்தி கெட்டவனாய் அல்லது பயந்தவனாய், மனம் சரி இல்லாதவனாய், பித்து பிடித்தவனாய், ஒரு நல்ல தீர்மானத்தை எடுக்க முடியாத உதவாக்காரனாய் எண்ணப்படுவோம். ஆனால், நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகறென்று அறிந்திருக்கிறோம்.] ஏனெனில் நீர் செய்கிற காரியத்தை தேவனில்லாமல் எந்த ஒரு மனிதனும் செய்யமுடியாது“ என்றான். 79பாருங்கள், நிக்கொதேமுவை போல நம்மில் அனேகர் இருக்கிறோம்.அவன் இரவிலே வந்தான் என்று சொல்லுகிறார்கள். அவன் முதலீட்டைச் செய்யும்படி வந்தான். அந்த வங்கியோ இருபத்தினான்கு மணி நேரமும் திறந்தேயிருந்தது. அது இரவாக இருந்தாலும், அந்த வங்கி திறந்தேயிருந்தது. இதோ இந்தக் காலை வேளையிலும் சிக்காகோவிற்கு திறக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் முதலீட்டைச் செய்ய ஆயத்தமாய் இருக்கும் பட்சத்தில், இது எந்நேரமும் திறந்தே இருக்கும். அவனை ஏற்றுக்கொள்ளும் படி ஒரு வரவேற்பு உள்ளத்தோடு கதவுகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அவனை வீட்டின் மேல் தளத்திற்கு கொண்டு போய், அவர்கள் நிலா வெளிச்சத்திலே அமர்ந்தார்கள். அதன் பிறகு நிக்கொதேமு முதலீட்டை செய்ய வேண்டியதாயிருந்தது. அவனோ ''நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனெனில் தேவன் ஒரு மனிதனோடு இல்லாமல் நீர் செய்த காரியங்களை செய்ய முடியாதென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்“ என்று முன்பாகவே அறிக்கையிட்டான். இப்பொழுதுஅவன், ''நாங்கள்“ என்றான். நாங்கள் என்பது அந்த ஆலோசனைச் சங்கத்தை அந்த ஸ்தாபன சங்கத்தைக் குறிக்கிறது. நாம் நம்முடைய சபையை உலக ஆலோசனை சங்கத்தில் அதாவது சபைகள் கூட்டமைப்புக்குள் இணைவதைப் போன்று அவர்களும் ஐக்கிய ஆலோசனை சபையைக் கொண்டிருந்தார்கள். “எங்களுக்கு அது புரிகிறது” என்றான். ஆனால் ஒருவருக்கும் கூட அதைப் போற்ற விருப்பமில்லை. அந்த ஐஸ்வரியவானைப் போல், தங்களுடைய உலக ஐஸ்வரியங்களைக் கொண்டிருக்க விரும்பினார்கள். 80இந்த காலை வேளையில் என்னுடைய வியாபார நண்பர்களே, புருஷன் ஸ்திரீ யாராக இருந்தாலும், அதை வாங்க உங்களுக்கு திறனிருக்கிறதா? அதினுடைய விலையை எண்ணிப்பாருங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை ஏற்றுக் கொள்வது உங்களை கறைபடுத்தும் என்று எண்ணுகிறீர்களா?உங்களுடைய வியாபாரத்தை கறைபடுத்துமா? இந்த பூமியிலே நீங்கள் உங்களுடைய வியாபாரம் கறைபட்டுப் போகவும் அல்லது சபையிலே உங்களுடைய பதவியை மாற்ற விட்டுக்கொடுக்கப் போகிறீர்களா அல்லது நித்திய ஜீவனை கொண்டிருக்கப் போகிறீர்களா? அது நீ எந்த பாலிஸியைக் கொண்டிருக்கப் போகிறாயோ அதைப் பொறுத்ததாய் இருக்கிறது. ஞாபகத்தில் கொள்ளுங்கள். நிக்கொதேமு ஒரு மகத்தான மனிதன். அவன் இதைத் தவிர்க்க அவனுக்கு அனேக வழிகளிருந்தது. ஆனால் அவன் இந்தப் பாலிஸியை ஏற்றுக் கொண்டான். 81லூக்கா 24:29-ல் இந்த பாலிஸிதாரர்கள் குறித்துப் பார்க்கிறோம். நான் இன்னும் சில நிமிடங்களில் முடிக்கிறேன். இந்த லூக்கா 24:49ல் இருக்கிற பாலிஸிதாரர்கள் யாவரும் ஒரு முதலீட்டை செய்திருந்தார்கள். நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒரு பாலிஸியை எடுத்திருப்பீர்கள் என்றால் அது உங்களுக்கு லாபத்தில் ஒரு பங்கை வகுத்துச் செலுத்தப்படும். அநேக நேரங்களில் நீங்கள் உங்களுடைய பாலிஸியிலிருந்து லாப பங்கை எடுக்க முடியும். நல்லது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு அந்த பாலிஸியிலிருந்து லாபப் பங்கானது செலுத்தப்பட ஆயத்தமாய் இருந்தது என்று புரிந்துக் கொண்டார்கள். ஏனெனில் லூக்கா 24:49-ல் 'இதோ வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட லாப பங்கை அனுப்புகிறேன், அது உங்கள் மேல் வருகிற என்னுடைய பிதாவின் வாக்குத்தத்தம்“என்று இயேசு கூறினார். 82யோவேல் 2:28 மற்றும் அனேக வேத வாக்கியங்கள் அதை வாக்குத்தத்தமாய் கொடுத்திருக்கிறது. ஏசாயா 28:19-ல் ''கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாய் என்கிறார்கள்“ என்று சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். ''நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” 'பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் நான் இந்த ஜனத்தோடே பேசுவேன்“ என்றார். யோவேல், யோவேல் புத்தகம் 2:28-ல் ''கடைசி காலத்திலே, நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள், ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்கிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று கர்த்தர் கூறினார்“, என்றான். இந்த வேத வாக்கியத்தின் மூலம், இயேசு கிறிஸ்துவை அவர்களுடைய ஜீவன் பாலிஸியாக ஏற்றுக் கொள்ளும்போது இதிலே லாபப் பங்கு உண்டென்று மக்கள் புரிந்து கொண்டார்கள். 83இப்பொழுது வியாபாரிகளே நீங்கள் ஏதாவதொரு ஸ்தாபனத்தில் சேர்ந்திருக்கலாம். ஆனால் இதிலே லாபப் பங்கு இருக்கிறது. நீங்கள் ஒருவேளை கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கலாம், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கிறிஸ்துவ ஞானஸ்நானத்தை எடுத்திருக்கலாம், நீங்கள் எல்லா காரியங்களையும் செய்திருக்கலாம், இருப்பினும் இந்தமுதலீட்டிலே லாப பங்குகளிருக்கிறது. லூக்கா 24:49-ல் நான் சொன்னவண்ணமாக, அவர்கள் லாபபங்கைப் பெற்றுக் கொள்ளும்படி மேலே போனார்கள். அவர்கள் யாவரும் ஒன்றாய் கூடி தேவனைநோக்கி காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமல்ல தொடர்ந்து காத்திருந்தார்கள். அப்போது யாரோ ஒருவர் எழும்பி, ஒருவேளை மத்தேயு என்று வைத்துக் கொள்வோம். அவன் அரசாங்கத்திலே வரி வசூலிக்கிறவனாய் இருந்தான். அவன் மிகவும் அறிவு மிகுந்தவனாய் இருந்திருக்கக்கூடும். அவன் ஒருவேளை எழும்பி நின்று, ''ஓ சற்று பொறுங்கள். நாம் இனி ஏன் காத்திருக்க வேண்டும்? அவர் இங்கே மேலே வந்து காத்திருங்கள் என்றாரே நாமும் இங்கு வந்திருக்கிறோம். இப்பொழுது நாம் எட்டு நாளைக் கடந்து விட்டோம். ஆகையால் நாம் நம்முடைய ஊழியத்தை எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன்“ என்று சொல்லியிருப்பான். ஆனால் வார்த்தை அவ்விதமாக சொல்லவில்லை. ''பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும்நான் இந்த ஜனத்தோடே பேசுவேன்' 'நான் என் ஆவியை ஊற்றி, அற்புதங்களையும் அடையாளங்-களையும் காட்டுவேன்“ என்ற அத்தாட்சியாய் கொடுக்கப்பட்ட பாலிசி நன்மையானதென்று அவைகள் நிரூபிக்கப்படு மட்டும் காத்துக் கொண்டிருந்தார்கள். 84சமீப நாட்களில் நான் ஒரு அருமையான பாப்டிஸ்ட் சகோதரனோடு பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய பேரை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் எல்லோராலும் அறியப்பட்டவர். ஒரு பெரிய சபையிலிருந்து வந்தவர், அருமையானவர். அவர் என்னிடத்தில் வந்து,''பில்லி நீங்கள் ஏன் அந்த விதமான காரியத்தோடு கலந்து விடுகிறீர்?“ என்றார். அதற்கு நான் ''எந்த விதமான காரியம்?“ என்றேன். ''நான் கிறிஸ்துவோடு கலந்துவிட்டேன். என்னுடைய ஜீவன் அதினோடு கலந்துவிட்டது என்றேன். அதற்கு அவர் ''நீ முதலாவது பாப்டிஸ்டாக இருக்கிறாய் என்று அறிவாய்“ தொடர்ந்து அவர் வேதம் என்ன சொல்லுகிறது என்று கவனி என்றார். ''ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக என்னப்பட்டது” அதற்கு நான் ''அது உண்மையே“ என்றேன். அப்படியென்றால் 'அவரை விசுவாசிப்பதை தவிர அதற்கு மேலாக ஆபிரகாம் என்ன செய்ய வேண்டியிருக்கும்?“ அதற்கு நான் ''அது சரிதான், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?“ என்றேன். அதற்கு அவர், ''ஆம், நான் தேவனை விசுவாசிக்கிறேன்“, என்றார். அப்படியென்றால், ''நீர் பரிசுத்த ஆவியை பெற்றீறென்று நம்புகிறீரா? என்றேன்“ இதை நான் பாப்டிஸ்டு போதனையை அறிந்ததினால் கேட்டேன். அதற்கு அவர் ''நிச்சயமாக பெற்றிருக்கிறேன். நான் அதை விசுவாசித்த போது, அதை பெற்றுக் கொண்டேன். அந்த காரணத்திற்காகத் தான் அதை விசுவாசித்தேன்“ என்றார். “அப்படியென்றால் இது அப்போஸ்தல நடபடிகள் 19-ம் அதிகாரத்தில் பரிசுத்த பவுல் கூறினதற்கு எவ்வளவு முரணாக இருக்கிறது” என்றேன். 85அவன், யோவான் மூலம் கிறிஸ்துவுக்குள் மனமாறி பாப்டிஸ்டுகளை (ஞானஸ்நானம் எடுத்தவர்களை) பார்த்த போது, 'நீங்கள் விசுவாசிகளான போது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா, உங்களுடைய லாபப் பங்கை பெற்றீர்களா? என்று கேட்டான். அதாவது நீங்கள் விசுவாசிகள் ஆனதிலிருந்தல்ல, நீங்கள் விசுவாசிகள் ஆனபோது“ என்றான். அதற்கு அவர்கள் ''அப்படி ஒன்று உண்டு என்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை என்றார்கள்“ “அப்படியென்றால் நீங்கள் எப்படி ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டீர்கள்” என்று கேட்டான். ''நாங்கள் யோவானால் ஞானஸ்நானம் எடுக்கப்பட்டோம், அது உங்களுக்கு போதுமானதாய் இருக்கும்“ என்றார்கள். அதற்கு அவன் ''இல்லை, இப்பொழுது இது போதாது. யோவான் மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம் மாத்திரமே கொடுத்தான். பாவ மன்னிப்புக்கு இல்லை. ஏனெனில் அப்போது பலியானது இன்னும் செலுத்தப்-படாமல் இருந்தது“ என்றான் . அதன் பின் அவர்கள் இதைக் கேட்டபோது, அவர்கள் மறுபடியும்இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்தார். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். நவமான பாஷைகளைப் பேசினார்கள் மற்றும் முதலாவது பெற்ற மக்களைப் போல லாப பங்கை பெற்றுக் கொண்டார்கள். 86அதற்கு அந்த பாப்டிஸ்டு சகோதரன் ''ஏன், ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அல்லவா, அது அவனுக்கு நீதியாக என்னப்பட்டதே. இதை காட்டிலும் மேலான காரியத்தை ஒரு மனிதன் செய்யவேண்டுமா? என்றார். அதற்கு நான், ''அவன் தேவனை விசுவாசித்தது உண்மைதான். ஆனால் அவனுக்கு விருத்த சேதனத்தின் முத்திரையை கொடுத்து அதை அங்கீகரித்தேனென்று நிரூபனப்படுத்தினார் அல்லவா‚ நீங்களும் ''நான் ஒரு விசுவாசி“ என்று சொல்லுவீர்களானால், உங்களுடைய விசுவாசம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் முத்திரை போடப்பட்டு அது முன் குறிக்கப்பட்ட வித்து என அவரால் இணங்கண்டு கொள்ளப்படு மட்டும் தேவன் அதை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. இதுதானே பாப்டிஸ்டுகளுக்கு கொடுக்கக் கூடிய அருமையான வார்த்தை. பாருங்கள். அது உண்மைதான் நிச்சயமாகவே உண்மைதான். “பிதா ஒருவனை இழுக்காவிட்டால், எந்த மனிதனும் என்னிடத்தில் வரான். மற்றும் பிதா எனக்கு கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும்” என்றார். வார்த்தையை மக்கள் அறியுமட்டும், அதை பிரசங்கிக்க வேண்டியது நம் கடமை. சில வழியருகே விழுந்தன. ஆனால் அந்த விதையை சில ஆழமாய் தாக்கி உடினடியாக ஜீவனை பிறப்பிக்கும். அதை அவர்கள் அப்பொழுதே காணுவார்கள். ஆகவே அவர்கள் சென்று அந்த லாபப் பங்கைப் பெற்றுக் கொண்டார்கள். 87ஆம். அந்த ஐஸ்வரியவானான பவுல் என்ற வாலிபன் அதே ஆவியினாலே அந்த நிரூபணப்படுத்தப்பட்டதைக் கண்டான். அவன் தமஸ்குவுக்குப் போகிற வழியிலே அவனை அவர் மாற்றினார். சொல்லப் போனால், அவன் அக்கினி ஸ்தம்பத்தையே பார்த்தான். அது அதே இயேசுதானென்று அறிந்திருந்தான். அவன் அது தேவனென்று அறிந்தபோது மிகவும் கதறினான். மற்றும் இயேசுவே தேவன்‚ பவுல் அதை கண்டபோது...ஒரு வேத பண்டிதனாகிய பவுலுக்கு மகத்தான நோக்கங்கள் இருந்தன. அவன் ஒரு வேத பண்டிதன். கமாலியேல் என்ற மகத்தான நபர் மூலம் போதிக்கப்பட்டிருந்தான். ஒரு நாளிலே ஆசாரியனாக அல்லது பிரதான ஆசாரியனாவோம் என்ற இலட்சியத்தைக் கொண்டிருந்தான். அவன் மிகவும் அறிவுள்ளவனாய் சொல்லப்போனால் பாண்டித்தியம் பெற்ற பெரிய மனிதன். மேலும் இந்த கள்ள உபதேசக்காரர்கள், எகிறி குதித்துக் கொண்டு அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து சுற்றிலும் ஓடுகிறதைப் பார்த்தபோது, இவர்கள் ஒரு கூட்ட பித்து பிடித்தவர்களென்று எண்ணினான். ஆனால் அவன் தமஸ்குவுக்கு போகிற வழியிலே... நான் சொன்ன வண்ணமாக அவனும் ஐஸ்வரியவானாக இருந்தான். அவன் ஒரு அருமையான மனிதன். ஒரு வாலிபன். அவன் கல்வியின் மூலம் பெற்ற எல்லாத் திறன்களைக் கொண்டு அவனுடைய வழயிலே போய்க் கொண்டிருந்த போது அவனுக்கு முன்பாக இந்த தருணங்கள் வைக்கப்பட்டன. இந்த ஐஸ்வரியவனான வியாபாரிக்கும் மற்றும் அந்த ஐஸ்வரியவனான வியாபாரிக்கும் இருக்கும் வித்தியாசத்தை கவனியுங்கள். ஒருவன் அதை ஏற்றுக் கொண்டான்... இன்னொருவன் அதை தள்ளிப்போட்டான். கவனித்துப் பாருங்கள். 88அதன் பிறகு திடீரென ஒரு வெளிச்சத்தினால் தாக்கப்பட்டு விழுந்தான். அங்கே அக்கினி ஸ்தம்பமானது நின்றிருக்க கண்டான். அதை அவன் அடையாளங் கண்டு கொண்டான். 'ஆண்டவரே நீர் யார்?“ என்றான். அதற்குஅவர் ''நான் இயேசு“ என்றார். அவன், தேவனும் கிறிஸ்துவும் இருவர் அல்ல அவர்கள் ஒருவர் தான் அதே நபர் தான் என்ற வெளிப்பாட்டை பெற்ற பொழுது, அவன் அதிலே முதலீட்டைச் செய்ய ஆயத்தமானான். இன்றைக்கு நாமும் அதே காரியத்தை பார்ப்போமா என்று வியக்கிறேன். பவுல் ஒரு யூதனாக அதை கண்டபோது ''என்னை வழி நடத்தின அதே தேவன் தான் வனாந்திரத்திலே என்னுடைய மக்களையும் வழி நடத்தினார். இவர் அவரேதான்“ என்று சொல்லி அவரை ''இயேசு” என்று அழைத்தான். நான் ''இருக்கிறவராக இருக்கிறேன்“ என்றார். அவரே அந்த 'இருக்கிறவராக இருக்கிறேன்”. ''இருக்கிறவராக இருக்கிறேன்“ என்றால் நித்தியம் என்று அர்த்தம் நித்தியமானவர் என்று பொருள்படும். ''நான் இருந்தேன், நான் இருப்பேன்” என்று அல்ல. ஆனால் இருக்கிறவராக இருக்கிறேன் என்பது நிகழ் காலத்தை குறிக்கும் சொற்கள். நான் எல்லா காலங்களிலும், நேற்றும், இன்றும் என்றென்றும் மாறாதவராக இருக்கிறேன். அதன் பிறகு பவுல் கதறினான் ''ஆண்டவரே, நான் முதலீட்டை செய்ய விரும்புகிறேன். நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர்? ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்? நான் என்ன செய்தாக வேண்டும்?“ ஓ, ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்? 89அதன் பிறகு அவன் வேத வாக்கியங்களை எடுத்துக் கொண்டு அது அதே தேவன் தானா என்று கண்டறியும் படி மூன்றரை வருடம் அரேபியா நாட்டுக்குப் போனான். அவன் திரும்பவும் வந்தபோது, அவன் கற்றுத் தேறின எல்லா ஸ்தாபனங்களும், கல்வியின் மூலம் பெற்ற எல்லாத் திறன்களும் அவனை விட்டு கடந்து போயிருந்தது. அவன் கொரிந்திய புத்தகத்திலே இவ்விதமாக கூறுகிறான். ''நான் என்னுடைய புத்தியினால் வந்திருப்பேனானால், நான் புத்திசாலி மகத்தான மனிதன் என்று நீங்கள் உங்களுடைய எண்ணங்களை என்மேல் ஆதாரப்படுத்துவீர்கள். ஆனால் நான் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், பிரத்தியட்சத்தினாலும், செயலாக்கத்தினாலும் வருகிறேன்“. அதே காரியத்தைதான் மாற்கு 16-ல் இயேசு சொல்லியிருக்கிறார். 'நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்றார், என்றால் போய் வல்லமையை செயலாக்கத்திலே காட்டுங்கள் என்று அர்த்தம். ஏனெனில் வார்த்தையை பிரசங்கிப்பது மாத்திரமே அதை கொண்டு வராது. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு; இந்த அடையாளங்கள் அவர்களை பின் தொடரும்“ என்று சொன்னது செயலாக்கத்திலே வரும். ஏனெனில் அது அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. பாருங்கள். 90அதன் பிறகு பவுலுக்கு அந்த மகத்தான் நித்திய ஜீவனானது பலனைத் தந்தது என்பதைக் காண்கிறோம். எப்பேர்ப்பட்ட விஷேசித்த (Rashel) தீர்மானம் அது. நான் முடிக்கிறேன். தேவன் எனக்கு உதவி செய்வாராக. நீங்கள் அருமையான கூட்டத்தார். உங்களுடைய பொறுமையை சோதித்து விட்டேன். என்னை மன்னியுங்கள். ஆனால் நான் சொல்ல வருகிறது என்னவென்றால்... இந்த விதமான காரியங்களை இங்கே நின்று பேசுவதற்கு நான் போதுமானவனல்ல. அது எனக்கு அதிகம். என்னால் முடியாது. நான் ஒரு போதகன் என்ற இடத்திலே என்னை நானே வைக்க முடியாது. என்னால் அப்படி செய்ய முடியாது. ஏனெனில் எனக்கு புத்தி கூர்மையான அறிவில்லை. ஆனால் வார்த்தையோடு கச்சிதமாய் இருக்கிற வெளிப்பாட்டை கொண்டிருக்கிறேன். அந்த வார்த்தை மறுபடியும் ஜீவனை பெற்று அது என்ன செய்யும் என்று சொன்னதோ அதை உற்பத்தி செய்யும். பாருங்கள். அப்போஸ்தலர்களுக்கே அப்படி இல்லை. பவுலுக்கு மாத்திரம் இருந்தது. அவன் அந்த முதலீட்டைச் செய்ய, தான் கற்றறிந்த எல்லாவற்றையும் மறக்க வேண்டியதாயிருந்தது. நீங்களும் ஒருவேளை 'நான் இன்னார் இன்னார், நான் இதை சேர்ந்தவன் என்னுடைய தாய் இதை சேர்ந்தவர்கள்“ என்பதை மறக்க வேண்டும். நீங்கள் முதலீட்டை செய்ய வேண்டுமென்றால், அதை மறந்தாக வேண்டும். ஆகவே இது அறிவற்ற வேகமான (Rashel) காரியமாக இல்லையா? அந்த வாலிப வியாபாரி செய்ததைப் போல நீங்களும் செய்ய விரும்பமாட்டீர்கள். அவன் இப்படிபட்ட முதலீட்டை தள்ளிப் போடுவதற்கு அவன் எப்பேற்பட்ட (Rashel) அறிவற்ற வேகமாய்ச் செயல்பட்டிருப்பான். 91இப்பொழுது உங்களுடைய பணத்தைக் கொண்டு முதலீட்டை செய்யுங்களென்று கேட்கவில்லை. அதை மிஷனரி சங்கத்திற்கோ அல்லது மிஷனரிகளுக்கு அனுப்புவீர்களோ அல்லது அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்வீர்களோ அது உங்களைப் பொறுத்தது. அதைக் குறித்து எனக்குத் தெரியாது. தேவன் அதைப் பார்த்துக் கொள்வார். நான் ஜீவனின் பாலிஸியைக் குறித்துப் பேசுகிறேன். ''உங்களுடைய சிலுவையை எடுத்து என் பின்னே வாருங்கள். மக்கள் எப்படியெல்லாம் அழைக்க முடியுமோ எல்லோரும் அப்படி அழைக்கட்டும். ஆனால் 'நீங்கள் என் பின்னே வாருங்கள்“. அவனோ அதை செய்ய மனமில்லாதவனாயிருந்தான். அவன் மிகவும் அறிவற்ற வேகமான (Rashal) காரியத்தை செய்தான். லவோதிக்கேயா மக்கள் இந்த பாலிஸியைப் பார்த்து என்ன செய்கிறார்களோ அதையே அவன் கச்சிதமாக செய்தான். அவர்களுக்கு மனமில்லை. அதை செய்ய அவர்கள் விரும்பவில்லை. 92இவர்கள் சரியாக அந்த ஐஸ்வரியவனான வாலிபனைப் போன்று செய்கிறார்கள். ஒரு வேளை நான் அவனை பின் தொடர்வேன் என்றால் என்ன நடந்திருக்கும் என்று பார்க்கலாம். கவனியுங்கள், இந்த ஐஸ்வரியவனான வாலிபன் சில நாட்கள் கழித்து என்ன செய்தானென்று அவனுடைய முடிவு என்னவாய் இருந்ததென்றும் பார்த்து முடிக்கலாம். அவனை நோக்கிப் பாருங்கள். அவன்ஒரு வியாபாரியாக இருக்கிறான். அவனை நாம் பின் தொடர்ந்து பார்க்கும்போது அவனுடைய வியாபாரம் மிக செழிப்பாக இருந்ததைப் பார்க்கிறோம். ஆகவே, வியாபாரிகளே, இதை ஞாபகத்தில் கொள்ளுங்கள், எப்பொழுதுமே செழிப்பு என்பது கிறிஸ்தவன் என்று அர்த்தமாகாது. தாவீது ஒரு முறை, ''துன்மார்கன்தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சை மரத்தைப்போல்; தழைத்தவனாயிருக்கிறதை கண்டேன்“ என்றான். அதற்கு கர்த்தர், ''நீ அவனுடைய முடிவு வரை பார்த்திருக்கிறாயா?” என்று சொன்னதை நீங்கள் அறிவீர்கள். அது தான் வித்தியாசம். சாலையின் முடிவை கவனியுங்கள். 93என்னுடைய சக பணியாளர்களில் ஒருவரான எர்ன் பாக்ஸ்டர் அவர்கள் மிகவும் கலாச்சாரமான மனிதன். உங்களில் அநேகருக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு அருமையான நபர். கனடாவில் தேறின ஊழியக்காரர் ஒரு நாளில் அவர் ஒரு சின்ன கதையை சொல்லிக் கொண்டிருந்தார். ''சகோ பிரான்ஹாம், நாங்கள் சைக்கிள் ஓட்டுவதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய அம்மாவிற்கு பதார்த்தங்களை வாங்கும்படி சந்தைக்கு சென்று கோணிப் பை நிறைய வாங்கி வருவேன். வரும்போது, கொஞ்சம் கூட சைக்கிள் கைப்பிடியை தொடாமல் ஓட்டிக் கொண்டு வருவேன். அப்போது 'ஷூவின்' என்று பெயர் கொண்ட நிறுவனம் ஒன்று வந்து, சைக்கிள் பெடல் மேல் இரண்டு அடி உயரத்துக்கு மேலே நின்றவாறு கைகளை விட்டு முப்பது கஜம் தூரம் போகிற எந்த பிள்ளைக்கும் ஒரு சைக்கிள் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.அதை எங்களால் செய்ய முடியும் என நாங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தோம்“ என்று சொன்னார். மேலும் அங்கே ஒரு சின்ன பெண்தன்மை கொண்ட ஒருவன் இருந்தான். நாங்கள் அவனோடு ஒருபோதும் ஐக்கியம் கொள்ள மாட்டோம். ஏனெனில் அவன் பார்ப்பதற்கு பேதையைப் போலிருந்தான். நாங்கள் அவனை விட சற்று விசேஷித்த வகுப்பினறென்று நினைத்துக் கொண்டோம். அதன் பிறகு அவனும் அந்த போட்டிக்கு தகுதி பெற்றான் அல்லது அவனும் அந்த போட்டிக்கு வர விரும்பினான். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? நாங்கள் ஒவ்வொருவரும் அதிலிருந்து கீழே விழுந்து அந்த போட்டியை இழந்தோம். ஆனால் அவனோ விழவில்லை. அவன் முடிவு மட்டும் ஓட்டிச் சென்று முடித்தான். அதன் பிறகு இறங்கி வந்து தலை வணங்கி அவனுடைய ஷுவின் சைக்கிளை எடுத்து ஓட்டிக் கொண்டு போக ஆரம்பித்தான். அதன் பிறகு நாங்கள் அவனை சாலை முனையிலே சந்தித்து, ஜான், நீ எப்படி அதை செய்தாய் என அறிய விரும்புகிறோம்?“; என்று கேட்டோம். அதற்கு அவன், நல்லது பையன்களே, என்ன நடந்ததென்று நான் உங்களுக்கு சொல்லட்டும். நீங்கள் எல்லோரும் செய்ததை நான் கவனித்து, நான் வேறு வழியை எடுத்துக்கொண்டேன். பாருங்கள் நீங்கள் மேலே ஏறினவுடன் அவர்கள் உங்களை கொஞ்சம் தள்ளிவிட்ட பிறகு நீங்கள் நன்றாக ஓட்டினீர்கள். நீங்கள் எல்லோரும் என்னைக் காட்டிலும் சிறந்த சைக்கிள் ஓட்டுனர்கள் என்று உங்ளுக்குத் தெரியும். ஏனெனில் என்னால் சைக்கிள் கைப்பிடியை பிடிக்காமல் ஓட்டமுடியாது“ என்றான். 94பாருங்கள், அதே போல் தான் என்னாலும் சிலுவையை பிடிக்காமல் ஓட்ட முடியாது. இந்த வார்த்தையே என்னுடைய ஜீவனாக இருந்தாக வேண்டும். அது தான் உங்களுடைய தேவையும் கூட. நானும் என்னை வழிநடத்தக் கூடிய இந்த கைப்பிடி இல்லாமல் அதாவது பரிசுத்த ஆவி இல்லாமல் பேச முடியாது. ஏனெனில் அவரே என்னை நகர்த்துகிறார், என்னை வழி நடத்துகிறார். அவன் தொடர்ந்து ''என்னால் அப்படி ஓட்ட முடியாது. நான் உங்களை போல சிறந்த சைக்கிள் ஓட்டுகிறவனல்ல. ஆனால் நீங்கள் எங்கே தவறு செய்தீர்கள் என காண்கிறேன். நீங்கள் கீழ் நோக்கிப் பார்த்து நிலை குலையாமல் இருக்கும்படி முயற்சிசெய்து கொண்டிருந்தீர்கள். அது தான் உங்களுக்கு பதற்றத்தை கொண்டு வந்தது. அதுவே நீங்கள் விழ காரணமாயிற்று. ஆகவே, நான் அங்கே ஏறி அவர்கள் என்னை தள்ளின போது, நான் அந்த சாலையின் முடிவையே கவனித்துக் கொண்டு நிலை குலையாமல் போனேன் என்றான்“, என்றார். இப்பொழுது வியாபாரிகளே? கீழ் நோக்கிப் பார்க்க வேண்டாம். உங்களுடைய வியாபாரத்தை பார்க்கும்போது நாளைக்கு விழுந்து விடுவதை போல் இருக்கலாம். அல்லது வேறொரு நாள் விழுந்துவிடக் கூடும். ஆனால் சாலையின் முடிவையே கவனித்துக் கொண்டிருங்கள்.அங்கே தான் உங்களுடைய பாலிஸியானது உங்களுடைய முதலீட்டு வருவாயை கொடுக்கப் போகிறது. 95இந்த வாலிபனோ ஆஸ்தியிலே பெருகிக் கொண்டே போனான். ஆனால் கடைசியாக, அவனுடைய முதலீட்டு வருவாயானது திரும்ப பலன் அளிக்கும் நாளானது வந்ததை காண்கிறோம். அவனுடைய பேராசை அதாவது அவனுடைய ஆஸ்தி பெருகினதால் புதிய களஞ்சியங்களை கட்ட வேண்டும் என்று அறிந்திருந்தான். ஓ, அவனுடைய வியாபாரம் பெருகிக் கொண்டே இருந்தது. அவன் சபையிலே அங்கத்தினராக இருந்தான். நீங்கள் அதற்கு 'அது சரிதான்“ ஆம் அது சரிதான் சகோதரனே என்று சொல்லலாம். அது சரிதான். அவன் ஒரு சபையிலே அங்கத்தினராக இருந்தார்.மற்றும் அவன் ஒரு இரவிலே... ஆவியிலே எளிமையுள்ள ஒரு மனிதன் இருந்தான். நாம் பணத்திலே மிக எளிமையாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஆவியிலே எளிமை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். மத்தேயு 5-ம் அதிகாரத்தில் இயேசு இவ்விதமாக ''ஆவியில் எளிமையுள்ளவன் பாக்கியவான் ஏனெனில் இந்த இராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது“, என்று சொன்னார். ஸ்தாபனத்தைக் குறித்து அல்ல. மேலும் அவனுடைய வாசல் அருகே ஆவியில் எளிமையுள்ளவன் ஒருவன் இருந்தான். அவன் அவனுக்கு கொஞ்சம் துணிக்கைகளை கொடுத்தான். இன்னொரு வார்த்தையிலே சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் கடந்து போகும் போது, அவன் ஒருவேளை அவர்கள் கொண்டிருந்ததான காணிக்கை பெட்டியிலே ஏதாவது ஒன்றை கொடுத்திருப்பான்.அல்லது அவன் ஒருவேளை ''அவர்கள் எல்லாரும் அருமையான மக்கள் தான் என்று நீங்கள் அறிவீர்கள். நான் அவர்களுக்கு எதிரியானவன் அல்ல. நான் எப்பொழுதாவது ஒருமுறை அவர்களுடைய காலை கூட்டங்களிலே கலந்து கொள்வதுண்டு“ என்று சொல்லியிருக்கலாம். உடனே சில துணிக்கைகளை கொடுப்பீர்கள். அவ்வளவு தான். ''ஓ ஆம், என்னுடைய மனைவி தான் அந்த கூட்டத்தை சேர்ந்தவள். ஆனால் பாருங்கள் நான் என்னுடைய சக பணியாளர்களோடு வியாபாரத்தில் வகிக்கும் ஸ்தானத்தையே நேசிக்கிறேன்“ என்று சொல்லி அந்த துணிக்கைகள் முழுவதையும் கொடுப்பான். 96லாசரு ஆவியிலே எளிமையுள்ளவனாக இருந்தான். அவனைப் பார்த்துக்கொள்வதற்கு அவனிடம் போதுமான அளவு மருந்து இல்லாததினால் நாய்கள் அவனுடைய பருக்களை நக்கும்படி கிடந்தன. ஆனால் ஒரு இரவிலே அவர்கள் இருவருமே மரித்தனர். அவர்கள் மரித்தபோது, வேதம் இவ்விதமாக கூறுகிறது. ஆவியில் எளிமையாய் இருந்த அவன், தூதர்களால் மரியாதையுடன் ஆபிரகாமுடைய மடியண்டையில் கொண்டு போகப்பட்டான். இவன் அந்த முதலீட்டை செய்தவன். அவனுடைய நித்திய ஜீவனுக்கான முதலீட்டை அவன் அவர் மேல் செய்திருந்தான். அவன் இந்த உலகத்திலே கொண்டிருந்ததை கொண்டு அவனுடைய ஜீவியத்தை நடத்தவில்லை. அவனுக்கு எந்த பேர் புகழும் இல்லை.அவன் வாசலிலே கிடந்த பிச்சைக்காரனாக இருந்தான். அவனுக்கு ஒன்றும் இல்லாதிருந்தது. அவனுக்கு பணம் இல்லை. அவன் ஒன்றையும் கொண்டிருக்கவில்லை. அவனுக்கு எந்த நண்பர்களும் இல்லை. ஆனாலும் அவன் ஒரு விசுவாசியாக இருந்தான். அவன் தன்னுடைய முதலீட்டை செய்திருந்தான். அவனுடைய பருக்களை நாய்கள் நக்கிக் கொண்டிருக்க தெருவிலே மரித்தான். அவன் தூதர்களால் ஆபிரகாமின் மடிக்கு கொண்டு போகப்பட்டான் என்று வேதம் கூறுகிறது. 97அதே இரவிலே அந்த ஐஸ்வரியவனான பெரிய அதிபதியும் மரித்தான். அவன் மிகவும் செழிப்புள்ள ஜீவியத்தை ஜீவித்தான். அவனுடைய லாபபங்கிலிருந்து அவனுக்கு சேர வேண்டியது அவனுக்கு செலுத்தப்பட்டிருந்தது. எப்படியெனில், அவனை அடக்கம் செய்ய அங்கே சில புத்திசாலி பிரசங்கி வந்து அவருடைய சட்டை காலரை மேலேபோட்டு, ஒருவேளை அவருடைய ஆசாரியனின் உடையை உடுத்தி வந்திருப்பார். அவர்கள் கொடியை அரைகம்பு மேலே ஏற்றி, இந்த நடன அரங்கம் முழுவதும் நிரப்புகிற அளவிற்கு பூக்களை கொண்டிருக்கலாம். அவர்கள் ''ஓ, நாம் இதை செய்வது எப்பேற்பட்ட மகத்தானதய் இருக்கிறது, ஏனெனில் அவனுடைய வியாபாரமும் அவர் செய்தவைகளும் மிக மகத்தானதாயிருந்தது அல்லவா“ என்று சொல்லியிருப்பார்கள். ஒருவேளை அந்த வங்கியின் கழகத்திலிருந்து அவர்களுடைய மேலாளர் வந்திருக்கலாம். மற்றும் அது போன்றவர்கள் வந்திருக்கலாம். மற்றும் அவனுடைய சவபெட்டியை தூக்கிச் செல்லும்படி பாதுகாவலர்கள் அங்கே இருந்திருக்கலாம். அப்போது அந்த புத்திசாலி பிரசங்கி எழும்பி நின்று,''நம்முடைய விலையேறப் பெற்ற சகோதரன், எத்தனை முறை விதவைகளுக்காக காசோலையை எழுதியிருக்கிறார். எத்தனை முறை நம்முடைய மகத்தான ஸ்தாபனத்திற்கும் நம்முடைய திட்டங்களுக்கும் பண உதவி செலுத்தியிருக்கிறார்“ என்றார். ஒருவேளை வியாபாரிகள் எழுந்து பேசியிருக்கலாம். பாருங்கள், இது அவனுடைய வெகுமதியாய் இருக்கிறது. அது சரிதான். அவனுடைய முதலீடு வருவாய் அவனுக்கு இவ்விதமாக திரும்ப அளித்தது. அவன் உலகத்திற்கு ஒரு பெரிய மனிதனாக இருக்கலாம். ஆனால் அவன் இயேசு கொடுத்த அந்த முதலீட்டை தள்ளி போட்டதினாலே,''அவன் பாதாளத்திலிருந்து அவன் கண்களை ஏறெடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்” என்று வேதம் கூறுகிறது. அங்கிருந்து அவன் ஆபிரகாம் மடியிலே பாதுகாப்பாய் சௌகரியமாய் அருமையாய் சுற்றி நடந்துக் கொண்டிருந்த அந்த முதலீடு செய்த அந்த மனிதனைக கண்டான். உடனே அவன் கதறினான். இப்பொழுது கவனியுங்கள். அவன் கிறிஸ்தவனா என்று நீங்கள் கேட்கலாம்? ஆம். அவன் ''தகப்பனாகிய ஆபிரகாமே“ என்றான்.அவன் ஒரு யூதன். அவன் அவரிடத்தில் 'நீர் அந்த முதலீட்டை செய்து அந்த ஆவியில் எளிமையுள்ள லாசருவை அனுப்பும்படி வேண்டுகிறேன். நான் அதை தள்ளிப் போட்டிருந்தேன். ஆனால் லாசருவை கொஞ்சம் தண்ணீரோடு அனுப்பும், இந்த நெருப்பு என்னை வேதனைப்படுத்துகிறது” என்றான். அதற்கு அவர், 'மகனே, உனக்கு அந்த தருணம் கொடுக்கப்பட்டது“ என்று கூறினார். அவனுக்கும் நிச்சயமாகவே கொடுக்கப்பட்டது. ''நீ கொண்டிருக்கிறதை விற்று, உன்னுடைய முதலீட்டை இதிலே செய்து உன் சிலுவையை எடுத்து என்னைப் பின்பற்றி வா“ என்று இயேசு சொன்னார்;. அது அவனுக்கு மிக அதிகமாய் இருந்தது. தொடர்ந்து அவர், ''இப்பொழுது லாசருவோ சௌகரியமாயிருக்கிறான். நீயோ வேதனைப்படுகிறாய். இவை எல்லாவற்றிற்கு மேல், உனக்கும் அவனுக்குமிடையே பெரிய பிளவு இருக்கிறது ஒருவனும் இதைக் கடந்து போனதுமில்லை. இனிமேலும் போகப் போவதுமில்லை” என்றார். 98இது, மரித்தபின் தன்னுடைய பாவ பரிகாரத்தைச் செய்ய தற்காலிக இடம் இருக்கிறது என்று சொல்லுகிற உபதேசம் எல்லாவற்றையும் அடித்து துண்டு துண்டாக்கும். ஏனெனில் அதைச் சொன்னது இயேசுகிறிஸ்துவே. ஐயா, என்னுடைய விலையேறப்பெற்ற, வழி தவறின என் சகோதரனே, கிறிஸ்துவில இருந்து வழி விலகினவனே, நீங்கள் அதிக நாட்கள் காக்க வேண்டாம். இந்த முதலீட்டைச் செய்ய இனி அதிக நாட்கள் காக்க வேண்டாம். வேறொரு நாளில் செய்கிறேனென்று உன்னுடைய உள்நோக்கத்தில் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த பழைய தெற்கத்திய பழமொழி சொல்லுகிறதைப் போல 'பாதாளத்திற்கு வழி நடத்துகிற நல்ல உள்நோக்கங்களும் உண்டு“. ஆகவே, உங்களுடைய உள்ளான நோக்கங்கள் எல்லாம் உங்களுக்கு அதைச் செய்யாது. நீங்கள் குப்பியிலிருக்கும் மருந்துக் குறிப்பை வாசித்து அதன் பின் உங்களுக்கு அது பலன் கொடுக்கும்படி அந்த மருந்தை உபயோகிக்க வேண்டும். உங்களுடைய முதலீட்டைசெய்து, அதன்பின் அவருடைய இரத்தத்தினாலே உங்களுடைய இருதயங்களிலே உங்களுடைய பெயரை கையெழுத்திடுங்கள். அவனை பாருங்கள். நரகத்தில் இருந்து கண்களை ஏறெடுத்து பார்த்தான். அது அவனுக்கு கிடைத்த பலன். 99பிறகு அவன், 'அப்படியானால் தகப்பனாகிய ஆபிரகாமே உம்மால் இதை செய்ய முடியவில்லையென்றாலும் என்னுடைய சக பணியாளர்களையும் விட்டு விடாதேயும். பூமியிலே நான் செய்த என்னுடைய முதலீட்டின் மூலம் நான் சேகரித்த சொத்துக்கள் எல்லாம் அங்கே இருக்கிறது. நான் செய்த அதே தவறை அவர்கள் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு சொல்லுங்கள்“ என்றான். இந்த காலை வேளையிலே, என்னுடைய யூத நண்பன் அல்லது புறஜாதி நண்பனே, அது நீயாக இருக்கக் கூடாதா? நீங்கள் அந்த பகுத்தறிவற்றவனைப் போல இருக்க வேண்டாம். ''ஓ, அவனை அங்கே அனுப்பும், இந்த செய்தியானது அவர்களை சென்றடையட்டும்“ என்றான். அவன் இப்பொழுதோ ஊழியக்காரனாக இருக்க விரும்பினான். அதை ஏற்றுக்கொள்ள விரும்பினான். ஆனால் அது மிகவும் கால தாமதமாகிவிட்டது. இப்பொழுது அவனால் அதை செய்ய முடியாது. அவனுடைய முதலீட்டை செய்ய அவனுக்கு தருணம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் அதை அப்போது செய்யவில்லை. அதற்கு ஆபிரகாம், ''அவர்களுக்கு தீர்க்கதரிசிகள் உண்டு மற்றும் வார்த்தை என்ன சொன்னதோ அதைப் பெற்றிருக்கிறார்கள். நியாயபிரமாணங்களை கொண்டிருக்கிறார்கள்“ என்றார். ''ஆம், சரிதான், ஆனால் மரித்தோரிலிருந்து ஒருவன் எழும்பி, அவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்று நிரூபித்தால், அவர்கள் அப்போது விசுவாசிப்பார்கள்“ என்றான். அதற்கு அவர், ''மரித்தோரில் இருந்து ஒருவன் எழுந்தாலும் அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள்“ என்றார். 100இப்பொழுது அந்தக் காட்சியானது கடந்து போய் இரண்டாயிரம் வருடங்கள் ஆனது. இந்த 1963-ம் வருடத்திலே, இந்த காலை வேளையிலும் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்பதை நிரூபிக்கும்படி ஒருவர் நம் மத்தியில இருக்கிறார். அவருக்குள் இருந்த அதே ஜீவனே சபைக்குள்ளுமிருந்து அவருடைய வார்த்தையை நிறைவேற்றும்படி அதே காரியத்தை செய்து வருகிறது. என் சகோதரனே, என் சகோதரியே, இந்த காலை வேளையிலே நீ அந்த முதலீட்டை செய்யமாட்டாயா? உன்னுடைய ஜீவியத்தை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடு. நம்முடைய தலையை பயபக்தியுடன் தாழ்த்தலாம். இந்த வார்த்தைகள் வீணாக போக வேண்டாம். ''நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்“ நீங்கள் பிறந்தேயாக வேண்டும். நீங்கள் கூச்சலிட வேண்டும், சத்தம் போட வேண்டும், அன்னிய பாஷையிலே பேச வேண்டும் என்பதை குறித்துப் பேசவில்லை. நீங்கள் உண்மையிலே உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாவங்களை அறிக்கையிட்டு, மறுபடியும் பிறக்க வேண்டுமென்பதைப் பற்றியே பேசுகிறேன். உன்னால் எப்பொழுதுமே அதை செய்ய முடியவில்லை. நீ எப்பொழுதுமே உன்னுடைய ஸ்தாபனத்தையே பிடித்து கொண்டிருக்கிறாய். அவர்கள் வார்த்தைக்கு முரண்பாடாய் இருக்கிறார்களென்று நீ அறிந்திருந்தும், இன்னும் உன்னுடைய சுய எண்ணத்தின் நிமித்தம், உன்னுடைய பெருமைக்காக, உன்னுடைய புகழுக்காக, நீ அந்த பெரிய சபையிலே தரித்திருக்கிறாய். அங்கே தெரு முனையிலே இருக்கும் சுவிசேஷ குழுவோடு எந்த சம்பந்தமும் கொண்டிருக்க விருப்பமில்லை. பாருங்கள், உன்னுடைய உள்ளம் எங்கேயோ அங்கேதான் உன்னுடைய பொக்கிஷமுமிருக்கும். 101ஓ, வியாபாரிகளே, இந்த காலையிலே, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாக (agent) இதை உங்களுக்குக் கொடுக்கிறேன். நித்திய ஜீவனையும், நித்திய ஜீவனின் பாலிசியையும் கொடுக்கிறேன். ஏனெனில் நான் உலக காரியத்திற்கு மரித்து, என்னுடைய மேம்பட்ட எஜமானனாகிய என் தேவனாகிய கிறிஸ்துவுக்குள் மாத்திரமே ஜீவிக்கிறேன். பவுல் மோசேயைப் போல் நாமும் நம்முடைய சொந்த சிந்தையை உபயோகிக்காமல் அவருடைய சிந்தை வரும்படியாக அப்படியே விட்டுவிட்டால் நாமும் சிறைக் கைதிகளாயிருப்போம். யார் என்ன சொன்னாலும் அதைக் குறித்து அக்கரையிராது. ஏனெனில் நீங்கள் வார்த்தைக்கு சிறைக்- கைதிகளாயிருப்பீர்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களை வழிநடத்துவாராக. அவர் உங்களை சில இடங்களுக்கு போகக் கூடாதபடி உங்களை தடைத் செய்வார். அவர் தடைகளைக் கொண்டு வந்து,உங்களை இங்கே கொண்டு வருவார். நீ போகாத இடத்திற்கு உன்னை போகும்படி அனுப்பி, நீ வழக்கமாக போகிற இடங்களுக்கு போககூடாதபடி அதிலிருந்து உன்னை தூரம் தள்ளி வைப்பார். உனக்கு அந்த பாலிஸி வேண்டுமா? நீ முதலீட்டை செய்ய விரும்புகிறாயா? இப்பொழுது மெதொடிஸ்டு மற்றும் அனேக பெந்தெகொஸ்தே மக்களும் அழைப்பு கொடுக்கிறதைப் போல பலிபீட அழைப்பு கொடுப்பதற்கு நமக்கு இங்கு இடமில்லை. ஆனால் நீங்கள் எங்கே அமர்ந்திருக்கிறீர்களோ, அதுவே உங்களுடைய பலிபீடமாக இருக்கிறது. ''விசுவாசித்தவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேரும் ஞானஸ்நானம் பெற்றனர்“ என்று வேதத்திலே சொல்லுகிறது. நீ தவறு செய்தாய் என்று அறிந்து அதை அறிக்கை செய்ய விரும்புவாயா? இந்த பாலிஸிகளில் ஒன்றை எடுத்துக் கொள்வாயா‚ அதை நீ வாஞ்சிப்பாயா‚ நான் ''பாலிஸிகள்” என்று சொல்லும் போது அது கேட்பதற்கு உங்களுக்கு அவபக்தியாக இருக்கவேண்டாம். நான் வெறும் என்னுடைய பொருளுக்காக இந்த சொற்களை கூறுகிறேன். உங்களுக்கு நித்திய ஜீவன் வேண்டுமா? நீ இயேசு கிறிஸ்துவுக்குள் உன்னுடைய ஜீவனை முதலீடு செய்ய விரும்புகிறாயா? இப்போது அது உங்களுக்கு வேண்டுமென்றால், அதை தீவிரமாக சிந்தித்துப் பாருங்கள். 102இப்பொழுது விஞ்ஞானத்தின்படி புவியீர்ப்பு சக்தியானது உங்களுடைய கரங்களை கீழேயே வைக்கும். ஆனால் உங்களுக்குள்ளாக இருக்கும் ஜீவனைக் கொண்டு புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து உங்கள் கரங்களை உயர்த்த முடியும். அந்த ஐஸ்வரியவானான வாலிப தலைவன் சொன்னது போல, இந்த காலை வேளையிலே, உங்களுக்குளிருக்கும் ஜீவனானது, 'நான்ஒரு நல்ல மனிதனாக அல்லது ஒரு நல்ல ஸ்திரீயாக இருக்கிறேன். இருந்தாலும் அந்த பாலிஸியை நான் கொண்டிருக்கவில்லை. அதை குறித்து நிச்சயமுடையவனாக இருக்கிறேன். எப்படியாயினும் அதை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்“ என்று சொல்லுங்கள். மேலும் இங்கு பிரசன்னமாயிருக்கும் சிருஷ்டிகர் தாமே, அவர் இப்பொழுது பேசிக் கொண்டு உங்கள் இருதயத்தை அறிந்தவருமாய் இருக்கிறார். மற்றும் அவர் சரியாக இப்பொழுதே உங்களுடைய பெயரைச் சொல்ல முடியும் என்று அறிந்திருக்கிறீர்கள். அதை உங்களுக்கு செய்து வருகிறார். ''அதன் பிறகு ஆண்டவரே, இந்த காலை வேளையிலே நீர் இந்த தருணத்தை எனக்குக் கொடுக்கிறதினால் நான் என்னுடைய கரங்களை உமக்கு உயர்த்துகிறேன். என்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே. இந்த காலை வேளையிலே நான் காய்ந்து போன ஒரு பரிசேயனாக, வெறுமையானவனாக, இந்த நடன அரங்கத்தை விட்டு கடந்து போக மாட்டேன். நான் உம்முடைய திட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன். உம்முடைய ஜீவனை எனக்குள் ஏற்றுக் கொள்கிறேன். நான் என்னுடைய ஜீவியத்தை விட்டுவிடுகிறேன். உம்முடைய வார்த்தைக்கு சிறை கைதியாக மாறுவேன். 'எனக்காக ஜெபியுங்கள் சகோதரன் பிரான்ஹாம். நான் என்னுடைய கரங்களை உயர்த்தி தேவனுக்கு காட்டுகிறேன். சகோதரன் பிரான்ஹாம் அவர்களே உமக்கு அல்ல.இங்கு இருக்கும் தேவனுக்கே காட்டுகிறேன். எனக்கு இந்த முதலீடு தேவை. 103இப்பொழுது நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? ஒவ்வொரு தலையும் தாழ்த்தியிருக்கட்டும். ஒவ்வொரு கண்ணும் மூடியிருக்கட்டும். மக்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் யாராக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. நான் ஊழியக்காரர்கள் கரங்களை பார்க்கிறேன். அது சரிதான். நேர்மையாய் இருங்கள். பாருங்கள் ஊழியக்காரர்கள் இதற்கு விலக்கப்பட்டவர்கள் அல்ல. வெளிப்படையாய் சொன்னால், அவர்கள் தான் முதலாவது வர வேண்டியவர்கள். ஏனெனில் அவர்கள் மேய்ப்பர்கள். அவர்களே வழி நடத்துவது போல்முதலில் வர வேண்டும். நல்லது, நான் ஜெபிப்பதற்கு முன்பாக இன்னும் யாராவது ஒருவர் இருக்கிறீர்களா? ஆம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. பால்கனியில் இருக்கிறவர்களை தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆம், நீங்கள் எங்கே இருந்தாலும் சரி, அவர் உங்களுடைய கரங்களை பார்க்கிறார். இப்பொழுது உத்தமமாயிருங்கள். நீங்கள் உங்களுடைய கரங்களை கீழே கொண்டிருப்பீர்களென்றால். நீங்களே அந்த தீர்மானத்தை இப்பொழுது எடுத்திருக்கிறீர்கள். இப்பொழுது, மாம்சத்திலே பிரத்தியட்சமாகி, பரிசுத்த ஆவியின் ரூபத்திலே நமக்கு மறுபடியும் கொடுத்த இந்த மகத்தான தேவனை ஜெபித்து கேட்கப்போகிறேன். அவர் தாமே உங்களுடைய உள்ளத்திற்குள் வந்து, உங்களுடைய கேள்விக்கான பதிலைஇனி மேல் இல்லாதபடி தீர்த்து, உங்களுடைய வாழ்க்கை புத்தகம் முழுவதும் ''மன்னிக்கப்பட்டாய்“என்று எழுதி, உன்னுடைய பெயரை அந்த ஜீவ புத்தகத்திலே போட்டு உனக்கு நித்திய ஜீவனையும்உயிர்த்தெழுதலின் நிச்சயத்தையும் கொடுப்பாராக. அப்போது மாத்திரமே கிறிஸ்து உனக்குள் உயிர்த்தெழுவார். இந்த வாரம் முழுவதிலும் நடந்த கூட்டங்களிலே நீங்கள் அந்த 'ஒருவர்” கிரியை செய்து நிரூபித்ததை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் மரித்தோரை எழுப்பினார்,வியாதியஸ்தரை சுகப்படுத்தினார், இருதயத்தின் இரகசியத்தை அறிந்தார், நடக்க இருக்கும்காரியம் எல்லாவற்றையும் கச்சிதமாக சொன்னார். அவர் சொன்ன யாவும் நடந்தேறின. வருடா வருடமாக நடந்து வருகிறது. அது ஒருமுறை கூட தோல்வியடைந்தது இல்லை. அது அவருடைய வார்த்தையாக இருக்கிறது. 'வானமும் பூமியும் ஒழிந்து போகும் ஆனால் என்னுடைய வார்த்தையோ விழுந்து போகாது“ என்று இயேசு சொன்னார். ஆகையால் அது தோல்வியடைவதில்லை. அது தான் இந்த காலத்திற்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்iதாயிருக்கிறது. 104பரலோகப் பிதாவே, இப்பொழுது மாலை நேரமானது வந்திருக்கிறது. நீர் தாமே ஏதேன் தோட்டத்திலிருந்து வந்த ஜீவ விருட்சம் என்று வேதம் குறிப்பிடுகிறதை நாங்கள் அறிவோம். மற்றும் சேராபீன்கள் வீசிக் கொண்டிருக்கிற சுடரொளிப்பட்டயத்தைக் கொண்டு அந்த விருட்சத்தை காவல் காத்தார்கள் என்று அறிவோம். ஏனெனில் மனிதன் அந்த விருட்சத்தை எப்பொழுதாவது தொட்டு அதிலிருந்து புசித்து அவன் என்றென்றைக்கும் ஜீவிப்பான் என்பதினால் நீர் அப்படி செய்தீர். நீரே அந்த விருட்சத்தை காவல் காத்தீர். ஆனால் இப்பொழுதோ அதே சுடரொளி பட்டயமானது அதாவது தேவனுடைய வார்த்தையானது, மக்களை திரும்பவுமாக அந்த விருட்சத்தண்டை மேய்த்து நடத்திக் கொண்டு போகிறது. அந்த ஜீவ விருட்சமானது மிகஅழகாக இந்த பூமியின் மேல் வந்து ஒரு தொழுவத்திலேபிறந்து, கால் நடைகள் வைத்திருக்கும் தொழுவத்திலே ஆடுகள் குட்டி போடுவதற்காக அங்கே படுத்துக் கிடந்த இடத்திலே, ஒரு குழந்தை வடிவிலே சின்ன யேகோவா அழுது கொண்டிருந்தார். ஓ, அது ஒவ்வொரு புருஷனுடைய இருதயத்தையும், ஸ்திரீயினுடைய இருதயத்தையும் சிலிர்க்க வைக்கிற காரியமாக இருக்கவேண்டும். அதன் பிறகு உலகத்தின் பாவத்திற்காக யெகோவா சிலுவையிலே மரித்தார். அவர் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்அதைச் செய்தார். அவருடைய கிருபையே அவரை நெருக்கி ஏவியது. 'தேவன் இவ்வளவாய் உலகத்தை அன்பு கூர்ந்தார்“. அவருடைய அன்பானது அவரை வற்புறுத்தியது. ஏனெனில் அவர் இரட்சகர் என்று அவருடைய குணாலட்சணத்தை இந்த மனுகுலத்திற்கு காட்ட வேண்டியதாயிருந்தது. இதற்கு அவர்கள் முதலாவது இழக்கப்பட வேண்டும். ஆனால்அவர் எல்லாவற்றையும் பரிபூரணமாய் செய்ததினால் எதுவுமே இழக்கப்படவில்லை. ஆகவே தான் சாத்தான் உள்ளே கொண்டு வரப்பட்டான். அவர்கள் வைக்கப்பட்ட அந்த சுய விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் தெரிந்து கொள்ளும் நிலையைக் கொண்டு, அவர் பரிபூரணமாய் செய்ததை அவன் தாறுமாறாக்கினான். அதன் பிறகு அவர் மீட்க வேண்டியதாயிருந்தது. அதை அவ்விதம் செய்தார். 105ஓ நித்திய தேவனே, நீர் இரக்கமாய் இறங்கி வந்து இங்கு இருக்கிற ஒவ்வொரு இருதயத்தோடும் பேசும். இப்பொழுது இங்கே கரத்தை உயர்த்துகிறதான இவர்களில் சிலர் ஒருவேளை நான் கேட்டபோது அவர்களுக்கு உண்மையான உணர்த்துதலில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தாமே, தங்களுடைய சொந்த ஜீவியத்தின் இரத்தத்தினாலே, இந்நாள் முதற்கொண்டு இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் எங்களுடைய முழு ஜீவியத்தையும் அதிலே முதலீடு செய்கிறோம் என்று கையெழுத்திடுவார்களாக. மேலும் அந்த மகத்தான விருட்சம் அதாவது அந்த மகத்தான ஜீவ விருட்சம் அவர், பூமியின் மேல் வந்தபோது, அவர்கள் அந்த விருட்சத்தை ரோம ஈட்டியினாலே நறுக்கி ஒரு சபிக்கப்பட்ட கொடூரமான விருட்சமாகிய ரோம மரத்திலே தொங்கவிட்டார்கள். ஆனால் அதிலிருந்து தான் அவர் மணவாட்டி மரத்தை மீட்டார். அவரைப் போலவே இருந்த மணவாட்டி மரத்தை அது ஏதேன் தோட்டத்தில் இருந்த ஏவாள் மரத்தைப் போலிருக்கிறது. அது ஆதியிலே விழுந்துபோன ஏவாள் மரமாயிருக்கிறது. அங்கே ஆதாம் அவளோடு கூட தோட்டத்தை விட்டு வெளியிலே நடந்துபோனான். இப்பொழுது இரண்டாவது ஆதாமோ, அவருடைய கண்கள் திறந்திருக்கிறதென்று அறிந்தவராய் வந்து அவருடைய ஏவாளை பெற்றுக் கொள்கிறார். 106ஆண்டவரே, ''அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தை போல் இருப்பான்“ என்று தீர்க்கதரிசி தாவீது சொன்ன வண்ணமாக, இந்த கடைசி நாட்களிலே ஜீவ தண்ணீரானது மணவாட்டி மரத்தின் மேல் பாய்ச்சப்படும்படி அருள்வீராக. இதோ ஸ்தாபன கிளைகளெல்லாம் தோட்டக்காரனினாலே கிளை நறுக்கப்பட்டிருக்கிறது. மற்றும் இப்பொழுது தேவ ஆவியானவர் இன்னொரு விசை மரத்தின் உச்சியிலே ஜீவித்துக் கொண்டிருக்கிறார். இது அந்த மரத்தின் மையத்திலிருந்து அதாவது வார்த்தையிலிருந்து வந்ததாயிருக்கிறது. இதை அருளும் ஆண்டவரே. அவர்கள் தாமே இன்னும் மிகுந்த கனியை கொண்டு வருவார்களாக. அவர்களுடைய நிலையானது, லாசருவைப் போல் இருக்குமானால், அவன் இந்த பூமியிலே எந்த நிலையை எடுத்துக் கொண்டானோ அதே விதமாகவே ''எங்களுடைய பொக்கிஷமும் பரத்திலே இருக்கிறது. இப்பூமியில் அல்ல“ என்றுஅறிந்து கொண்டவர்களாய் இருக்கட்டும். ஆண்டவரே, இங்கிருக்கிற வியாபார புருஷர்களையும்வியாபார ஸ்திரீகளையும், மற்றும் அக்கரையுள்ள யாவரையும் ஆசீர்வதியும். இந்த செய்திக்குப்பின் இவர்களை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். நீர் இவைகளை எங்களுக்கு தருவீறென்றுவாக்கு கொடுத்திருக்கிறீர் ஆண்டவரே. உம்முடைய ஊழியக்காரனாகிய நான் அவர்களை உம்மிடத்தில்ஒப்புக்கொடுக்கிறேன். மேலும் நீர், 'என் பிதா இழுக்காவிட்டால் ஒருவனும் என்னிடத்தில்வரான்“ என்று சொன்னீர். ஆண்டவரே இங்கே இவர்கள் கைகளை உயர்த்தியிருக்கிறார்கள். இவர்களை இக்காலை வேளையின் செய்தியின் மூலம் அதாவது உம்முடைய வார்த்தையின் மூலம் கிடைத்த அன்பின் பரிசுகளாக உமக்கு கொடுக்கிறேன். ஆண்டவரே, நீர் அவர்களை அந்த நாள் மட்டும் காத்தருளும்.'அவர்களை உம்முடைய கரத்திலிருந்து எந்த மனிதனும் பிடுங்க முடியாது. மற்றும் அவனை கடைசிநாளிலே எழுப்புவேன் என்று சொன்னீர். அவர்கள் தாமே அந்த ஜீவனின் கிருமியை பெற்றுக்கொள்ளட்டும். ஏனெனில் உயிரூட்டப்பட்டவிதை மாத்திரமே முளைத்து மேலே வரும். அந்த வார்த்தை மாத்திரமே அது உயிரூட்டப்படாததால்மரிக்கிறது. எல்லா மனிதனுடைய வார்த்தையும் விழுந்து போம், அவை மரிக்கும் அது உயிரூட்டப்படாததால் மரிக்கிறது. ஆனால் நீர் 'என்னுடைய வார்த்தை“ அதாவது உம்முடைய வேதம் ஒருபோதும் விழுந்து போகாது என்று சொன்னீர். ஏனெனில் அது ஜீவனாயிருக்கிறது. இந்த காலை வேளையிலே அவர்கள் பெற்ற கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவனானது, வார்த்தையினாலே வளரும்படி அருள் செய்யும். உம்முடைய ஊழியக்காரனாகிய நான் என்னுடைய ஜெபத்தை உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவைகள் பதிலளிக்கப்படட்டும். ஆமென். 107கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. நேரம் தாமதமாகும்படி உங்களை இங்கே காக்க வைத்ததற்காக நான் வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள். இங்கே கைகளை உயர்த்தின யாவரும், நீங்கள் தேவ ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு நல்ல கிறிஸ்தவ சபைக்கு போவேன் என்று எனக்கு வாக்கு கொடுப்பீர்களா? மற்றும் நீங்கள் இதுவரை கிறிஸ்துவ ஞானஸ்நானம் எடுக்கவில்லை என்றால், இப்பொழுது எடுத்துக் கொள்வீர்களா?என் சகோதரனே, கிறிஸ்துவுக்காக உங்களுடைய நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் மறுபடியும் இந்த இரவு சந்திக்கும்வரை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது ஆராதனையை திரும்பவுமாக சகோதரன் கார்ல்சன் அவர்களிடத்தில் கொடுக்கலாம்.